துணைத் தூதரகத்தில் அத்துமீறல்: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் – திரிபுராவில் நடந்தது என்ன?

டாக்கா: திரிபுராவின் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்தியத் தூதருக்கு வங்கதேச அரசு சம்மன் அளித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரனாய் வெர்மா, “வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை செயலர் ரியாஸ் ஹமிதுல்லாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரனாய் வெர்மா, இந்தியா – வங்கதேசம் இடையே பரந்த பன்முக உறவு உள்ளது. அதனை ஒரே ஒரு விஷயமாக சுருக்க முடியாது. மின் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி … Read more

'பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால்…' – ஹமாசுக்கு கெடு விதித்த டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. … Read more

குற்ற வழக்குகளில் இருந்து மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி பைடன்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். இவரது மகன் ஹண்டர் பைடன். இதனிடையே, ஹண்டர் பைடன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஹண்டர் பைடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கின் தண்டனை தொடர்பான விசாரணை வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சமாக 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதேவேளை, சட்டவிரோதமாக … Read more

வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு

டாக்கா: வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக … Read more

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே… இஸ்ரேல் மீது முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

பெய்ரூட், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா … Read more

இலங்கையில் கனமழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

கொழும்பு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக இலங்கையிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிழக்கு கடலோர மாகாண பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் 15 பேர் பலியாகி இருந்தனர். பலர் மாயமாகினர். இந்தநிலையில் இலங்கையில் கனமழைக்கு பலியாகி மாயமான 5 பேரின் … Read more

பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி…பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பீரங்கி குண்டு வெடித்ததில் 2 சகோதரகள் உள்பட 3 சிறுவர்கள் உயிரிழந்ந்தனர். இந்த சம்பவம் பன்னுவின் வாசிர் உட்பிரிவின் ஜானி கேல் பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மதப்பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது கைவிடப்பட்ட பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளனது. அதை அவர்கள் பொம்மை என்று நினைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் … Read more

“காசாவில் இருக்கும் பிணைக் கைதிகளை உடனே விடுவிக்காவிட்டால்…” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த … Read more

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார்

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ரஷ்யாவின் கஸான் நகரில், ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 16-வது மாநாடு நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். … Read more

ரூ.135 கோடி மின் நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும்: வங்கதேசத்துக்கு திரிபுரா அரசு எச்சரிக்கை

அகர்தலா: மின்சாரம் வாங்கியதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கதேசத்திடம் திரிபுரா மாநிலம் அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதுடன், கோயில்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்கான் கோயிலின் குரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கைதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், டாக்கா … Read more