நூபுர் சர்மா விவகாரம்: போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து நாடு கடத்துகிறது குவைத்

துபாய்: நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக குவைத்தில் போராட்டம் செய்த வெளிநாட்டினரை அந்நாட்டு அரசு கைது செய்து நாடு கடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. பாஜக நிர்வாகியாக இருந்த நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தியப் பொருட்களை … Read more

"இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை" நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு – 27 ஆண்டுகால சேவை முடிவுக்கு வருகிறது

வாஷிங்டன், உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இதை தற்போது அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமானதில் இருந்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக அது இருந்தது. 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது. பின்னர் … Read more

ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவு..

ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததன் எதிரொலியாக, கிரிப்டோ சந்தையில் முன்னணியாக உள்ள பிட்காயினின் விலையானது இன்று 8 புள்ளி 9 சதவீதம் சரிந்து 25 ஆயிரம் டாலருக்கு கீழ் வர்த்தகமானது. இதே போன்று, அவலாஞ்சி காயின் (Avalanche) 15 சதவீதமும், எதிரியம் காயின் (Ethereum) 12 சதவீதமும் சரிவை கண்டுள்ளதால் சர்வதேச அளவில் … Read more

லாட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு… அமெரிக்க பெண்ணுக்கு 2 முறை கதவை தட்டிய அதிர்ஷ்டம்

வாஷிங்டன், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு முறையே கதவை தட்டும் என கூறுவது உண்டு. ஆனால், நம்மூரில் மட்டுமே இதுபோன்ற பழமொழிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் ஸ்பிரிங் வேலி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பெண் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி) உச்சபட்ச பரிசு தொகை கிடைத்திருக்கிறது. அந்த … Read more

உக்ரைன் போர் தொடங்கிய 100 நாட்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் 9800 கோடி டாலர் வருவாய் ஈட்டிய ரஷ்யா..

உக்ரைன் போர் தொடங்கிய நூறு நாட்களில் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யா 9800 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்தைச் சேர்ந்த எரியாற்றல் மற்றும் தூய காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியில் 61 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகியன ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாகவும், ஏற்றுமதிப் பொருட்களின் விலை கடந்த … Read more

வடகொரியாவில் தொடர் பீரங்கி குண்டுகள் சத்தம்: தென்கொரியா சந்தேகம்

சியோல்: வடகொரியாவில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில நாட்களுக்கு முன் உறுதிமொழி எடுத்திருந்தார். இந்த நிலையில், வடகொரியாவின் எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தென் கொரியாவின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தரப்பில் கூறும்போது, “நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நிலையான ராணுவ வழிமுறைகளைப் பேணுகிறது. … Read more

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் கிடைக்காவிட்டால், ரஷ்யாவிடம் இருந்து வாங்குவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த எரிபொருட்களுக்காக பல கி.மீ. தூரத்துக்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போராட்டம்.!

துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அமெரிக்கா ஆலோசித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் சிகாகோ நகரில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், புளோரிடா ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  Source link

அமெரிக்கா | துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக மக்கள் பேரணி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிள் மக்கள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று திரளாக பேரணி சென்றனர். அமெரிக்காவின் உவேல்டா, டெக்சாஸ், நியூயார்க், பப்ஃபலோ ஆகிய பகுதிகளில் ஏற்படும் தொடர் வன்முறைகளை தடுக்க கடுமையான துப்பாக்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்ற கொலம்பியா மேயர் முரியல் பவுசர் பேசும்போது, “ பொறுத்தது போதும். நான் இன்று ஒரு மேயராகவும், தாயாகவும், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் சார்பாகவும் … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் மலேசியா.!

மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையால் உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாமாயில் உற்பத்திக்கான பனை அறுவடை, போதிய தொழிலாளர்கள் இல்லாததால், பெரியளவில் தேக்கநிலை காணப்படுகிறது. பொதுமுடக்கத்தால் வெளிநாட்டு ஊழியர்களை சேர்ப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகும் அனைத்து துறைகளிலும் 12 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link