உலக செய்திகள்
வீட்டுத் தோட்டத்தில் 10 லட்சம் தவளைகள் கொண்ட ராணுவத்தை உருவாக்கிய இளைஞர்.!
வீட்டுத் தோட்டத்தில் 10 லட்சம் தவளைகள் கொண்ட ராணுவத்தை உருவாக்கியிருப்பதாக இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் பிரபலமாகி உள்ளது. 95 நாட்களுக்கு முன்பு தான் பத்து லட்சத்து 40 ஆயிரம் தவளை முட்டைகளை தோட்டத்தில் உள்ள நீர்நிலையில் விட்டதாகவும், அதிலிருந்து தற்போது 10 லட்சம் தவளைக்குஞ்சுகளை கொண்ட ராணுவம் உருவாகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பெருகிவரும் தவளைப்படையால் தோட்டத்தில் உள்ள புல்வெளிகள் மறைந்து எங்குபார்த்தாலும் தவளைக் குஞ்சுகளாக காட்சியளிக்கின்றன. Source link
வேற்று கிரவாசிகளிடம் இருந்து புதிய சமிக்ஞைகளை பெற்ற சீனா…?
(Feed generated with FetchRSS)
முப்படைகள், சிறைத்துறை காவலர்கள் உள்ளிட்டோரை விவசாய பணிகளில் ஈடுபடுத்த இலங்கை அரசு திட்டம்.!
முப்படைகள், பாதுகாப்புப் படை மற்றும் சிறைத்துறை காவலர்கள் உள்ளிட்டோரை விவசாய பணிகளில் ஈடுபடுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, முப்படைகளை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரித்து, வெற்றிகரமான பலன்களை அடைய முடியும் என்றார். மேலும், இலங்கையில் அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். Source link
உக்ரைனில் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய குடியுரிமை!
மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் போர் தொடங்கி 113 நாட்கள் கடந்துவிட்டன. இப்போதைய சூழலில், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் நகரம், ரஷியாவின் தாக்குதலின் மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதிக்கு பிறகு, உக்ரைனில் உள்ள கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய தேசத்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உக்ரைனின் கெர்சன் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. கிரிமியன் தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள கெர்சன், ரஷிய கட்டுப்பாட்டின் கீழ் வந்த உக்ரைனின் … Read more
போக்ரோவ்ஸ்க் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்
கிழக்கு உக்ரைனில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 3 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். போக்ரோவ்ஸ்க் நகரம், டான்பாஸ் பிராந்தியத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Source link
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு… இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் போர் மற்றும் அதீத பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக அமெரிக்காவில் விலைவாசி உயர்வு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை பூஜ்யத்தில் இருந்து ஒரு சதவீதமாக கடந்த 2 மாதங்களில் உயர்த்தியது. இந்த நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை மீண்டும் 0.75 சதவீதத்திற்கு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் மேலும் 0.75 … Read more
போதைப்பொருள் கடத்தல் பிரபல மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை …!
மாஸ்கோ ரஷியா அழகி ஒருவர் போதைப்பொருள் வந்த்திருந்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மாடல் ஏஜென்சி உரிமையாளரான 34 வயதான கிறிஸ்டினா துகினா.இவர் 2019 இல் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தை வென்று உள்ளார். 2020 இல் ரஷியா அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார். … Read more
அமேசான் காட்டில் மாயமான பழங்குடியின நிபுணர், பத்திரிக்கையாளர் கொன்று புதைப்பு – அதிர்ச்சி சம்பவம்
ரியோ டி ஜெனிரோ, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப். இவர் பிரேசிலில் தங்கி அமேசான் காடுகளில் வசித்துவரும் பழங்குடியின மக்கள், வாழ்வியல் முறைகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டும், அமேசான் பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை எழுதியும் வருகிறார். அமேசான் காடுகளில் பழங்குடியின மக்களை சந்திப்பதற்காக டான் பிலிப்பின் வழிகாட்டியாக பிரேசிலை சேர்ந்த பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அமேசான் காடுகளில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் … Read more
China vs Aliens: சீனாவுக்கு சிக்னல் கொடுக்கும் ஏலியன்கள்: ஆச்சரியம் ஆனால் உண்மையா
வேற்றுகிரகவாசிகளிடமிருந்து சிக்னல் கிடைத்ததாக சீனா தெரிவித்ததாக வெளியாகும் செய்திகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கின்றன. சீன அரசுக்கு ஆதரவாக செயல்படும் நாளிதழ் ஒன்றில் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து சிக்னல்கள் கிடைத்தது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அந்த அறிக்கையை பிறகு அந்த பத்திரிக்கை நீக்கிவிட்டது. அறிக்கையை திரும்பப் பெறுவதற்கான காரணம் எதையும் அந்த நாளிதழ் தெரிவிக்கவில்லை. வேற்றுகிரகவாசிகள் இறுதியாக மனிதர்களை தொடர்பு கொண்டார்களா? ஆம் என்று சொல்வதற்கு சீனாவின் பத்திரிக்கை ஆதாரம் இருந்தாலும், அது இப்போது நீக்கப்பட்டுவிட்டதால் … Read more