பிரான்ஸ் தேர்தல்: அதிபருக்கு பெரும்பான்மை கிடைக்குமா?| Dinamalar

பாரிஸ்,-ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பார்லிமென்டுக்கு நடக்கும் தேர்தலில், அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் பதவிக்கு கடந்த ஏப்.,ல் நடந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வென்றார். தற்போது பார்லிமென்ட்டின் தேசிய அசெம்பிளிக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில், இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது.பார்லிமென்டில் மொத்தமுள்ள, 577 இடங்களில், பெரும்பான்மைக்கு, 289 இடங்கள் தேவை. இந்நிலையில், மேக்ரோனின் கூட்டணியான, ‘என்செம்பிள்’ அதிக இடங்களில் வெற்றி … Read more

சைக்கிளில் இருந்து விழுந்தஅமெரிக்க அதிபர் பைடன்| Dinamalar

வாஷிங்டன்,-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 79, சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ‘வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில் உள்ள கடற்கரை இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், அங்குள்ள சாலையில், தன் மனைவி ஜில் பைடனுடன், அவர் சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்தார். அப்போது, சாலையின் எதிரில் வந்தவர்கள் ஜோ பைடனை நோக்கி கையசைத்தனர். அவர்களிடம் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்த முயன்ற போது, ஜோ … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கவுள்ள நேட்டோ

மாட்ரிட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில், உக்ரைனுக்கு உதவி ஆயுத  தொகுப்பு வழங்கும் முடிவுக்கு அனுமதி வழங்கப்படும் என நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்  தெரிவித்துள்ளார். ஜெர்மன் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் எனவும், நேட்டோ அமைப்பால் வழங்கப்படும் உதவித்தொகுப்பு டான்பாஸ் பிராந்தியத்தை ரஷ்ய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உதவும் எனவும் கூறியுள்ளார். Source link

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுப்பதை நிறுத்த வேண்டும் : ரஷ்யாவிற்கு ஜெர்மனி பிரதமர் வலியுறுத்தல்

கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், உணவு தானிய ஏற்றுமதிக்கு பாதுகாப்பான வழித்தடத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான போக்குவரத்தை ரஷ்யா செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும்,  ரஷ்யா அந்த வழித்தடத்தை படையெடுப்பிற்கு பயன்படுத்த மாட்டோம் என நம்பகமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஓலப் ஷோல்ஸ் குறிப்பிட்டுள்ளார். Source … Read more

நைஜீரியா: லாசா காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு

லாகோஸ், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவ கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நடப்பு ஆண்டில் லாசா காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் இருந்து, 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, 4,939 … Read more

உக்ரைன் சென்றார் ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர்

நைட் அட் தி மியூசியம் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் ரஷ்ய படையெடுப்பால் சேதமடைந்துள்ள உக்ரைனின் லிவிவ் நகரை பார்வையிட்டார். ஐ.நா அகதிகள் முகமையின் தூதுவராக செயல்பட்டு வரும் பென் ஸ்டில்லர், உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து உக்ரைன் நாட்டின் லிவிவ் நகருக்கு அவர் சென்றார். Source link

ஜப்பானின் மத்திய பகுதியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா மாகாணத்தில் சுசு நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால், நில சரிவு அல்லது பொருட்கள் கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். … Read more

வேனும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து : குழந்தை உள்பட 7 பேர் பலி

நியூசிலாந்தில் வேனும், டிரக்கும் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ப்ளென்ஹெய்ம்  பிக்டன்  ஆகிய நகரங்களுக்கு இடையே குளிர்சாதன பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனும், வேனும் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த டிரக் ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  Source link

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டம் – எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் பல காரணங்களால் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என ஏற்கனவே எலான் … Read more

ரஷ்யா அழைத்து செல்லப்பட்ட சிறை பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் : உக்ரைன் அச்சம்

மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷ்ய படைகள் சிறை பிடித்துள்ளன. அவர்கள் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் குறித்து உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. Source link