தன்னை விட உருவத்தில் பெரிய பாம்பை விழுங்கிய ராஜநாகம்..

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ராஜநாகம் ஒன்று தன்னை விட உருவத்தில் பெரிய விஷப்பாம்பு ஒன்றை விழுங்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அளவில் பெரிய அந்த விஷப்பாம்பை ராஜநாகம் படிப்படியாக விழுங்கும் காட்சியை 80 வயது முதியவர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்த காட்சிகளை இணையதளங்களில் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். Source link

"அணு ஆயுத சோதனை; வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்" – அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பார்க் ஜின் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆண்டனி பிளிங்கன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி 7-வது அணு ஆயுத சோதனைக்கு வட கொரியா தயாராகி வருவதாக அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வட கொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொரிய தீபகற்பத்திலும், உலகிலும் அமைதியை நிலைநாட்டுவதே தங்கள் … Read more

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை

ஒரேகான்: ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ (how to murder your husband) என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியான நான்சி என்பவருக்கு, கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் நான்சி கிராம்ப்டனின் கணவர் டேனியல் புரோபி சமையல் கலை நிபுணராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நான்சியும், டேனியல் புரோபியும் நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளனர். கடன் பிரச்சினையிலும் சிக்கினர். இந்த நிலையில் கணவர் டேனியல் புரோபி பெயரில் … Read more

இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும்.. – நிதி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் வாங்க பாகிஸ்தான் அரசு … Read more

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ – 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸாடாஃப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் கடந்த வார இறுதியில் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. மேலும் பலத்த காற்று காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருகிறது. அங்கு நெருப்பு பரவி வரும் பகுதிகளில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரம் ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த தீ … Read more

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை

ஒரேகான்: ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ (how to murder your husband) என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியான நான்சி என்பவருக்கு, கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் நான்சி கிராம்ப்டனின் கணவர் டேனியல் புரோபி சமையல் கலை நிபுணராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நான்சியும், டேனியல் புரோபியும் நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளனர். கடன் பிரச்சினையிலும் சிக்கினர். இந்த நிலையில் கணவர் டேனியல் புரோபி பெயரில் … Read more

சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லக் கூடிய அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷ்ய ராணுவம்

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லக் கூடிய அனைத்து பாலங்களையும் ரஷ்ய ராணுவம் தகர்த்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹி ஹைடாய், பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டதால் சிவிரோடொனெட்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு பொருட்களை வழங்குவதும் அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதும் சாத்தியமற்றது என்று தெரிவித்தார். மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்ய எல்லையை ஒட்டியிருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர Severodonetsk … Read more

உக்ரைன்: குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட பின்னணியில் புகைப்படம் எடுத்த மாணவ மாணவிகள்

கீவ், உக்ரைனில் போரால் பொதுமக்கள் பலர் வீடுகளை, உறவினர்களை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மனவருத்தத்தில் ஆழ்ந்து உள்ளனர். மாணவர்களின் கல்வி, வருங்காலம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் ஒரு குழுவாக நின்று மாணவ மாணவியர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. உக்ரைனில் ஒரு சில மாணவ மாணவியர் குழுவாக சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொள்ள விரும்பியுள்ளனர். இதற்காக போரால் உருக்குலைந்து போயுள்ள உக்ரைனில் … Read more

உக்ரைனில் சேதமடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் படிப்பு முடித்த பள்ளி மாணவர்களின் போர் நினைவு ஆல்பம்..

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், குண்டுவீச்சில் உருக்குலைந்த கட்டிடத்திற்கு மத்தியில் இருந்து உக்ரைன் மாணவர்கள் தங்களது போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். போரின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த போட்டோக்கள் எடுத்துக்காட்டுகின்றன. உக்ரைன் போரின் நினைவாக எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய போட்டோக்களை நாளைய சந்ததியினரிடம் காண்பிக்கும் நோக்கத்துடன் இந்த போட்டோக்களை அங்கு படிப்பு முடித்த மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.  Source link

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு

லண்டன், கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்தில் … Read more