அமெரிக்காவில் சானிட்டரி நாப்கின் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார்..!

அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பாதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சானிட்டரி நாப்கின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க கடைகளில் உள்ள அடுக்குகளில் சானிட்டரி நாப்கின்கள் இல்லாதது குறித்து எவரும் பேசவில்லை என டைம் இதழில் வந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்காவில் நாப்கின் தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ளது. போருக்குப் பின் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து உரம் வழங்கல் தடைபட்டுள்ளதால் நாப்கின் தயாரிப்புக்கு மூலப்பொருளான பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா சூழலில் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நாப்கின் … Read more

அதிகம் மாசு கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா 2-வது இடம்

புதுடெல்லி, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஆற்றல் கொள்கை நிறுவனம் காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விரிவான ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்காளம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை அதிர்ச்சி … Read more

27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தம்.!

27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு விண்டோஸ் 95 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 90ஸ் கிட்ஸ்களின் ஆடம்பர அறிவியல் உலகின் தொடக்கமாக இருந்தது. காலப்போக்கில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக போனதாலும், மேம்படுத்திய தேடுபொறிகளின் வருகையாலும், அதன் சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்றுடன் நிறுத்தியுள்ளது. இதனால், 90ஸ் கிட்ஸ்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உடனான நாஸ்டால்ஜிக் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து … Read more

ஆழ்கடலில் ராட்சத திமிங்கலத்தால் விழுங்கப்பட்டு உயிருடன் மீண்ட மனிதர் – வினோத சம்பவம்!

வாஷிங்டன், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட்(56 வயது), ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார். பேக்கார்ட் மற்றும் குழுவினர், ஆழ்கடலில் கடல் நண்டுகள் மற்றும் இறால்களை நீருக்கடியில் சென்று சேகரிக்கும் தொழிலாளி ஆவார். அவர்கள் ஒரு கப்பலில் இருந்து கடலுக்கடியில் குதித்து டைவிங் மூலம் நண்டுகளை அறுவடை செய்வார்கள். லோப்ஸ்டர் டைவர்ஸ் பொதுவாக குழுவாக வெளியே செல்கிறார்கள். கப்பலில் இருப்பவர்கள் தங்கள் குழுவினர் நீரிலிருந்து வெளியிடும் காற்று … Read more

நஷ்டம் காரணமாக ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்த கப்பல் உணவகம் அகற்றம்

ஹாங்காங்கின் அடையாளமாக கருதப்பட்டு வந்த பிரமாண்ட அடுக்குமாடி உணவக கப்பல் கடும் நஷ்டம் காரணமாக துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அரண்மனை போல் காட்சித்தரும் இந்த கப்பல் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சொகுசு கப்பல் உணவகத்திற்கு பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் போன்றோரும் வந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மிதக்கும் உணவகம் மூடப்பட்டது. பராமரிப்பு செலவினால் கூடுதல் சுமை ஏற்பட்டதால் அதன் … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென உருவான நீரூற்று.. விமான கேபினில் மளமளவென கொட்டிய தண்ணீர்

இங்கிலாந்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தின் கேபினில் தண்ணீர் மளமளவென கொட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டன் நோக்கி விமானம் சென்ற நிலையில், எக்கனாமிக் கிளாஸ் பகுதி கேபினில் திடீரென தண்ணீர் நீரூற்று போல் கொட்டத் தொடங்கியது. குடிநீருக்கான வால்வ் உடைந்து தண்ணீர் கொட்டியதாகவும் எந்தவொரு அசம்பாவிதமின்றி வாஷிங்டனில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் பிரிட்டீஸ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. விமானத்தில் பொலபொலவென தண்ணீர் கொட்டும் வீடியோ … Read more

திருமண மோசடி: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 7 மாதம் சிறை

சிங்கப்பூர் நாட்டில், திருமண மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண் ஒருவருக்கு, 7 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார். இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மல்லிகா ராமு (வயது 51) என்ற பெண், கோவிந்த ராஜசேகரை … Read more

சாலையில் அதிவேகமாக சென்ற காரை மடக்கி பிடித்த போலீசார்.. உள்ளே திறந்து பார்த்து அதிர்ச்சி..!

அமெரிக்காவில், சாலையில் அதிவேகமாக சென்ற காரை போலீசார் விரட்டிச் சென்று திறந்து பார்த்த போது உள்ளே முதலை ஒன்று இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மிச்சிகன் மாநில தேசிய நெடுஞ்சாலையில் அதிவிரைவாக சென்ற காரை நிறுத்துமாறு எச்சரித்தபடியே போலீசார் துரத்தி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த கார் பயன்படுத்தப்படாத ரயில் தடத்தில் இருந்த 2 மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது. ஓட்டுநரை பிடித்த போலீசார் காரில் சிறிய முதலை ஒன்று இருந்ததை கண்டறிந்தனர். காரை விட்டு வெளியேற முயன்ற … Read more

புலிகளுக்கு மத்தியில் உலாவும் கோல்டன் ரிட்ரீவர் நாய்.!

தாய் பாசம் என்பது அனைத்தையும் மிஞ்சக் கூடிய புனிதமானது என்பதை நாம் அறிவோம். அதை மெய்பிக்கும் வகையில் புலி கூட்டத்திற்கு மத்தியில் கோல்டன் ரிட்ரீவர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று எந்தவித அச்சமுமின்றி உலாவுகிறது. காரணம், இந்த புலிகள், குட்டிகளாக இருந்த போது அந்த நாயிடம் பால் குடித்து வளர்ந்தது தான். பாலூட்டி வளர்த்த அந்த நாயை அந்த புலிகள் தங்களது தாயாகவே கருதுகின்றன. தாய் பாசத்தில் மனிதர்களை விட விலங்குகள் ஒருபடி மேல் என்பது போல் … Read more

உலகப் புகழ்பெற்ற BTS பாப் இசைக்குழு உடைந்தது! – பின்புலம் என்ன?

சீயோல்: தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS பிடிஎஸ். உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இசையால் பல உள்ளங்களைக் கட்டிப்போட்டு இந்தக் குழு தனது பிரிவை அறிவித்துள்ளது. அந்தக் குழுவில் உள்ள 7 பேரும் இனி தனித்தனியாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்களால் தென் கொரிய பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர்களின் பிரிவு தென் கொரிய அரசையும், உலக பாப் இசை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிடிஎஸ் குழுவில் … Read more