குரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயர்: உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

ஜெனிவா: குரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயர் வைக்க ஆலோசித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ”குரங்கு அம்மை என்ற பெயர் குறிப்பிட்ட கண்டத்தை களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து தவறான கருத்து நிலவுகிறது அதனால் இந்தப் பெயரை மாற்ற வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் விஞ்ஞானிகளின் வேண்டுகோளை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் … Read more

கூண்டில் உள்ள புலியுடன் கையை விட்டு விளையாடிய பூங்கா ஊழியர்.. கடித்து குதறிய புலி.!

மெக்சிகோவில் உணவு வழங்கும் பூங்கா ஊழியரின் கையை புலி கடித்து குதறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பெரிபன் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விலங்களுக்கு உணவு விநியோக பணியில் ஊழியர் ஜோஸ் ஈடுபட்டார். கூண்டில் உள்ள புலியுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஊழியரின் கையை புலி கடித்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.   Source link

சீன நாட்டினருக்கு பாக்., அரசு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் வசிக்கும் சீன நாட்டினர் தங்களின் நடமாட்டம் குறித்து போலீசுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா முதலீடு செய்துள்ள திட்டங்களினால், பாகிஸ்தானியர் பலனடைவில்லை என, ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் சீனா மீது கோபமடைந்துள்ள பாக்., மக்கள், தங்கள் நாட்டில் வசிக்கும் சீனர்களை தாக்குகின்றனர். இதையடுத்து, ‘தலைநகர் இஸ்லாமாபாதில் தங்கியிருக்கும் ௧,௦௦௦க்கும் அதிகமான சீனர்கள், தங்கள் நடமாட்டம் பற்றி போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்: பாக்., தலைநகர் … Read more

தெற்கு சிலியைச் சேர்ந்த வீராங்கனை நீச்சலில் இரண்டு கின்னஸ் சாதனை

தெற்கு சிலியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை பார்பரா ஹெர்னாண்டஸ், பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையேயான ஒரு மைல் கடல், ஆயிரத்து 852 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் உறைபனி நீரில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முன்னதாக, இரு பெருங்கடல்களுக்கு இடையேயான மூன்று கடல் மைல், 5 ஆயிரத்து 500 மீட்டர் தூரத்தை நீந்திய முதல் நபர் எனவும் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. Source link

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீட்டு கூரைகளில் தஞ்சம்… ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு – தத்தளிக்கும் நகரங்கள்

அமெரிக்க வயோமிங் மாகாணம் யல்லோஸ்டோன் பூங்கா, சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டு கூரைகளில் தஞ்சமடந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர். கனமழை மற்றும் பனிக் கட்டி உருகி ஏற்பட்ட வெள்ளத்தால் ப்ரூம்பெர்க், கூக் சிட்டி, ரோஸ்பட் ஏரி உள்ளிட்ட பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. மண் சரிவுகளால் வீடுகள் உருக்குலைந்த நிலையில், சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறின. வீடுகளின் கூரைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. Source link

கிழக்கு உக்ரைனில் பெரும்பகுதியை கைப்பற்றிய ரஷ்யப் படைகள்.. ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு..!

கிழக்கு உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.செய்தித் தொடர்பாளர், டான்பாஸை கைப்பற்ற சிவிரோடொனெட்ஸ்கில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், அனைத்து பாலங்களையும் தகர்த்து அந்நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும், அங்குள்ள அசோட் தொழிற்சாலையில் தஞ்சமடைந்துள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். Source link

'தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் நிலைமை' – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கன் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் உணவுப் பண்டங்களை விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் … Read more

பெருவில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை… மைனஸ் 21 டிகிரி செல்சியசாகப் பதிவு!

தென் அமெரிக்க நாடான பெருவில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை மைனஸ் 21 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு நிலவுகிறது. பலமாக வீசும் குளிர் காற்றால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூஜ்யத்துக்கும் குறைவான அளவிலான வெப்பநிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இது போன்ற குளிர் காற்றுடன் கூடிய … Read more

கொரோனா பரவலுக்கு இடையே புதிய நோய்.. பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு..!

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய்யும் பரவத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெஜு நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹேஜுவு-க்கு மருந்துகளை அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தொற்று நோய் பரிசோதனைகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார் Source … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியைப் பிடிக்க வட்டமிட்ட 8 அமெரிக்க ஹெலிகாப்டர்கள்.. துப்பாக்கி சண்டைக்குப் பின் தீவிரவாதி கைது!

சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவனான ஹனி அகமது அல்குர்தியைப் பிடிக்க எட்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீட்டின் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வட்டமிட்டன. அமெரிக்காவால் சிரியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தலைவன் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணன் என்று கூறப்படுகிறது. வடமேற்கு சிரியாவின் ஒரு தனி வீட்டில் அவன் இருப்பதை அறிந்த அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த வீட்டின் மேல் தாழப்பறந்து முற்றுகையிட்டன. இரண்டு ஹெலிகாப்டர்கள் சில நிமிடங்கள் மட்டும் தரையைத் தொட்டதாகவும் … Read more