புலிகளுக்கு மத்தியில் உலாவும் கோல்டன் ரிட்ரீவர் நாய்.!

தாய் பாசம் என்பது அனைத்தையும் மிஞ்சக் கூடிய புனிதமானது என்பதை நாம் அறிவோம். அதை மெய்பிக்கும் வகையில் புலி கூட்டத்திற்கு மத்தியில் கோல்டன் ரிட்ரீவர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று எந்தவித அச்சமுமின்றி உலாவுகிறது. காரணம், இந்த புலிகள், குட்டிகளாக இருந்த போது அந்த நாயிடம் பால் குடித்து வளர்ந்தது தான். பாலூட்டி வளர்த்த அந்த நாயை அந்த புலிகள் தங்களது தாயாகவே கருதுகின்றன. தாய் பாசத்தில் மனிதர்களை விட விலங்குகள் ஒருபடி மேல் என்பது போல் … Read more

உலகப் புகழ்பெற்ற BTS பாப் இசைக்குழு உடைந்தது! – பின்புலம் என்ன?

சீயோல்: தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS பிடிஎஸ். உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இசையால் பல உள்ளங்களைக் கட்டிப்போட்டு இந்தக் குழு தனது பிரிவை அறிவித்துள்ளது. அந்தக் குழுவில் உள்ள 7 பேரும் இனி தனித்தனியாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்களால் தென் கொரிய பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர்களின் பிரிவு தென் கொரிய அரசையும், உலக பாப் இசை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிடிஎஸ் குழுவில் … Read more

ஜூலையில் விண்ணில் பாய்கிறது ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கிய ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட்.!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட் ஜூலை மாதத்தில் பறக்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்களையும், சரக்குப் பொருட்களையும் விண்ணிற்கு கொண்டு செல்லக்கூடிய சுமார் 400 அடி உயரமுள்ள மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் சூப்பர் ஹெவி பூஸ்டர் மற்றும் ரேப்டார் சீரிஸ் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ராக்கெட்டை, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்ணில் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் மாதிரியின் இரண்டாவது ராக்கெட் … Read more

ராயல் கரீபியன் சொகுசு கப்பல்களுக்கு இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனர் எலான் மஸ்கிடம் கோரிக்கை!

ராயல் கரீபியன் சொகுசு கப்பல்களுக்கு இணைய சேவை வழங்குமாறு ஸ்டார்லிங்க் நிறுவனர் எலான் மஸ்கிடம் அந்நிறுவனம் கோரியுள்ளது. தங்கள் நிறுவன கப்பல்களுக்கு இணையதள சேவை வழங்குவது குறித்து அமெரிக்கத் தொலைத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் நிறுவனத்திடம் ராயல் கரீபியன் நிறுவனம் முறையிட்டுள்ளது. ஸ்டார்லிங்க் இணைய சேவை பெற விண்ணப்பிக்கும் முதல் நிறுவனம் ராயல் கரிபீயன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கப்பல்களில் பயணிக்கும்போதே இணையசேவையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

ஆஸ்திரேலியாவில் வீட்டில் இருந்தே துப்பாக்கி தயாரித்த 18 வயது இளைஞன் மீது வழக்கு.!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் வீட்டில் தயாரித்ததாகக் கூறப்படும் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றியதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பொம்மையை ஒத்திருந்தாலும், கடுமையான தீங்கு விளைவிக்கும் திறன் உள்ளது என்று புலனாய்வு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இந்த துப்பாக்கியை வீட்டிலேயே தயாரிக்க முடிந்தது என்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். Source link

நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென உருவான நீரூற்று.. பயணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!

இங்கிலாந்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தின் கேபினில் தண்ணீர் மளமளவென கொட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டன் நோக்கி விமானம் சென்ற நிலையில், எக்கனாமிக் கிளாஸ் பகுதி கேபினில் திடீரென தண்ணீர் நீரூற்று போல் கொட்டத் தொடங்கியது. குடிநீருக்கான வால்வ் உடைந்து தண்ணீர் கொட்டியதாகவும் எந்தவொரு அசம்பாவிதமின்றி வாஷிங்டனில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் பிரிட்டீஸ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. விமானத்தில் பொலபொலவென தண்ணீர் கொட்டும் வீடியோ … Read more

2 ஆண்டுகளுக்கு பின் இந்தியர்கள் மீதான விசா தடையை நீக்கியது சீனா..!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியர்கள் மீதான விசா தடையை சீனா நீக்கியது. இந்தியாவுக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் உள்ள பணிகளை தொடர 2 ஆண்டுகளுக்கு பின் இந்திய தொழில் வல்லுநர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு விசா வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சுற்றுலா மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக விசா வழங்கும் நடைமுறை தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வாரத்தின் நான்கு நாட்கள் மட்டும் அரசு ஊழியர்களுக்கு வேலை, மற்றும் வெளிநாட்டு வேலைக்காக இடம்பெயர  விரும்புவர்களுக்கு 5 ஆண்டுகள் ஊதியம் இல்லாத விடுப்பு வழங்கும் முன்மொழிவுகளுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வாரத்தில் பணி இல்லாத மூன்று நாட்கள் பொதுத்துறை அதிகாரிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. Source link

ரசாயன ஆலையில் தீ ஈரானில் 133 பேர் காயம்| Dinamalar

டெஹ்ரான்:ஈரானில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 133 பேர் படுகாயம் அடைந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் பிரோசாபாத் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் பணியில் இருந்தோர் அலறி அடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 133 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், மருத்துவ சிகிச்சைக்குப் பின், 114 பேர் வீடு … Read more

கிரீஸ் நாட்டில் தெளிவாக காணப்பட்ட ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்..!

கிரீஸ் நாட்டில் சந்திரகிரணத்தின் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெளிவாக காணப்பட்டது. பூமியின் அருகில் வரும் நிலவு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக காட்சி அளிக்கும். அமெரிக்காவில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை காலம் என்பதால் நிலவுக்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என பெயரிடப்பட்டுள்ளது. புராதான கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் ஸ்ட்ராபெரி மூன் பெரியதாக தென்பட்டது. ஸ்ட்ராபெரி மூன் வானோக்கி எழும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது. Source link