சர்ச்சை கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை வெளியேற்றுகிறது குவைத்

குவைத்: நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைகருத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை குவைத் அரசு தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற உள்ளது. நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்கள் இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் நிர்வாகிகளின் கருத்துக்கு கத்தார், குவைத், ஈரான் … Read more

செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து.. கப்பலுடன் மூழ்கிய 15,800 ஆடுகள்..!

சூடான் அருகே ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுவாகின் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரத்து 800 ஆடுகளை ஏற்றிக் கொண்டு, பத்ர்1 என்ற கப்பல் ஒன்று சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றது. கப்பலில் ஏற்றக்கூடிய எடைக்கும் அதிகமான அளவில் ஆடுகளை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கப்பல் கவிழ்ந்தது. அதில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான ஆடுகள் கப்பலோடு கடலில் மூழ்கி இறந்தன. Source … Read more

போராட்டத்தில் ஈடுபட்டோரை வெளியேற்றுகிறது குவைத் அரசு| Dinamalar

துபாய் : முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குவைத் உட்பட பல முஸ்லிம் நாடுகளும், தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளன. … Read more

சட்டவிரோதமாக வந்த 2 சீனர்கள் பிடிபட்டனர்| Dinamalar

சிதமர்ஹி : நம் அண்டை நாடான சீனாவை சேர்ந்த லு லாங், 28, யுவான் ஹெய்லாங், 34, இருவரும் பீஹார் மாநிலம் சிதமர்ஹியில் இருந்து நடந்தே நேபாள எல்லைக்குள் நுழைய முயன்றனர். அப்போது, பிடிபட்ட அவர்களிடம் பீஹார் போலீசார் விசாரித்தனர். சீன நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்த இருவரும் விசா இல்லாமல் நம் நாட்டுக்குள் நுழைந்து, தலைநகர் டில்லி அருகே நொய்டாவில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்துஉள்ளனர். பின், பீஹார் வழியாக நேபாள நாட்டுக்கு செல்ல முயன்ற போதுதான் பிடிபட்டனர்.முதற்கட்ட … Read more

நடிகை பற்றிய செய்திக்கு மன்னிப்பு கோரியது நாளிதழ்| Dinamalar

சிட்னி : நடிகையின் பாலியல் விருப்பம் குறித்து செய்தி வெளியிட்டதற்கு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த, ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ நாளிதழ், நடிகையிடம் மன்னிப்பு கோரியது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகை ரெபல் வில்சன், 42. இவர், ஆடை வடிவமைப்பாளர் ரமோனா அக்ருமா என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக, கடந்த 10ம் தேதி, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், புகைப்படத்துடன் தகவலை பகிர்ந்தார். இதற்கு அடுத்த நாள், ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ நாளிதழின் கிசுகிசு எழுத்தாளர் ஆன்ட்ரூ ஹார்னரி, கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில், … Read more

தனிமையில் 10 ஆயிரம் பேர்| Dinamalar

பீஜிங் : சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா மீண்டும் பரவி வருவதை அடுத்து, மதுபான விடுதியுடன் தொடர்புள்ள, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.நம் அண்டை நாடான சீனாவில், தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, இரு வாரங்களுக்கு முன் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதையடுத்து வழக்கம் போல அலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வாரம் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு பீஜிங்கில் உள்ள ‘ஹெவன் … Read more

இலங்கை மின் வாரிய தலைவர் ராஜினாமா| Dinamalar

கொழும்பு : பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி சர்ச்சையை கிளப்பிய இலங்கை மின் வாரிய தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 10ல், இலங்கை பார்லி., குழு முன் ஆஜரான பெர்டினாண்டோ, காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்கும்படி பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நிர்பந்தித்ததாக கூறினார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த புகாரை மறுத்த கோத்தபய ராஜபக்சே, ‘மின் திட்டங்களில் மோடியின் … Read more

மீன்பிடி மானியம் ரத்து; இந்திய மீனவர்கள் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெனீவா : மீனவர்களுக்கான மீன்பிடி மானியத்தை நிறுத்துவது, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என, எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், மீனவர்களுக்கான மீன்பிடி மானியத்தை அளித்து வருகின்றன. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி இந்த மானியத்தை நிறுத்த, 21 வளர்ந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இதற்கான கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஐ.நா., சபையில் நேற்று நடந்தது. இதையடுத்து, … Read more

பேன்களால் உயிரிழந்த சிறுமி; தாய் மீது கொலை வழக்கு| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில், சிறுமியின் தலையில் இருந்த பேன்கள் கடித்ததால், தொற்று மற்றும் ரத்த சோகை ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் வசித்த ஒரு சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாய் சான்ட்ரா தன் காதலருடன் வேறு வீட்டில் வசித்தார். பாட்டி எலிசபெத் தன் பேத்தியை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனாலும் அவர்கள் … Read more

உக்ரைனில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்… பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் -ரஷியா போரின் விளைவாக, உக்ரைன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக தானிய சந்தையில் முக்கிய பங்கு வகித்துவரும் உக்ரைனில், தற்போது ரஷியா நடத்திவரும் தாக்குதல்களால் உணவு தானியங்கள் அழிக்கப்பட்டு வுருகின்றன. ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில்,, உக்ரைனில் உள்ள உணவு தானிய கிடங்குகள் அழிக்கப்பட்டு வருவதால் தற்போது அறுவடை செய்யப்படும் தானியங்களையும் சேமிக்கவும் இடமில்லாத … Read more