இந்திய – அமெரிக்கா முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள்படி தான் செய்துள்ளதாக கூறி தனது நடவடிக்கையை சீனா நியாயப்படுத்தி உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரெஹ்மான் மக்கி(74). … Read more

பயண கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது தாய்லாந்து; சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி

பாங்காக், உலக நாடுகளில் சுற்றுலாவாசிகளின் விருப்பமுள்ள நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் அந்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 4 கோடி பேர் வருகை தந்தனர். ஆனால், அடுத்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த எண்ணிக்கை சரிவடைய தொடங்கியது. கடந்த ஆண்டில், 2019ம் ஆண்டில் வருகை புரிந்த சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தினரே வந்துள்ளனர். இத்தனைக்கும், கொரோனா விதிகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இருந்தன. அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் மொத்தம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை … Read more

விண்வெளியில் பூமியைப் போன்று 2 கோள்கள் இருப்பது கண்டுபிடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

விண்வெளியில் பூமியைப் போன்று 2 கோள்கள் இருப்பதை நாசா ஆய்வு மையம் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு கோள்களும் மிகவும் அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்றும் பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கோள்களும் சூப்பர் எர்த் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. HD 260655 b என்று பெயரிடப்பட்ட கோள் பூமியை விட 1.2 மடங்கும் HD 260655 c என்று பெயரிடப்பட்ட மற்றொரு … Read more

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் ஒப்புதல்

லண்டன் ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரித்தி படேல் கையெழுத்திட்டுள்ளதாக உள்துறை … Read more

உலக அளவில் அதிகரிக்கும் பணவீக்கம்: அமெரிக்காவில் 30 ஆண்டுகளில் இல்லாத நிலை

உலக நாடுகளில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவு விலைவாசி அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் 8.6% ஆக உள்ளது. நாட்டின் விலைவாசி அதிகரித்ததற்கு அதிபர் ஜோ பைடனும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் விலைவாசி உயர்வு உச்சத்தைத் தொட்டுள்ளது. 2022 முதலாம் காலாண்டு நிலவரப்படி, துருக்கியில் பணவீக்கம் உலக நாடுகளிலேயே அதிக … Read more

600 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வினோத சம்பிரதாயம்.. எரிமலைக்குள் ஆடுகள், கோழிகளை வீசி நேர்த்திக்கடன்..!

இந்தோனேஷியாவில், புகைந்து கொண்டிருக்கும் புரோமோ எரிமலைக்குள் கால்நடைகள், காய், கணிகளை வீசி பழங்குடி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிழக்கு ஜாவா-வில் உள்ள புரோமோ மலைப்பகுதிகளில் வசிக்கும் டெங்கர் பழங்குடி மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களை மகிழ்விக்க சுமார் 600 ஆண்டுகளாக இந்த சடங்கை கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் வீசி எறியும் ஆடுகள், கோழிகள், பழங்களை பிற சமூக மக்கள் மலை உச்சியில் நின்றபடி வலைகளை வீசி பிடித்து சென்றனர்.  Source link

அப்துல் ரஹ்மானை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை: இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தடை போட்ட சீனா

நியூயார்க்: லஷ்கர் இ தோய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினரும், அமெரிக்காவை மிரட்டிய தீவிரவாதியுமான அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் எடுத்த நடவடிக்கையை சீனா கடைசி நேரத்தில் தடுத்து விட்டது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது … Read more

முகத்தை மறைக்காத பெண்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டியத் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில், முகத்தை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாத பெண்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு தாலிபான்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். பொதுவெளியில் முகத்தையும், உடலையும் முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியாத பெண்களின் ஆண் உறவினர்களின் அரசு பணிகள் பறிக்கப்படும் என தாலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சதா ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்காத ஆடைகளை அணிவதன் மூலம் பெண்கள் மிருகங்கள் போல இருக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  Source link

அமெரிக்க பாதுகாப்பு துறை: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உயர் பதவி!

அமெரிக்க பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் பென்டகனில் முக்கிய பதவிகளுக்கு ஐந்து பேரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவர் பாதுகாப்பு துணை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறார். ராதா ஐயங்கார் தற்போது பாதுகாப்பு துணைச் செயலாளராகவும், தலைமைத் தளபதியாகவும் உள்ளார். இந்நிலையில், … Read more

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி.!

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 15 ஆம்தேதியன்று இதன் முதல் தொகுதி ஜெய்பூரின் கனகப்பூரா ரெயில் நிலையத்தில் இருந்து குவைத்திற்கு புறப்பட்டது. குவைத்தில் த்திற்காக இந்தியாவிலிருந்து பசு சாணம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. Source link