ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்ப அலை – பிரான்ஸ், ஸ்பெயினில் கடும் வெப்பம்!

பாரிஸ், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. நேற்று பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. இன்று பதிவாகும் வெப்பம், உச்சபட்சமாக இருக்கும் என்றும் பருவநிலை மாற்றத்தால் இத்தகைய நிகழ்வுகள் வழக்கத்தை விட முன்னதாகவே தாக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இன்று 42 டிகிரிக்கு மேல் … Read more

காபூலில் உள்ள குருத்வாராவில் அடுத்தடுத்து 2 முறை குண்டுவெடிப்பு.. 2 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில், அடுத்தடுத்து இரண்டு முறை நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். காலை 7 மணியளவில் குருத்வாராவில் ஏராளாமன சீக்கியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, அதன் இரு வாயில்களிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பில் சிக்கி ஆப்கன் காவலர் ஒருவரும் சீக்கியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குருத்வாராவில் பலர் சிக்கியுள்ளதால் இறப்புகள் … Read more

காசா பகுதி ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹமாஸ் தளபதி பலி!

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 1990-களில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான, ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முற்றுகையின் கீழ்தான் இருந்து வருகிறது. … Read more

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சியூடாட் ஜுராஸ் நகரில் உள்ள உணவகத்தில், சிகை அலங்கார பெண் நிபுணர், தனது 30 வயதை பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது, உணவகத்திற்குள் புகுந்து இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சிகை அலங்கார பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. Source link

எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் … Read more

பிரான்ஸ், இத்தாலியில் வீசி வரும் வெப்ப அலையால் மக்கள் அவதி.!

பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஐரோப்பிய  நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பிரான்சின் பல நகரங்களில் வெப்ப அலை வீசி வருவதையடுத்து, அனைத்து துறைகளுக்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய அந்நாட்டு அரசு, சிறப்பு உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதேசமயம் ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் எரிந்து … Read more

10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 115-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்மொழிந்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் … Read more

தலிபான்கள் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரிப்பு: இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் கவலை

புதுடெல்லி: தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ஃபரித் மாமுண்ட்சாய் கூறும்போது, “ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதலே நாடு முழுவதும் பயங்கரவாதங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கனின் தலைமுறைகள் இருண்ட தருணங்களைச் சந்தித்து வருகின்றனர். பயங்கரவாதிகளுடன் சமரசமான உறவில் தலிபான்கள் உள்ளனர். ஆப்கனில் ஐஎஸ்ஏ தீவிரவாத அமைப்புக்கு பலம் அதிகரித்து இருக்கிறது. ஐஎஸ்ஏ அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் … Read more

குருத்வாரா மீது வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில், குருத்வாரா மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தாலிபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த … Read more

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.!

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாகூர் பசுமை ரயில் திட்டத்திற்காக சீனாவிடம் இருந்து 55.6 மில்லியன் டாலர் கடனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், இந்த கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தவறாமல் திருப்பி செலுத்துமாறு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாத நிலவரப்படி, … Read more