ரசாயன ஆலையில் தீ ஈரானில் 133 பேர் காயம்| Dinamalar

டெஹ்ரான்:ஈரானில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 133 பேர் படுகாயம் அடைந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் பிரோசாபாத் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் பணியில் இருந்தோர் அலறி அடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 133 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், மருத்துவ சிகிச்சைக்குப் பின், 114 பேர் வீடு … Read more

கிரீஸ் நாட்டில் தெளிவாக காணப்பட்ட ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்..!

கிரீஸ் நாட்டில் சந்திரகிரணத்தின் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெளிவாக காணப்பட்டது. பூமியின் அருகில் வரும் நிலவு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக காட்சி அளிக்கும். அமெரிக்காவில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை காலம் என்பதால் நிலவுக்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என பெயரிடப்பட்டுள்ளது. புராதான கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் ஸ்ட்ராபெரி மூன் பெரியதாக தென்பட்டது. ஸ்ட்ராபெரி மூன் வானோக்கி எழும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது. Source link

இந்தியர்களுக்கான, விசா தடை; விலக்கிக் கொண்டது சீனா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இரண்டு ஆண்டு, ‘விசா’ தடையை சீனா விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த 2019 டிசம்பரில், சீனாவில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. இதையடுத்து, அந்நாட்டில் பணியில் இருந்த இந்தியர்கள், குடும்பத்துடன் நாடு திரும்பினர். சிலர் குடும்பத்தினரை இந்தியா அனுப்பிவிட்டு தனியாக பணியை தொடர்ந்தனர். இதேபோல, மேல்படிப்புக்காக சீனா சென்ற மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களும் நாடு … Read more

“உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடுப்பூசி அவசியமில்லை” – கனடா அரசு

கனடாவில் உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது. விமானம் மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி தேவையில்லை என கனடா போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம் பயணங்களின் போது முக கவசம் அணியும் உத்தரவு தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை பத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து … Read more

ஈரானில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்!

தெற்கு ஈரானில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஃபார்ஸ் மாகாணத்தின் தெற்கு நகரமான ஃபிரூசாபாத் நகரில், செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனிய வாயு கசிவின் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

கல்லறையின் சாபம்: திறக்காதே எச்சரிக்கும் 1800 ஆண்டு பழைய கல்லறை

இஸ்ரேலின் பீட் ஷீஅரிமில் உள்ள பாரம்பரிய தொல்லியல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை ஒன்றில் திறக்காதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 65 ஆண்டுகளுக்கு பிறகு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லறை இதுவாகும். பயங்கர எச்சரிக்கையுடன் கூடிய கல்லறை என்பது திகில் திரைப்பட ரசிகர்களுக்கு புதிதல்ல. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல்லறையைக் கண்டுபிடித்ததால், திறக்காதே, நான் சபிக்கப்பட்ட கல்லறை என்ற சிவப்பு நிற எச்சரிக்கை கொஞ்சம் திகைப்பைத் தரும். இஸ்ரேலில் (Isreal) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் … Read more

'அமெரிக்கர்களின் வரவேற்பு அதிகம்' – சிகாகோவில் உள்ள இந்திய உணவகத்துக்கு விருது

சிகாகோ: அமெரிக்காவில் உள்ள இந்திய உணவகம் ஒன்று, சிறந்த உணவகத்துக்கான விருதை பெற்றுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ஆசிவில்லி பகுதியில் ‘சாய் பானி’ என்ற இந்திய தெருவோர உணவகம் ஒன்று உள்ளது. உணவகத்தின் பெயரே ‘டீ’ மற்றும் ‘தண்ணீர்’. இங்கு இந்திய இனிப்பு மற்றும் காரங்களும் குறைந்த விலைக்கு மிகத் தரமாக வழங்கப்படுகின்றன. சிகாகோவில் உள்ள ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை அமெரிக்காவில் உள்ள சிறந்த உணவங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. கரோனா பரவல் … Read more

பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம்பாக்., அழைத்து வர ராணுவம் உதவி| Dinamalar

இஸ்லாமாபாத்:துபாயில், பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால், அவரை விமானத்தில் அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்,78, ராணுவ நடவடிக்கை வாயிலாக, 1999ல் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அது முதல், 2008 வரை, பாக்., அதிபராக பதவி வகித்தார். இந்தியா – பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் … Read more

பொருளாதார நெருக்கடி தீரஇலங்கை அதிரடி திட்டம்| Dinamalar

கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் திட்டங்களுக்கு, அந்நாட்டு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல்நம் அண்டை நாடான இலங்கை அன்னிய செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இவற்றை சமாளித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. இது குறித்து, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: … Read more