போதைப்பொருள் கடத்தல் பிரபல மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை …!

மாஸ்கோ ரஷியா அழகி ஒருவர் போதைப்பொருள் வந்த்திருந்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மாடல் ஏஜென்சி உரிமையாளரான 34 வயதான கிறிஸ்டினா துகினா.இவர் 2019 இல் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தை வென்று உள்ளார். 2020 இல் ரஷியா அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார். … Read more

அமேசான் காட்டில் மாயமான பழங்குடியின நிபுணர், பத்திரிக்கையாளர் கொன்று புதைப்பு – அதிர்ச்சி சம்பவம்

ரியோ டி ஜெனிரோ, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப். இவர் பிரேசிலில் தங்கி அமேசான் காடுகளில் வசித்துவரும் பழங்குடியின மக்கள், வாழ்வியல் முறைகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டும், அமேசான் பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை எழுதியும் வருகிறார். அமேசான் காடுகளில் பழங்குடியின மக்களை சந்திப்பதற்காக டான் பிலிப்பின் வழிகாட்டியாக பிரேசிலை சேர்ந்த பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அமேசான் காடுகளில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் … Read more

China vs Aliens: சீனாவுக்கு சிக்னல் கொடுக்கும் ஏலியன்கள்: ஆச்சரியம் ஆனால் உண்மையா

வேற்றுகிரகவாசிகளிடமிருந்து சிக்னல் கிடைத்ததாக சீனா தெரிவித்ததாக வெளியாகும் செய்திகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கின்றன.     சீன அரசுக்கு ஆதரவாக செயல்படும் நாளிதழ் ஒன்றில் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து சிக்னல்கள் கிடைத்தது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அந்த அறிக்கையை பிறகு அந்த பத்திரிக்கை நீக்கிவிட்டது. அறிக்கையை திரும்பப் பெறுவதற்கான காரணம் எதையும் அந்த நாளிதழ் தெரிவிக்கவில்லை.   வேற்றுகிரகவாசிகள் இறுதியாக மனிதர்களை தொடர்பு கொண்டார்களா? ஆம் என்று சொல்வதற்கு சீனாவின் பத்திரிக்கை ஆதாரம் இருந்தாலும், அது இப்போது நீக்கப்பட்டுவிட்டதால் … Read more

உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியல்: செல்வந்தர்களையும் விட்டு வைக்காத எகிறும் செலவுகள்

நியூயார்க்: உலக அளவில் கரோனாவுக்கு பிறகு பெரிய நகரங்களில் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இந்த நகரங்களில் சாதாரண மக்களை விடவும் செல்வந்தர்களுக்கு செலவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலியஸ் பேர் குரூப் லிமிடெட்டின் 2022 உலகளாவிய செல்வம் மற்றும் வாழ்க்கை முறை அடிப்படையில் உலகின் செலவு மிக்க நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. இது வீடுகள், சொத்து, கார்கள், விமான கட்டணம், பள்ளி மற்றும் பிற செலவுகளை பகுப்பாய்வு செய்து உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களை … Read more

குரங்கு அம்மைக்கு புதியப் பெயர் வைக்க ஆலோசனை

உலகம் முழுவதும் 39 நாடுகளில் 1,600-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 1,500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் உள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது. அண்மையில், ஆப்பிரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள 30 விஞ்ஞானிகள் கொண்ட குழு இந்நோயின் பெயரை மாற்றக்கோரி உலக சுகாதார அமைப்புக்கு கோரிக்கை விடுத்தது. இந்த பெயர் பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் … Read more

உக்ரைன் 2 ஆண்டுகளில் உலக வரைப்படத்தில் இல்லாமல் போகலாம்: ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

மாஸ்கோ: “உக்ரைன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்து இல்லாமல் போகலாம்” என்று ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மாதக் கணக்கில் இந்தப் போர் தொடர்ந்து நடக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்யில், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் … Read more

“டீ குடிப்பதை குறைப்பீர்” – நிதி நெருக்கடியால் நாட்டு மக்களிடம் பாகிஸ்தான் அமைச்சர் வலியுறுத்தல்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குடிப்பதை குறைக்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் திட்ட அமைச்சர் அஷான் இக்பால், டீ குடிப்பதை குறைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “பாகிஸ்தான் தற்போது பிறநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் டீ குடிப்பதை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும். தேயிலை உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறும் … Read more

பெய்ஜிங்கில் 24 மணி நேரத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அண்மையில் மதுபான பார் ஒன்றுக்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இதையடுத்து பாருக்கு வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து நகரத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருப்பதுடன், லட்சக்கணக்கான மக்கள் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Source link

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வெளியேறும் மக்கள்.. பாஸ்போர்ட்டுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்..!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் இருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், தேவையை கருதி சனிக்கிழமைகளிலும் அதிகாரிகள் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சீனாவை புரட்டிப் போட்ட கனமழை, பெருவெள்ளம் : 5 லட்சம் பேர் பாதிப்பு..!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குவாங்சி, குவாங்டாங் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரப்பர் படகு உள்ளிட்டவைகள் மூலம் மீட்கப்பட்டனர். Source link