ரஷ்ய உரங்களை அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்கா..!

ரஷ்யாவிடமிருந்து அதிகளவிலான வேளாண் உரங்களை வாங்க அமெரிக்க நிறுவனங்களை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், நெல் மற்றும் உரங்கள் ஏற்றுமதிக்கு தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் அதிகளவிலான உரங்களை வாங்க அமெரிக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதிகரித்து வரும் உலகளாவிய உணவு பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. Source link

பொருளாதார நெருக்கடி; "டீ" குடிப்பதை குறைக்குமாறு மக்களுக்கு பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லமாபாத், இலங்கையை போல பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. மானிய திட்டங்களை பாகிஸ்தான் ரத்து செய்வதால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. பண வீக்கம் அதிகரிப்பால் இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திட்டம் … Read more

'டீ குடிப்பதை கம்மி பண்ணுங்க' – அமைச்சர் திடீர் அட்வைஸ்!

தேயிலையை கடன் வாங்கி இறக்குமதி செய்து வருவதால், டீ குடிப்பதை நாட்டு மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என, பாகிஸ்தான் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை நாட்டைத் தொடர்ந்து, அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பெட்ரோல், டீசலுக்கு பாகிஸ்தான் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்கிடையே, … Read more

தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்கள் 318 பேர் மீதான தடை நீக்கம்.!

தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்படுவதாக இலங்கை அரசு, ஐநா மனித உரிமை அமைப்பில் தெரிவித்துள்ளது. போரினால் காணாமல் போனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக 53 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்துள்ளார். Source link

ரஷியாவில் இருந்து அதிகளவில் எரிபொருள் இறக்குமதி – உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்!

பாரிஸ், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் … Read more

ஆப்பிரிக்காவை இழிவுபடுத்தும் இனவெறி மற்றும் பாரபட்சமான பெயரா Monkeypox: பின்னணி

மங்கிஃபாக்ஸ் என்ற வார்த்தை இனவெறியைத் தூண்டுகிறது மற்றும் பாரபட்சமானது என்று விஞ்ஞானிகள் கூறியதையடுத்து குரங்கு அம்மை நோயின் பெயரை உலக சுகாதார அமைப்பு மாற்ற முடிவு செய்துள்ளது.  30 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இணைந்து கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், “குரங்குக் காய்ச்சலுக்கு பாரபட்சமற்ற மற்றும் களங்கமற்ற பெயரிடல் அவசரமாக தேவை” என்று கூறியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.  உலக சுகாதார நிறுவனம் (WHO) குரங்கு பாக்ஸை மறுபெயரிட வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது, இந்த வைரஸின் “பாரபட்சமான” … Read more

கடும் நிதி நெருக்கடி: தெற்கு சூடானுக்கு உணவு நிவாரணம் நிறுத்தம்!

நிதிப் பிரச்னை காரணமாக, தெற்கு சூடான் நாட்டிற்கு, உணவு நிவாரணம் நிறுத்தப்படுவதாக, ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்களாகவும் உள்ளனர். அங்குள்ள மக்களுக்கான உணவு தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருமண மோசடி: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு … Read more

அமெரிக்காவில் சானிட்டரி நாப்கின் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார்..!

அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பாதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சானிட்டரி நாப்கின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க கடைகளில் உள்ள அடுக்குகளில் சானிட்டரி நாப்கின்கள் இல்லாதது குறித்து எவரும் பேசவில்லை என டைம் இதழில் வந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்காவில் நாப்கின் தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ளது. போருக்குப் பின் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து உரம் வழங்கல் தடைபட்டுள்ளதால் நாப்கின் தயாரிப்புக்கு மூலப்பொருளான பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா சூழலில் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நாப்கின் … Read more

அதிகம் மாசு கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா 2-வது இடம்

புதுடெல்லி, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஆற்றல் கொள்கை நிறுவனம் காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விரிவான ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்காளம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை அதிர்ச்சி … Read more

27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தம்.!

27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு விண்டோஸ் 95 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 90ஸ் கிட்ஸ்களின் ஆடம்பர அறிவியல் உலகின் தொடக்கமாக இருந்தது. காலப்போக்கில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக போனதாலும், மேம்படுத்திய தேடுபொறிகளின் வருகையாலும், அதன் சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்றுடன் நிறுத்தியுள்ளது. இதனால், 90ஸ் கிட்ஸ்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உடனான நாஸ்டால்ஜிக் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து … Read more