காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து.. வானில் பல அடி உயரத்துக்கு எழுந்த கரும்புகை..!

மத்திய இங்கிலாந்தில் உள்ள காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பர்மிங்காமில் உள்ள ஸ்மர்ஃபிட் கப்பா காகித அட்டைத் தொழிற்சாலையில் ஞாயிறு நள்ளிரவில் திடீரென தீப்பற்றிய நிலையில், ஆலை முழுவதிலும் மளமளவென பரவி தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 8,000 … Read more

நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களில் திடீர் தீ விபத்து.. 40 கார்கள் தீயில் கருகி நாசம்..!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. குல்ஷன்-ஐ-இக்பால் பகுதியில் உள்ள அஜீஸ் பாட்டி பூங்காவிற்கு அருகே நூற்றுக்கும் அதிகமான பழைய இருசக்கர வாகனங்கள் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்களில் தீப்பிடித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 440 இருசக்கர வாகனங்கள், 40 கார்கள் மற்றும் பிற வாகனங்கள் தீயில் … Read more

ஈக்வடாரில் எரிபொருள் விலைக்கு எதிராக பழங்குடியினர் டயர்களை எரித்து போராட்டம்..!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈக்வடாரில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மாகாணங்களில் சுமார் 20 சாலைத் தடைகள் அமைத்து, எரிபொருள் விலை மற்றும் விவசாய பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். Source link

“ஹஜ் யாத்திரை வரும் பக்தர்கள் முக கவசம் அணிய அவசியமில்லை” – சவுதி அரசு அறிவிப்பு..!

ஹஜ் புனித யாத்திரை வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணியத் தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. உள்புற வழிபாடுகளின் போது முககவசம் அணிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பக்தர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசு அனுமதித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும் மெக்கா மற்றும் மெதினாவில் வழிபாடுகளின் போது மட்டும் முக கவசம் அணிய வேண்டும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. Source … Read more

போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து வெளியேற்றுகிறது குவைத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய் : முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்த சம்பவத்துக்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குவைத் உட்பட பல முஸ்லிம் … Read more

பர்கின பாசோவில் கிளர்ச்சி கும்பல் கண்மூடித்தன தாக்குதல்.. குழந்தைகள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் படுகொலை..!

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோவில் புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சி குழு நடத்திய கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டனர். நைஜர் நாட்டை ஒட்டியுள்ள எல்லையோர கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கிளர்ச்சி கும்பல் குழந்தைகள், பெண்கள் என பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதலில் 165 பேர் வரை கொல்லப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அல் கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளின் செயல் என … Read more

இலங்கை மின்வாரிய தலைவர் ராஜினாமா| Dinamalar

கொழும்பு : பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி சர்ச்சையை கிளப்பிய இலங்கை மின்வாரிய தலைவர் எம்.சி.பெர்டினான்டோ ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 10ல், இலங்கை பார்லி., குழு முன் ஆஜரான பெர்டினான்டோ, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்கும்படி பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நிர்பந்தித்ததாக கூறினார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த புகரை மறுத்த கோத்தபய ராஜபக்சே, ‘மின் திட்டங்களில் மோடியின் தலையீடு எதுவும் … Read more

அதானி காற்றாலை திட்ட விவகாரத்தில் இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினான்டோ ராஜினாமா

கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு நேரடியாக வழங்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்ற குழு, மின் வாரிய தலைவர் பெர்டினான்டோவை அழைத்து விசாரித்தது. ‘‘காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழுத்தம் தந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச என்னிடம் கூறினார்’’ … Read more

கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி கனமழை… சின்னாபின்னமான சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை.!

மெக்சிகோ நாட்டில் திடீரென பெய்த ஆலங்கட்டி கன மழையால் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சின்னாபின்னமானது. தென்மேற்கு மெக்சிகோ சிட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டின் 35 மீட்டர் வரையிலான தகரக் கூரைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு தரையின் கீழே ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. சுமார் 21 மில்லிமீட்டர் அளவுக்கு ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

சர்ச்சை கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை வெளியேற்றுகிறது குவைத்

குவைத்: நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைகருத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை குவைத் அரசு தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற உள்ளது. நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்கள் இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் நிர்வாகிகளின் கருத்துக்கு கத்தார், குவைத், ஈரான் … Read more