பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல்.!
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தினர். காசாவில் இருந்து வந்த ராக்கெட்டை வானிலேயே தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு பதிலடியாக காசாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தெற்கில் உள்ள இஸ்ரேலிய நகரமான ஆஷ்லெலான் மற்றும் காசா முனையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சைரன்கள் ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களால் அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக பாலஸ்தீனிய ஊடகம் தெரிவித்துள்ளது. Source link