ஐ.நா.,வில் சீனா திடீர் முட்டுக்கட்டை| Dinamalar

நியூயார்க்:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா – அமெரிக்காவின் கூட்டு பரிந்துரைக்கு, சீனா கடைசி நிமிடத்தில் முட்டுக்கட்டை போட்டது.கடந்த 2008 நவ., 26ல் மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர் பயங்கரவாத குழுவின் தலைவர் ஹபீஸ் சயீத் மூளையாகச் செயல்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த இவரது உறவினரான அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காஅறிவித்துள்ளது.இந்நிலையில், அவரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக … Read more

செர்ரிப் பழங்களில் விஷம் கலந்து ரஷ்யர்களுக்குப் பரிசளித்த உக்ரைன் விவசாயிகள்..!

உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் உக்ரைன் Melitopol நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் விஷம் தோய்ந்த செர்ரிகளை அபகரித்துச் சென்றனர். இது ரஷ்ய வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பரிசு என்று உஉக்ரைன் தெரிவித்துள்ளது. செர்ரிப் பழங்களை உண்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் மெலிட்டோபோல் நகரில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பல ஆயிரக்கணக்கான டன்கள் செர்ரிப் … Read more

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அந்நாட்டின் உணவு … Read more

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபரின் உடலில் இருந்த புல்லட் படம் வெளியிட்டது அல்ஜசீரா

ஜெருசலேம்: அல்ஜசீரா டி.வி. நிறுவனத்தின் அராபிக் மொழிப்பிரிவில் பணியாற்றிய பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே (51). இவர் பாலஸ்தீன அமெரிக்கர். இஸ்ரேல் -பாலஸ்தீனம் மோதல் குறித்த செய்திகளை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் நடந்தது. இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஷிரீன் அபு அக்லே துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இஸ்ரேல் ராணுவம்தான் … Read more

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழை… 20 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக தஞ்சம்

வங்காளதேசத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் 20 லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். வடகிழக்கு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை படகுகளை கொண்டு மீட்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. உயர்நிலை மாணவர்களுக்கு நடத்தவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பள்ளிகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கால நிலை மாற்றமே பருவம் தவறிய மழைக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலேட் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணி, அத்தியாவசிய பொருட்கள் விநியோக பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. … Read more

அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ‘இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நெருக்கமான உறவு ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இந்தியா – ரஷ்யா உறவு வலுப்பெற துவங்கிவிட்டது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுக்காக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. … Read more

போர், வன்முறை பிரச்சினைகளால் உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம் பெயர்வு – யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: போர், வன்முறை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்கள் போன்றவை காரணமாக 2021-ம் ஆண்டு இறுதி வரை உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்குப்பின் இது மிக அதிகமான அளவு என்றும் குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 22 லட்சம் பேர் அதிகரித்தனர். இடம் பெயர்ந்த குழந்தைகளில் 1 கோடியே 37 லட்சம் பேர் அகதிகள். உள்நாட்டு சண்டை, வன்முறை ஆகியவை காரணமாக … Read more

எரிபொருள் பற்றாக்குறை எதிரொலிஇலங்கையில் வெள்ளி விடுமுறை| Dinamalar

கொழும்பு:நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரி பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் வாங்க, மக்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தயங்குகின்றன.இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.இதையடுத்து, … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகம்ஆப்கனில் போஸ்டர் ஒட்டிய தலிபான்கள்| Dinamalar

காபூல்:’தலை முதல் கால் வரை மறைக்கும், ‘ஹிஜாப்’ அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயல்கின்றனர்’ என எழுதப்பட்ட ‘போஸ்டர்’களை, தலிபான்கள் ஆப்கனில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த தலிபான்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர். கடந்த 1996 – 2001 ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தொடராது என, தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனாலும் அவர்களின் அடக்குமுறைகள் தொடர்ந்தன.இந்நிலையில், தெற்கு ஆப்கனில் … Read more