ஒருநாள் போட்டியில் 498 ரன் விளாசல்| Dinamalar

ஆம்ஸ்டெல்வீன்: நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்த இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்தது.நெதர்லாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (1) ஏமாற்றினார். பின் இணைந்த பில் சால்ட், டேவிட் மலான் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. இவர்கள் இருவரும் சதம் கடந்தனர். … Read more

ரஷியாவில் இருந்து வெளியேற 15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் முயற்சி; இங்கிலாந்து அமைச்சகம்

லண்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். இந்த போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியின் … Read more

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து..!

கொரோனா பரவல் குறைந்து வருவதால், தாய்லாந்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடான தாய்லாந்திற்கு செல்ல, வெளிநாட்டு பயணிகள் பாஸ் பெற்று முன்பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு அமலில் இருந்தது. அந்த நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.  Source link

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன், விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவை, – அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரி்ட்டன் உள்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, 51, ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார்.குறிப்பாக, அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அசாஞ்சே கைது … Read more

எலான் மஸ்கின் டுவிட்டர் நடவடிக்கையை கண்டிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் – வெளியான அதிருப்தி கடிதம்..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்முறையாக டுவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் எலான் மஸ்க் வீடியோ கால் வாயிலாக … Read more

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்.. 2000 கால்நடைகள் பரிதாபமாக பலி..!

அமெரிக்காவின் கென்சாஸில் நிலவும் கடும் வெப்பத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் வரலாறுகாணாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவிவருகிறது. இதில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் கென்சாசும் ஒன்று. கடும் வெப்பத்தால் அங்கு பண்ணை புல்வெளிகளில் கால்நடைகள் உயிரிழந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமயமாதலால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். Source link

நேபாள ஆற்றில் மாயமான இந்திய சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்பு

காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள நேபாளத்திற்கு இந்திய சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் நேபாளம் சென்றனர். அவர்கள் நேபாளத்தின் பல்பா மாவட்டத்தில் உள்ள கலிகண்டகி ஆற்றில் சிறிய ரக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, படகு கவிழ்ந்ததில் 7 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர். உடனடியாக உள்ளூர் … Read more

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம்: பிரிட்டன்

லண்டன்: ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படலாம் என பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதனால் விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது. இதனிடையே, இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது ஸ்வீடன். இது அமெரிக்காவுக்கு நாடு … Read more

அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சேயை லண்டன் சிறையிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு..!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் அமெரிக்க ராணுவ ரகசியங்களை 2010ஆம் ஆண்டு வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே 2012ஆம் ஆண்டு சுவீடனில் பதிவான பாலியல் வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.  Source link

இந்திய – அமெரிக்கா முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள்படி தான் செய்துள்ளதாக கூறி தனது நடவடிக்கையை சீனா நியாயப்படுத்தி உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரெஹ்மான் மக்கி(74). … Read more