வடகொரியாவில் தொடர் பீரங்கி குண்டுகள் சத்தம்: தென்கொரியா சந்தேகம்
சியோல்: வடகொரியாவில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில நாட்களுக்கு முன் உறுதிமொழி எடுத்திருந்தார். இந்த நிலையில், வடகொரியாவின் எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தென் கொரியாவின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தரப்பில் கூறும்போது, “நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நிலையான ராணுவ வழிமுறைகளைப் பேணுகிறது. … Read more