உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்கா ஆயுத உதவி.. ஏவுகணைகளை வழங்க முடிவு..!

அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள், உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பழைய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளன. உக்ரைன் வசம் 60 மைல் தூரம் சென்று தாக்கும் நெப்டியூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் குறைந்த அளவே உள்ள நிலையில், டென்மார்க் அரசு பழைய ஹார்பூன் ரக லாஞ்சரை வழங்க முன்வந்துள்ளது. டிரக்குகளில் இருந்து ஏவும் வகையிலான பிளாக் 1 ஹார்பூன் ஏவுகணை 70 மைல் தூரம் … Read more

யோகா பயிற்சி: சீனர்கள் ஆர்வம்| Dinamalar

பீஜிங்:உலக யோகா தினத்தை முன்னிட்டு, சீனாவில் நடந்த யோகா பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.உலக யோகா தினம் வரும் 21ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு, உலகின் பல்வேறு நாடுகளும் தயாராகி வருகின்றன.நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில், நேற்று யோகா பயிற்சி முகாமை இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், துணை துாதர் அக்யுனோ விமல் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.உலக நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து … Read more

சீனாவின் சினோபெக் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் தீ விபத்து.. ஒருவர் பலி..!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள எத்திலின் கிளைக்கால் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஜின்ஷான் மற்றும் Fengxian பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். Source link

நிலவில் தண்ணீர்: சீனா உறுதி| Dinamalar

பீஜிங்:நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.நம் அண்டை நாடான சீனா, 2020ல் ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது.இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளனர். ‘நேச்சர்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற … Read more

கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயம்.. 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம்..!

கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.127 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லர்க் 1 நிமிடம் 14.208 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார். இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் செயின்ஸ் 3-வது இடம் பிடித்தார். Source link

தடுமாறி கீழே விழுந்த ஜோ பைடன்..! : வைரலானது வீடியோ| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தனது சொந்த மாகாணத்தில் சைக்கிள் ரெய்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் ஜோபைன், டெல்வோயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்திற்கு வந்திருந்தார். அப்பகுதி வளாகத்தில் “சைக்கிளிங்” சென்றார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார். அப்போது, நிலை தடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். எனினும் சட்டென எழுந்தார். எனினும், … Read more

துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனை.!

துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனையின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ரஷ்யன் புளு  வகையை சேர்ந்த இந்த பூனையை கேனி டோஸ்மெஸி என்ற பெண்மணி தனது நண்பரின் தோட்டத்தில் கண்டெடுத்தார். அது நான்கு காதுகளுடன் இருப்பதை கண்ட அவர் அதற்கு மிடாஸ் என்று பெயரிட்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். நான்கு காதுகள் இருப்பதால் ஏதோ சூப்பர் பவர் கேட்கும் திறன் அந்த பூனைக்கு இருப்பதாக யாரும் கருதவேண்டாம் என்றும் மற்ற பூனைகளை … Read more

குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில் 1,880 பேர் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில், ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், 85 சதவீத பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 574ஆக அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலான பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக … Read more

காபூலில் குருத்வாரா மீது 2 வெடிகுண்டு தாக்குதல்கள்: 2 பேர் பலி; பலரின் கதி என்ன?

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தலீபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த … Read more

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்.!

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே 9 வருடத்திற்குப் பிறகு சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இருதரப்பு வர்த்தகத்திற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களை தீர்ப்பது, எல்லை தாண்டிய முதலீடுகளுக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை வழங்குவது உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை … Read more