விரைவில் வெளி வரவுள்ள Squid Game இரண்டாவது சீசன்.. டீசரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்..!

உலகளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஸ்க்விட் கேம் இணைய தொடரின் இரண்டாம் சீசன் வெளியாவதை உறுதி செய்யும் விதமாக, சிறிய அளவிலான டீசரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. ஸ்க்விட் கேமின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. Source link

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 18 மாதங்களாவது ஆகும் – ரணில்

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 18 மாதங்களாவது ஆகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியா அரசு பல வழிகளில் இலங்கை அரசுக்கு ஆதரவாக உள்ளதாகவும், சீனாவும் கடனுதவி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலைமையை சீராக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோருவதாகவும், நட்பு நாடுகளுடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறினார். இதனிடையே, இலங்கை அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதய நோயாளிகள், … Read more

உயர்தொழில் நுட்பத்துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டா போட்டி

உயர் தொழில் நுட்ப சாதனங்கள் உற்பத்தி சந்தையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. உயர் தொழில் நுட்பத்துறையில் அதிக அளவு முதலீடுகள் செய்த சீனா தற்போது உலகளாவிய சந்தையில் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. 1995 ல் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த சீனாவின் பங்கு 2018 ல் 21.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மாறாக 1995 ல் 24 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு 2018 ல் 22.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. … Read more

ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாகாணத்தின் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

ஆஸ்திரேலியாவின், தாஸ்மேனியா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தாஸ்மேனியா மலைப்பகுதியில் பனிப்புயலில் சிக்கித்தவித்த 8 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியை நோக்கி செல்லும் பனிப்புயல் கடல்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவது அவசியமானது – சவுமியா சுவாமிநாதன்

ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் கொரோனா தொற்று பரவலை சர்வதேச நாடுகள் சந்தித்து வருவதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவது அவசியமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எளிதாக நோய் தொற்று பரவக்கூடியவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். புதிய வகை தொற்று பரவல், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்தியாவில் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தலைமை … Read more

பேன் தொற்றால் சிறுமி உயிரிழப்பு: தாய், பாட்டி கைது!

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த 9 வயதான சிறுமி ஒருவருக்கு பிறப்பிலேயே ரத்த சோகை இருந்துள்ளது. இதனால் அச்சிறுமி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சிறுமிக்கு பேன் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறுமியை மருத்துவரிடம் அவரது தாயார் அழைத்து செல்லவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. தலை முழுக்க பேன் நிரம்பி வழிந்த காரணத்தால், அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் சிறுமிக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வாயை சுத்தம் செய்யும் மவுத்வாஷ் கொண்டு பேனை … Read more

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டில் பறப்பது உண்மையா.? தகவல்களை சேகரிக்கும் நாசா.!

வானில் தென்பட்ட அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு போன்ற மர்ம பொருட்கள் குறித்து கண்டறியவும், அதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்குமான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதிக ஆபத்துள்ள, அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல, வான்வெளி நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை நாசா தீவிரப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பறக்கும் தட்டு உள்ளிட்ட மர்ம பொருட்களின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளில் நாசா ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், ஏலியன்கள் போன்ற அடையாளம் தெரிந்த, ஆனால், அனுமானிக்க முடியாத மர்ம நடமாட்டங்கள் … Read more

நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் முடிவு ?

குவைத்சிட்டி, இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக அராப் டைம்ஸ் நாளிதழ் … Read more

'ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்' – எச்சரிக்கை வாசகத்தை சிகரெட்களில் அச்சடிக்கும் கனடா; உலகிலேயே முதல் முறை

ஒட்டாவா: சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்க கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது கனடா. இதன்மூலம் உலகிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள முதல் நாடாக திகழ்கிறது கனடா. உலக அளவில் சிகரெட் பிடிப்பதனால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை அந்தப் பொருட்களில் படங்களாக … Read more

நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம்: நாடு கடத்த குவைத் அரசு முடிவு!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் முடிவு செய்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக, இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், அரபு நாடுகளில் ஒன்றான குவைத்திலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக குவைத்தில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் … Read more