டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டம் – எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் பல காரணங்களால் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என ஏற்கனவே எலான் … Read more

ரஷ்யா அழைத்து செல்லப்பட்ட சிறை பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் : உக்ரைன் அச்சம்

மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷ்ய படைகள் சிறை பிடித்துள்ளன. அவர்கள் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் குறித்து உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. Source link

5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுதலை..!

கராச்சி, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடல்சார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். அங்கு … Read more

உக்ரைனில் இருந்து உணவு தானிய ஏற்றுமதிக்கான பாதுகாப்பான வழித்தடத்தை ரஷியா உருவாக்க வேண்டும் – ஜெர்மனி கோரிக்கை

பெர்லின், உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் சண்டை தீவிரமடைந்து வருகிறது. அம்மாகாணத்தில் உள்ள செவ்ரொடோன்ஸ்க் நகரில் உச்சபட்ச சண்டை நீடித்து வருகிறது. போரில் செவ்ரொடோன்ஸ்க் நகரில் சண்டையிட ரஷியா அதிக அளவில் ரிசர்வ் படைகளை அனுப்பி வைத்துள்ளது. உக்ரைன் ரஷியா போரால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் உக்ரைனின் முக்கிய துறைமுகங்களை ரஷியா முடக்கியுள்ளதால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உணவு நெருக்கடி ஏற்பட காரணமான ரஷியா மீது ஜெர்மன் … Read more

Netflix The Chosen One: மெக்சிகோ வேன் விபத்தில் பிரபல நடிகர்கள் இருவர் பலி

நெட்ஃபிக்ஸ் வெப்சீரிஸ் தொடரில் நடித்த இரண்டு நடிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். நெட்ஃபிக்ஸ் தொடரான ​​`The Chosen One` வலைதளத் தொடரில் பணியாற்றி வந்த இருவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.  படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் விபத்து நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விபத்திற்கு உள்ளான வேன் சாண்டா ரோசாலியாவிலிருந்து உள்ளூர் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. பாஜா கலிபோர்னியா சுர் தீபகற்பத்தில் முலேஜ் அருகே அவர்களது வேன் விபத்துக்குள்ளானது. விபத்து ஜூன் 16 அன்று … Read more

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளிலிருந்து தடுமாறி விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இருகுறித்து அமெரிக்க ஊடகங்கள், ”அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை காலை டெலாவேர் மாகாணத்திலுள்ள உள்ள தனது கடற்கரை வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார். எனினும் உடனடியாக நான் நலமாக இருக்கிறேன் என்று அவர் எழுந்து கொண்டார். இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகம் : இரவு நேர வெப்பநிலையும் அதிகரிப்பு

ஸ்பெயினில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் வெப்பம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. தலைநகர் மாட்ரிட்டில்  நீரூற்றுகளில் நனைந்து விளையாடியும், மரங்களின் நிழலில் படுத்தும் அப்பகுதி மக்கள் வெப்பத்தை தணித்துக்கொண்டு வருகின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சூடான காற்றோட்டமே தீவிர வெப்பத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. Source link

அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அனுமதி

அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஃபைஸர், மாடர்னா கரோனா தடுப்பூசிகளை ஐந்து வயது, அதற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செலுத்த ( 6 மாத குழந்தைக்கு செலுத்தலாம்) அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை ஓப்புதழ் வழங்கியுள்ளது. அமெரிக்கா நோய் தடுப்புத் துறை தலைவர் ரோசெல் வாலென்ஸ்கி கூறும்போது, “லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆர்வமாக உள்ளது எங்களுக்கு தெரியும். அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் அவர்களின் … Read more

குருத்வாரா மீது பயங்கரவாத தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது, நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு … Read more

கடல் அலையில் சிக்கிய சறுக்கு வீரர்.. ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல் கொடுத்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடல் அலையில் சிக்கிய ஒற்றைப்படகில் பயணித்த வீரர், தனது ஆப்பிள் வாட்ச் மூலம் சமிக்ஞை கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சிட்னியின் பால்மோரல் எனும் இடத்தில், படகை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென வீசிய பலத்த காற்றில் அவர் சிக்கி கொண்டார். உடனே தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்துகால தகவல் கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டரில் விரைந்த சென்ற மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்த வீரரை பத்திரமாக மீட்டனர். … Read more