கொரோனாவால் இப்படியொரு பிரச்சினை: பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. திடீரென அமலப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதார பாதிப்பு ஒருபுறமிருக்க, வீட்டுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கியதால், குடும்ப வன்முறை அதிகரித்ததுடன், மனநலப் பிரச்சினைகளுக்கும் ஆளாகினர். இந்த நிலையில், … Read more

குருதுவாரா மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருதுவாரா மீது நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இத்தாக்குதலில் குருதுவாராவின் முஸ்லீம் காவலர் ஒருவரும் சீக்கியர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தாலிபன் அரசு தெரிவித்திருந்த நிலையில், 50 பேர் கொல்லப்பட்டதாக தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே காபூலில் மீண்டும் இந்திய தூதரகத்தைத் திறக்கும் திட்டத்தை, இத்தாக்குதல் காரணமாக மத்திய அரசு கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   Source link

பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்த அப்பாஸ் ஆஸ்திரேலியாவில் உள்ளார்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்தஅவரது குழந்தை பருவ நண்பர்அப்பாஸ், தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந் துள்ளது. தனது தாயின் நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, வலைப்பதிவுஒன்றில் தனது குழந்தை பருவ நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்தார். அதில் குஜராத்தின் வத்நகரில் மண்ணால் கட்டப்பட்டசிறிய ஓட்டு வீட்டில் மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்ததாக தெரிவித்திருந்தார். அந்த சூழ்நிலையிலும், அருகில் உள்ள கிராமத்தில்வசித்த தனது தந்தையின் நண்பர்அகால மரணம் அடைந்தபோது, அவரது மகன் அப்பாஸ் என்பவரைதனது வீட்டுக்கு அழைத்து வந்துபடிக்க … Read more

பாக்., சிறையில் இருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலை| Dinamalar

கராச்சி,-பாகிஸ்தான் சிறையில் நான்கு ஆண்டுகளாக இருந்த, 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்கள் 20 பேரை, 2018 ஜூனில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்படை கைது செய்தது. இவர்கள், கராச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில், இவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, எதி அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பின் வாயிலாக, இவர்கள் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் ஒப்படைக்கப்படுகின்றனர். … Read more

ஆப்கனில் உள்ள ஹிந்துக்கள் இந்தியா வர மின்னணு விசா| Dinamalar

காபூல்-ஆப்கனில் உள்ள குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும், 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியா வர, மத்திய அரசு ‘விசா’ வழங்கி உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், சீக்கியர்களின் வழிபாட்டு தலமான, ‘கர்தே பர்வன்’ குருத்வாரா உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் காலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதைத்தொடர்ந்து, விரைந்து வந்த தலிபான் ராணுவத்தினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி … Read more

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு ஜூலையில் விமான சேவை துவக்கம்| Dinamalar

கொழும்பு,-‘யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு, அடுத்த மாதம் முதல் மீண்டும் விமான சேவை துவக்கப்படும்’ என, இலங்கை அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இலங்கைக்கு சுற்றுலா வழியாகவே, அதிக வருமானம் வந்தது. கொரோனா பரவல் காரணமாக, இலங்கையில் சுற்றுலாப் பயணியர் வரத்து குறைந்தது. நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு, இது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையே, இங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், ௨௦௧௯ல் இந்திய நிதியுதவியுடன் … Read more

அமெரிக்காவில் துவங்கியசீனிவாச கல்யாணங்கள்| Dinamalar

திருப்பதி–திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமெரிக்காவில் சீனிவாச கல்யாணங்கள் துவங்கின. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ், ஏழுமலையான் கல்யாண உற்சவங்களை நடத்தி வருகிறது. இவற்றை நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது.ஆனால் கொரோனா தொற்று கால கட்டத்தில் கல்யாண உற்சவங்கள் நடத்தப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தேவஸ்தானம் அமெரிக்காவின், 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு நேற்று துவங்கியது. ஜூலை 5ம் தேதி … Read more

பிரான்ஸ் தேர்தல்: அதிபருக்கு பெரும்பான்மை கிடைக்குமா?| Dinamalar

பாரிஸ்,-ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பார்லிமென்டுக்கு நடக்கும் தேர்தலில், அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் பதவிக்கு கடந்த ஏப்.,ல் நடந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வென்றார். தற்போது பார்லிமென்ட்டின் தேசிய அசெம்பிளிக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில், இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது.பார்லிமென்டில் மொத்தமுள்ள, 577 இடங்களில், பெரும்பான்மைக்கு, 289 இடங்கள் தேவை. இந்நிலையில், மேக்ரோனின் கூட்டணியான, ‘என்செம்பிள்’ அதிக இடங்களில் வெற்றி … Read more

சைக்கிளில் இருந்து விழுந்தஅமெரிக்க அதிபர் பைடன்| Dinamalar

வாஷிங்டன்,-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 79, சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ‘வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில் உள்ள கடற்கரை இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், அங்குள்ள சாலையில், தன் மனைவி ஜில் பைடனுடன், அவர் சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்தார். அப்போது, சாலையின் எதிரில் வந்தவர்கள் ஜோ பைடனை நோக்கி கையசைத்தனர். அவர்களிடம் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்த முயன்ற போது, ஜோ … Read more