பெட்ரோலுக்கு காத்திருந்த ஆட்டோ டிரைவர் மரணம்| Dinamalar

கொழும்பு:இலங்கையில் பெட்ரோல் வாங்க இரவு முழுதும் காத்திருந்த ஆட்டோ டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இங்கு, வாகன ஓட்டுனர்கள் நீண்ட வரிசையில் நாள் முழுதும் காத்திருந்து, பெட்ரோல், டீசல் வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், தலைநகர் கொழும்பு அருகே பனதுரா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் … Read more

இலங்கை விமானியின் சாதுரியத்தால் நடுவானில் பயங்கர விபத்து தவிர்ப்பு| Dinamalar

லண்டன்:இலங்கை விமானியின் சாதுரியமான நடவடிக்கையால், நடுவானில் ஏற்பட இருந்த பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனிலிருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் 275 பயணியர் இருந்தனர்.இந்த விமானம், துருக்கி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பறக்கும் உயரத்தை 33 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 35 ஆயிரம் அடியாக அதிகரிக்க அங்காரா தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து தகவல் வந்தது. அந்த … Read more

இந்தியாவில் தொற்று ஆய்வுக்குஅமெரிக்கா ரூ.915 கோடி உதவி| Dinamalar

வாஷிங்டன்:இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் ஆய்வுக்காக, அமெரிக்கா 915 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உலக நாடுகளில் தொற்று நோய் தடுப்பு கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்கிறது. இந்த மையம், இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, 915 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.இதன்படி, டில்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் புனேவின் தேசிய வைரஸ் ஆய்வு மையம் … Read more

ரஷ்யாவில் போதைப் பொருள் கடத்திய மாடல் அழகிக்கு 20 ஆண்டு சிறை?| Dinamalar

மாஸ்கோ:ரஷ்யாவில், போதைப்பொருள் கடத்தியதாக, அழகி போட்டியில் பரிசு வென்றவரும், பிரபல மாடலுமான கிறிஸ்டியானா துகினா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.ரஷ்யாவில், 2.5 கிராமுக்கு மேல் போதைப் பொருள் வைத்திருந்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அந்நாட்டில் சிறையில் உள்ள மூவரில் ஒருவர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.இந்நிலையில், அழகி போட்டியில் வென்றவரும், மாடல் அழகியுமான கிறிஸ்டியானா துகினா, 34, அரை கிலோ … Read more

பிரேசிலில் அதிர்ச்சி: அமேசான் பழங்குடி மக்கள் நல ஆர்வலர்கள் இருவர் கொலை

இங்கிலாந்து பத்திரிகையாளர் டான் பிலிப், பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா ஆகிய இருவரும் அமேசான் காட்டில் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப் (57). இவர் தொடர்ச்சியாக அமேசான் மழைக் காடுகளின் பாதுகாப்பு குறித்தும், அமேசான் பழங்குடிகள் குறித்தும் எழுதி வருகிறார். இது தொடர்பாக புத்தகங்களையும் டான் பிலிப் எழுதியுள்ளார். அமேசான் காடுகளுக்கு எதிராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவின் நடவடிக்கையும் அவர் எதிர்த்தார். இந்தச் சூழலில் … Read more

தேசிய பூங்காவில் ஆற்றுக்கு நடுவில் சிங்கத்தை சுற்றி வளைத்த முதலைகள்.!

கென்யாவில் உள்ள தேசிய பூங்காவில் ஆற்றுக்கு நடுவில் சிங்கத்தை முதலைகள் சுற்றி வளைத்த காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர். மசாய் மாரா தேசிய பூங்காவில் நீர்யானை ஒன்றின் சடலத்தின் மீது நின்றிருந்த சிங்கத்தை தப்பிக்க விடாமல் இருப்பதற்காக சுமார் 40 முதலைகள் அதனை சுற்றி வளைத்து நின்றன. பின்னர், திடீரென தண்ணீரில் குதித்த அந்த சிங்கம், முதலை கூட்டத்திடம் சிக்காமல் வேகமாக நீந்தி கரைக்கு சென்று தப்பியது. ஆண்டனி பெசி என்பவரால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை … Read more

மேலும் ஒரு யோகா பல்கலை அமெரிக்காவில் துவங்க திட்டம்| Dinamalar

வாஷிங்டன் : பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில், 23 பேர் முதுகலை பட்டம் பெற்றனர். அப்போது, வேந்தர் நாகேந்திரா கூறியதாவது:அமெரிக்காவின் கிழக்கு … Read more

பெண்களின் மூளையை ஸ்கேன் செய்து உணர்வுகளை பதிவு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்

வாசனை திரவியங்கள் என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம். அதுவும் மனதுக்கு பிடித்த திரவியம் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி. பெண்களின் இந்த எதிர்பார்ப்பை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் ஒன்று பூர்த்தி செய்துள்ளது. அதாவது மூளையை ஸ்கேன் செய்து அவர்கள் மனம் விரும்பும் வாசனை திரவியத்தை கண்டுபிடிக்கும் நவீன தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இங்கு வரும் பெண்களின் மூளையை ஸ்கேன் செய்து உணர்வுகளை பதிவு செய்யும் போது, விதவிதமான நறுமணங்களை நுகரச் செய்கின்றனர். உணர்வுகளால் அவர்களை மிகவும் சந்தோஷமடைய … Read more

வீட்டுத் தோட்டத்தில் 10 லட்சம் தவளைகள் கொண்ட ராணுவத்தை உருவாக்கிய இளைஞர்.!

வீட்டுத் தோட்டத்தில்  10 லட்சம் தவளைகள் கொண்ட ராணுவத்தை உருவாக்கியிருப்பதாக இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் பிரபலமாகி உள்ளது. 95 நாட்களுக்கு முன்பு தான் பத்து லட்சத்து 40 ஆயிரம் தவளை முட்டைகளை தோட்டத்தில் உள்ள நீர்நிலையில் விட்டதாகவும், அதிலிருந்து தற்போது 10 லட்சம் தவளைக்குஞ்சுகளை கொண்ட ராணுவம் உருவாகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பெருகிவரும் தவளைப்படையால் தோட்டத்தில் உள்ள புல்வெளிகள் மறைந்து எங்குபார்த்தாலும் தவளைக் குஞ்சுகளாக காட்சியளிக்கின்றன.  Source link