'ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்' – எச்சரிக்கை வாசகத்தை சிகரெட்களில் அச்சடிக்கும் கனடா; உலகிலேயே முதல் முறை

ஒட்டாவா: சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்க கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது கனடா. இதன்மூலம் உலகிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள முதல் நாடாக திகழ்கிறது கனடா. உலக அளவில் சிகரெட் பிடிப்பதனால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை அந்தப் பொருட்களில் படங்களாக … Read more

நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம்: நாடு கடத்த குவைத் அரசு முடிவு!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் முடிவு செய்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக, இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், அரபு நாடுகளில் ஒன்றான குவைத்திலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக குவைத்தில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் … Read more

இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் எலிப்படை.. ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர் முயற்சி

பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்து மீட்க எலிப்படை ஒன்றை அமைக்கும் பணியில்  ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் இறங்கியுள்ளார். இதற்காக 7 எலிகள் கொண்ட படை ஒன்றை அமைத்துள்ள அவர் அவற்றுக்கு தீவிர பயிற்சிகளையும் அளித்து வருகிறார். எலிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்தியேக ஆடையில் ஒலிப்பதிவு செய்யும் மைக்ரோ ஃபோனும், இடத்தை அடையாளம் காட்டும் லொகேஷன் டிராக்கர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்தால் பீப் ஒலி எழுப்பும் பயிற்சியும் அந்த … Read more

நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து உலக வரலாற்றில் 2-வது இடம் பிடித்து ராணி இரண்டாம் எலிசபெத் சாதனை!

லண்டன், இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக … Read more

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ திடீர் ராஜினாமா

கொழும்பு, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் … Read more

பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக்கூறிய இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா!

இலங்கை அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சி. பெர்னாண்டோ, அதானி குழுமத்துடனான எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய அறிக்கையால் இலங்கையிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து, இன்று எம்.எம்.சி. பெர்னாண்டோ ராஜினாமா செய்தார். இலவச சபையின் தலைவர் எம் எம் சி பெர்டினாண்டோ எனக்கு வழங்கிய ராஜினாமா கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டேன். “இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்” என … Read more

நூபுர் சர்மா விவகாரம்: போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து நாடு கடத்துகிறது குவைத்

துபாய்: நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக குவைத்தில் போராட்டம் செய்த வெளிநாட்டினரை அந்நாட்டு அரசு கைது செய்து நாடு கடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. பாஜக நிர்வாகியாக இருந்த நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தியப் பொருட்களை … Read more

"இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை" நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு – 27 ஆண்டுகால சேவை முடிவுக்கு வருகிறது

வாஷிங்டன், உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இதை தற்போது அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமானதில் இருந்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக அது இருந்தது. 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது. பின்னர் … Read more

ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவு..

ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததன் எதிரொலியாக, கிரிப்டோ சந்தையில் முன்னணியாக உள்ள பிட்காயினின் விலையானது இன்று 8 புள்ளி 9 சதவீதம் சரிந்து 25 ஆயிரம் டாலருக்கு கீழ் வர்த்தகமானது. இதே போன்று, அவலாஞ்சி காயின் (Avalanche) 15 சதவீதமும், எதிரியம் காயின் (Ethereum) 12 சதவீதமும் சரிவை கண்டுள்ளதால் சர்வதேச அளவில் … Read more

லாட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு… அமெரிக்க பெண்ணுக்கு 2 முறை கதவை தட்டிய அதிர்ஷ்டம்

வாஷிங்டன், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு முறையே கதவை தட்டும் என கூறுவது உண்டு. ஆனால், நம்மூரில் மட்டுமே இதுபோன்ற பழமொழிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் ஸ்பிரிங் வேலி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பெண் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி) உச்சபட்ச பரிசு தொகை கிடைத்திருக்கிறது. அந்த … Read more