வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென்கொரியா அறிவிப்பு.!

வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   Source link

அரசு ஊழியர்கள் கார் வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் நாட்டில் அரசு அதிகாரிகள் கார் வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் … Read more

புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவுவதாக சீனா எச்சரிக்கை

புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவிவருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹெவன் சூப்பர்மார்க்கெட் என்ற பார் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. பெய்ஜிங் கில்  61 பேருக்குப் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஷாங்காயிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பெரிய அளவில் பரிசோதனைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தொற்றுப் பரவல் உலக அளவில் ஒப்பிடும் போது குறைவாகவே இருப்பினும் நோய்த்தொற்றை முற்றிலும் … Read more

மோசமான வானிலையால் தொலைந்து போன ஹெலிகாப்டர் மீட்பு.. 7 பேரின் சடலம் கண்டெடுப்பு

இத்தாலியில் மோசமான வானிலையால் மாயமான ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமையன்று துருக்கி தொழிலதிபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்ற போது மோசமான வானிலை காரணமாக ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகி காணாமல் போனது. ஹெலிகாப்டரைத்  தேடும் பணி நடைபெற்ற நிலையில், மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக இத்தாலி மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். Source link

உலகிற்கு அச்சுறுத்தலாக மாறும் வடகொரியா; கிம் ஜாங் உன்னின் முக்கிய முடிவு

உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் முடிவை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எடுத்துள்ளார். மூன்று நாள் கூட்டம் நடந்த கூட்டம் தொடர்பாக,  சனிக்கிழமையன்று அரசின் அதிகாரப்பூர்வ கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கிம் எடுத்துள்ள முடிவு உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.    வடகொரியா, மேலும் புதிய அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, கிம் ஜாங் உன் தலைமையில் நடத்த கூட்டத்தில் ஆயுத உற்பத்தியை இரட்டிப்பாக்குவது … Read more

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 492-க்கும் அதிமான குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் … Read more

ஐ.நா., தொழில்நுட்ப தூதராக அமன்தீப் சிங் கில் நியமனம்| Dinamalar

நியூயார்க் : ஐ.நா.,வின் மின்னணு தொழில்நுட்ப துாதராக, இந்தியாவின் மூத்த துாதரக அதிகாரியான அமன்தீப் சிங் கில் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் பல்கலை.,யின் மின்னணு தொழில்நுட்ப பட்டதாரியான அமன்தீப் சிங் கில், லண்டன் கிங்ஸ் கல்லுாரியில் அணுவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.ஐ.நா.,வின் சர்வதேச மின்னணு சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி கூட்டுறவு திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது உள்ளார். கடந்த, 1992 முதல் இந்திய துாதரகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அமன்தீப், ஈரான், இலங்கை … Read more

ஓவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கை வெளியிடும் முதல் நாடாகிறது கனடா

ஒவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் 2020 இல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. தனி நபர் சிகரெட்டுகள் மீது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக மாறவிருக்கும் கனடா தான், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றிய முதல் நாடு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  … Read more

உக்ரைனில் உணவுப் பற்றாக்குறையால் திண்டாடும் மக்கள்

உக்ரைன் லுகான்ஸ்க் சுற்றுவட்டாரத்தில் பசியால் வாடும் மக்கள், போலீசார் வழங்கிய உணவுப் பொட்டலங்களை வாங்க திரண்டனர். ரஷ்ய படையெடுப்பால் உருக்குலைந்த நகரங்களில் தொழில் உள்ள அன்றாட தேவைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சிதிலமடைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற திண்டாடி வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் உணவு சப்ளை செய்கினறனர். Lysychansk நகரில் போலீசார் தரும் உணவுப் பொட்டலங்களை பெற மக்கள் திரண்டனர். Source link

ராணுவ பலத்தை அதிகரித்துபோரை துாண்டி வரும் சீனா| Dinamalar

வாஷிங்டன் : இந்திய எல்லையோரங்களில், சீனா ராணுவ பலத்தை அதிகரித்து, இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு துாண்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் பேசியதாவது:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், சீனா, சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும், இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு சீனா துாண்டுகிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உரிமையை பாதுகாக்க … Read more