குருத்வாரா மீது பயங்கரவாத தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது, நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு … Read more

கடல் அலையில் சிக்கிய சறுக்கு வீரர்.. ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல் கொடுத்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடல் அலையில் சிக்கிய ஒற்றைப்படகில் பயணித்த வீரர், தனது ஆப்பிள் வாட்ச் மூலம் சமிக்ஞை கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சிட்னியின் பால்மோரல் எனும் இடத்தில், படகை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென வீசிய பலத்த காற்றில் அவர் சிக்கி கொண்டார். உடனே தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்துகால தகவல் கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டரில் விரைந்த சென்ற மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்த வீரரை பத்திரமாக மீட்டனர். … Read more

Moon: நிலாவில் தண்ணீர் – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அண்டை நாடான சீனா, கடந்த 2020 ஆம் ஆண்டு, ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது. இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு … Read more

தென் சீனாவில் கனமழை பெருவெள்ளம்.. முகாம்வாசிகளாக மாறிய மக்கள்..!

சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தால் தென் மாகாண நகரங்கள் நீரில் தத்தளிக்கின்றன. அடுத்து 24 மணி நேரத்திற்கு 7 மாகாணங்களில் கடுமையான புயல் மற்றும் கனமழை பெருவெள்ளம் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Guangxi Zhuang தன்னாட்சி மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகள், கடைகள் நீரில் மூழ்கின. மக்கள் வீடுகளை வீடுகளை காலி செய்து பாதுகாப்பு கருதி முகாம்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். Source link

Sri Lankan Crisis: அரசு அலுவலங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்படுகிறது: இலங்கை அரசு

கொழும்பு: எரிபொருள் இருப்புக்கள் விரைவாக குறைந்து வரும் நிலையில் இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாமல் திண்டாடுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகளை முடக்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கையில் நிலைமைகள் தொடர்ந்து மிகவும் மோசமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நாளை (2022, ஜூன் 20 திங்கட்கிழமை) முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்படும்.  கடந்த சில மாதங்களாக மோசமான பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட சிக்கல்களால் தொடர்ந்து தத்தளித்து வரும் இலங்கையில் கடுமையான … Read more

ஒரு மணி நேரத்தில் 3,182 முறை தண்டால் எடுத்து ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் சாதனை.!

ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 182 முறை தண்டால் போட்டு ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய தடகள வீரர் டேனியல் ஸ்கேலி செய்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. இதற்கு முன் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 54 முறை தண்டால் போட்டு சாதனை படைத்த சக ஆஸ்திரேலிய நாட்டவரை டேனியல் பின்னுக்கு தள்ளி புது சாதனை படைத்தார்.   Source … Read more

சைக்கிளில் இருந்து விழுந்த ஜோ பைடன்: வெள்ளை மாளிகை அறிக்கை!

அமெரிக்க அதிபர் ஜோபைன் டெல்வோயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அப்பகுதியில் அவர் தனது மனைவி உள்ளிட்டவர்களுடன் சைக்கிளிங் சென்றார். அதிபர் சைக்கிளிங் செல்கிறார் என்றதும் அவரை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூடியிருந்தனர். இதனைக் கண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார். அப்போது நிலை தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், உடனடியாக … Read more

ஆதரவாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய போது தவறி கீழே விழுந்த அதிபர் பைடன்..!

அமெரிக்காவில் டெலவர் கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்ற அதிபர் பைடன் கால் இடறி கீழே விழுந்தார். வாரயிறுதி விடுமுறையை கொண்டாட ரெகபோத் கடற்கரை சாலையில் அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றார். ஆதரவாளர்கள் மற்றும்  செய்தியாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். கால் மூட்டு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. Source link

தீ பற்றி எரியும் கட்டடத்தினுள் மீட்பு பணிக்கு சென்ற வீரர் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு..!

அமெரிக்கா பிலடெல்பயா நகரில் தீ எரியும் கட்டடத்தினுள் மீட்பு பணிக்கு சென்ற வீரர், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். தீ எரிந்து கொண்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தில் மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்ட நிலையில், கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டட விபத்தில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஈடிபாடுகளுக்குள் சிக்கி சடலமாக கிடந்த வீரர் சீன் வில்லியம்சனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  Source link

ஆப்கன் முன்னாள் டிவி நிருபர் வீதியில் சமோசா விற்கும் அவலம்| Dinamalar

காபூல்: ஆப்கனில் பல ‘டிவி’ நிறுவனங்களில் தொகுப்பாளராகவும், செய்தியாளராகவும் பணியாற்றியவர், இன்று வீதியில் அமர்ந்து சமோசா விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில், கடந்த ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்தது முதல், பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து, விலைவாசி உயர்ந்துள்ளது. பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை தலிபான்கள் களையெடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான், மூசா முகமது. … Read more