சீனாவை புரட்டிப் போட்ட கனமழை, பெருவெள்ளம் : 5 லட்சம் பேர் பாதிப்பு..!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குவாங்சி, குவாங்டாங் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரப்பர் படகு உள்ளிட்டவைகள் மூலம் மீட்கப்பட்டனர். Source link

உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கப்பல் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள் , பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்களுக்கான சாதனங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன .உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி உரையாடலில், புதிய ஆயுதங்களைப் பற்றி பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், முக்கியமான மருத்துவப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குதல் … Read more

இறையாண்மை, பாதுகாப்பு விவகாரங்களில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு

இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில்  ரஷ்யாவை ஆதரிப்போம் என்று சீனா உறுதியளித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர்  புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.   இறையாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவை தொடர்ந்து வழங்க சீனா தயாராக உள்ளது என்று ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது Source link

அமெரிக்காவில் வங்கிக் கட்டணங்கள் உயர்ந்தன: பொருளாதார மந்தநிலையா: அதிர்ச்சி

அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதஙக்ளை உயர்த்தியதால், அந்நாட்டில் பொருளாதார மந்தநிலை அதிகரித்துவரும் அச்சங்கள் உண்மையாகின்றன.   அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve System), தனது கொள்கை விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. புதன்கிழமையன்று உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதமானது 1.5% முதல் 1.75% வரை வட்டிகளை அதிகரித்தது. 1994 க்குப் பிறகு அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய இந்த வட்டி விகித உயர்வால், அந்நாடு சந்தித்து வரும் … Read more

அமெரிக்காவை வரலாறு காணாத வெப்பம் வாட்டுவதால் மக்கள் அவதி

வரலாறு காணாத வெப்பம் அமெரிக்காவை வாட்டுகிறது. பல மாநிலங்கள் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்கின்றன. இந்த ஆண்டு, அமெரிக்காவில் வெப்பநிலை இயல்பை விட 10 முதல் 30 டிகிரி வரை உயர்ந்துள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும், நீரேற்றத்துடன் இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலர் மின்வெட்டு காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ட்வீட் செய்து குறிப்பிட்டுள்ளனர்.  Source link

தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே: அரசு அறிவுறுத்தல்

இஸ்லாமாபாத்: அந்நியச் செலாவணி செலவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய வழியாக தேநீர் பருகுவதை கணிசமாக குறைத்துக் கொள்வது நாட்டின் கஜானாவுக்கு நல்லது என்று பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதிக்காக செலவு செய்யும் அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக தேநீர் குடிப்பதை குறைக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “கடனில் தேயிலையை இறக்குமதி செய்வதால், தேநீர் நுகர்வை … Read more

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க ஏவுகணை தடுப்பு ஆயுதம் தேவை – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 100 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடக்கிறது. தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆற்றிய … Read more

அடுத்தடுத்து 7 நிலநடுக்கம் : துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின

ஈரானின் தெற்கே அமைந்துள்ள கிஷ் தீவில் அடுத்தடுத்து 7 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் ஐக்கிய அமீரகத்தின் துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின. ஹார்மோஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவில் 6 ரிக்டர் என்ற அளவில் 4 அதிர்வுகளும், 5.3 ரிக்டர் புள்ளியில் ஒரு அதிர்வும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்தாரிலும் ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் … Read more

டீ குடிப்பதை குறைக்க மக்களிடம் பாக்., கெஞ்சல்| Dinamalar

இஸ்லாமாபாத்:கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில், இலங்கையை போல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால் கூறியதாவது:உலகில், தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021 – 22ல், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாடு கடும் நிதி … Read more

பெல்ஜியத்தில் 50 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் உணவகம்.. 32 பேர் வரை அந்தரத்தில் பறந்து கொண்டே உணவு உண்ணலாம்..!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் உணவகம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 360 டிகிரியில் சுழலும் 32 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை, கிரேன் உதவியுடன் காற்றில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள டின்னர் இன் தி ஸ்கை உணவகத்தில், நபர் ஒருவருக்கு 350 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. Source link