அப்துல் ரஹ்மானை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை: இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தடை போட்ட சீனா

நியூயார்க்: லஷ்கர் இ தோய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினரும், அமெரிக்காவை மிரட்டிய தீவிரவாதியுமான அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் எடுத்த நடவடிக்கையை சீனா கடைசி நேரத்தில் தடுத்து விட்டது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது … Read more

முகத்தை மறைக்காத பெண்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டியத் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில், முகத்தை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாத பெண்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு தாலிபான்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். பொதுவெளியில் முகத்தையும், உடலையும் முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியாத பெண்களின் ஆண் உறவினர்களின் அரசு பணிகள் பறிக்கப்படும் என தாலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சதா ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்காத ஆடைகளை அணிவதன் மூலம் பெண்கள் மிருகங்கள் போல இருக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  Source link

அமெரிக்க பாதுகாப்பு துறை: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உயர் பதவி!

அமெரிக்க பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் பென்டகனில் முக்கிய பதவிகளுக்கு ஐந்து பேரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவர் பாதுகாப்பு துணை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறார். ராதா ஐயங்கார் தற்போது பாதுகாப்பு துணைச் செயலாளராகவும், தலைமைத் தளபதியாகவும் உள்ளார். இந்நிலையில், … Read more

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி.!

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 15 ஆம்தேதியன்று இதன் முதல் தொகுதி ஜெய்பூரின் கனகப்பூரா ரெயில் நிலையத்தில் இருந்து குவைத்திற்கு புறப்பட்டது. குவைத்தில் த்திற்காக இந்தியாவிலிருந்து பசு சாணம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. Source link

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது பாலஸ்தீனப் போராளிகள் துப்பாக்கி சூடு.. பதில் தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது காரில் இருந்தபடி துப்பாக்கி சூடு நிகழ்த்திய பாலஸ்தீன போராளிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜெனின் நகரில், சாலையோரம் நின்ற காரில் இருந்த 3 பேர் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பதிலுக்கு இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவரும் கொல்லப்பட்டனர்.  Source link

வட கொரியாவில் புதிய நோய் பரவல்?| Dinamalar

சியோல்: வட கொரியாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து குடல் நோய் தோன்றியுள்ளதாக, அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வகை குடல் நோயால், மக்கள் காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக, வட கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ‘போதிய அளவு குடிநீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத வட கொரியாவில், அசுத்தமான குடிநீர் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் … Read more

அமெரிக்காவில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நேற்றிரவு உணவு விருந்து நடைபெற்ற போது, உள்ளே புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இருவர் உயிரிழந்ததாகவும் மற்றொரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து … Read more

ஐ.எஸ்., பயங்கரவாதி சிரியாவில் கைது!| Dinamalar

பாக்தாத்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூத்த தலைவரை அமெரிக்க கூட்டுப் படையினர் சிரியாவில் நேற்று கைது செய்தனர். மேற்காசிய நாடான சிரியாவின் பல்வேறு பகுதிகளை ஐ.எஸ்., பயங்கரவாத குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டன. ஆனாலும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அவ்வப்போது சிரியாவில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத குழுவின் மூத்த தலைவரை வடக்கு சிரியாவில் வைத்து … Read more

குரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயர்: உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

ஜெனிவா: குரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயர் வைக்க ஆலோசித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ”குரங்கு அம்மை என்ற பெயர் குறிப்பிட்ட கண்டத்தை களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து தவறான கருத்து நிலவுகிறது அதனால் இந்தப் பெயரை மாற்ற வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் விஞ்ஞானிகளின் வேண்டுகோளை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் … Read more

கூண்டில் உள்ள புலியுடன் கையை விட்டு விளையாடிய பூங்கா ஊழியர்.. கடித்து குதறிய புலி.!

மெக்சிகோவில் உணவு வழங்கும் பூங்கா ஊழியரின் கையை புலி கடித்து குதறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பெரிபன் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விலங்களுக்கு உணவு விநியோக பணியில் ஊழியர் ஜோஸ் ஈடுபட்டார். கூண்டில் உள்ள புலியுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஊழியரின் கையை புலி கடித்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.   Source link