பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக கூறி இந்திய தேயிலையை திருப்பி அனுப்பியது ஈரான், தைவான்.!

குறிப்பிட்ட அளவை விட பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக இந்தியாவின் தேயிலையை ஈரான் மற்றும் தைவான் திருப்பி அனுப்பியது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சர்வதேச தேயிலை சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின. அதேநேரம் ஈரான் மற்றும் தைவான் நாடுகளின் நிராகரப்புகளே அதற்கு தடையாய் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா அனுப்பிய தேயிலை கண்டெய்னர்களில் தைவான் இரண்டு கண்டெய்னரையும், ஈரான் ஒன்றையும் திருப்பி அனுப்பியது. குறிப்பிட்ட அளவை விட Quinalphos ரசாயண மருந்து அதிகம் இருப்பதாக … Read more

சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – ரஷ்யா கண்டனம்!

சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள ரஷ்யா, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, டமாஸ்கஸுக்கு தெற்கே உள்ள பல இலக்குகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலால் விமான நிலைய கட்டிடம், ஓடுபாதைகள் உள்ளிட்டவைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் … Read more

சீன எல்லையில் பணியாற்றிய 2 ராணுவ வீரர்களை காணவில்லை

இடாநகர்: மிக நீண்ட காலமாக அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் அந்த மாநில எல்லையில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலின் தகலா எல்லைப் பகுதியில், ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படையைச் சேர்ந்த பிரகாஷ் சிங் ராணா, ஹரேந்திர நெகி ஆகிய 2 வீரர்களை கடந்த மே 28-ம் தேதி முதல் காணவில்லை. பிரகாஷ் சிங் ராணா உத்தராகண்டின் ருத்ரபிரயாக் நகரைச்சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி … Read more

சூரிய சக்தியில் இயங்கக் கூடிய சோலார் காரை தயாரித்துள்ள நெதர்லாந்து நிறுவனம்..!

மின்சார சார்ஜிங் இன்றி சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீட்டர் தூரம் இயங்கக் கூடிய சோலார் காரை நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற தொடக்க நிலை மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி உள்ளது. லைட் இயர் ஒன் மாடல் காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில் 5 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் கார் இயக்கத்திற்கு தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குகிறது. அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் தூரம் … Read more

நீண்ட கால அரசப் பணி பிரிட்டன் ராணி சாதனை| Dinamalar

லண்டன் : உலகிலேயே நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரசப் பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது, 96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனில் நீண்ட காலம் அரசப் பணியில் இருந்த சாதனையை, 2015ல் புரிந்தார்.இந்நிலையில், உலகிலேயே மிக நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் … Read more

இலங்கையில் காற்றாலை திட்டம் | அதானி குழுமம் தேர்வானதற்கு பொறியாளர்கள் சங்கம் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றலைத் திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாகவழங்க இலங்கை நாடாளு மன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. அதானிக்கு மின் உற்பத்தித் திட்டத்தை ஒதுக்கீடு செய்யவே சட்டத்தில் அவசரமாக திருத்தம் செய்வதாக இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையெடுத்தே மின் வாரியத் தலைவர் பெர்டினான்டோவை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசார ணைக்கு அழைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தவிசாரணையில் ‘எதன் அடிப்படையில் 500 மெகாவாட் திட்டத்துக்கு அதானி … Read more

பெட்ரோலுக்கு கோட்டா இலங்கையில் அமலாகிறது| Dinamalar

கொழும்பு : பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து, வாரத்துக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் இவற்றை விற்கும் நடைமுறையை அமல்படுத்த, நம் அண்டை நாடான இலங்கை முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இதனால் மின்சார உற் பத்தி நிறுத்தப்பட்டு, மின் வினியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.கடந்த பிப்ரவரியில் … Read more

எல்லையில் பதற்றம் ஏன்? சீன அமைச்சர் புலம்பல்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : ”லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு இந்தியாவே காரணம்,” என, சீன ராணுவ அமைச்சர் வீ பெங்கி கூறினார். தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில், நம் அண்டை நாடான சீனாவின் ராணுவ அமைச்சர் வீ பெங்கி பேசியதாவது:சீனாவை எதிர்ப்பதற்காக, ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்கா தலையீடு பன்முகத்தன்மை என்ற போர்வையில் தன் நலன்களை நிறைவேற்ற அமெரிக்கா துடிக்கிறது. எந்த … Read more

தங்களை எதிர்க்க ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சி – சீனா குற்றச்சாட்டு

தங்களை எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபெங்க், எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது என்றும் பன்முகத்தன்மை என்ற போர்வையில் பிற நாடுகளை அச்சுறுத்தக்கூடாது என்றும் கூறினார். தைவான் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், வெய் ஃபெங்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பெயரில் குழுவை … Read more

சுவரின் வழியாக துல்லியமாக பார்க்க உதவும் அதிநவீன கேமராக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள சுவர்கள் வழியாக பார்க்க உதவும் கேமராக்கள் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த கேமரோ-டெக் நிறுவனம் உருவாக்கிய Camero-Tech Xaver 1000 எனும் கேமராக்கள் அடுத்த தலைமுறைக்கான நவீன கையடக்க, உயர்-செயல்திறன் கொண்ட இமேஜிங் அமைப்பை உருவாக்கியுள்ளது. இராணுவப் படைகள், சட்ட அமலாக்கத் துறையினர், புலனாய்வு பிரிவுகள் போன்றவற்றுக்கான செயல்திறன் இதன் மூலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. Camero-Tech Xaver 1000 ஆனது 3D ‘சென்ஸ்-த்ரூ-தி-வால்’ திறனைக் கொண்டுள்ளது, இவற்றைக் கொண்டு 100 மீட்டர் … Read more