ஓவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கை வெளியிடும் முதல் நாடாகிறது கனடா

ஒவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் 2020 இல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. தனி நபர் சிகரெட்டுகள் மீது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக மாறவிருக்கும் கனடா தான், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றிய முதல் நாடு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  … Read more

உக்ரைனில் உணவுப் பற்றாக்குறையால் திண்டாடும் மக்கள்

உக்ரைன் லுகான்ஸ்க் சுற்றுவட்டாரத்தில் பசியால் வாடும் மக்கள், போலீசார் வழங்கிய உணவுப் பொட்டலங்களை வாங்க திரண்டனர். ரஷ்ய படையெடுப்பால் உருக்குலைந்த நகரங்களில் தொழில் உள்ள அன்றாட தேவைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சிதிலமடைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற திண்டாடி வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் உணவு சப்ளை செய்கினறனர். Lysychansk நகரில் போலீசார் தரும் உணவுப் பொட்டலங்களை பெற மக்கள் திரண்டனர். Source link

ராணுவ பலத்தை அதிகரித்துபோரை துாண்டி வரும் சீனா| Dinamalar

வாஷிங்டன் : இந்திய எல்லையோரங்களில், சீனா ராணுவ பலத்தை அதிகரித்து, இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு துாண்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் பேசியதாவது:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், சீனா, சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும், இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு சீனா துாண்டுகிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உரிமையை பாதுகாக்க … Read more

துருக்கி : மினிபஸ் மீது டிரக் மோதி பயங்கர விபத்து – 8 பேர் பலி

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பலிகேசிரில் டிரக் மீது மின்பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். துர்சன்பே மாவட்டத்தில் இருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினிபஸ், சிட்டி சென்டரில் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 10 பேர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். Source link

பீஜிங்கில் கொரோனா அரசு எச்சரிக்கை| Dinamalar

பீஜிங் : சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. நம் அண்டை நாடான சீனாவில் தலைநகர் பீஜிங்கில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து சீன அரசு செய்தி தொடர்பாளர் ஜூ ஹெஜியன் கூறியதாவது:பீஜிங்கில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில், 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றும்படி எச்சரிக்கை … Read more

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்தியா விலகல்

புதுடெல்லி: ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் அதிக யுரேனியத்தை வைத்திருப்பதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 30 நாடுகள் ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் தீர்மானத்தை இயற்றின. ஈரானை எதிர்த்து 30 நாடுகள் வாக்களித்தன. ஆனால் லிபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் … Read more

விரைவு ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து.. 2 பெட்டிகள் தீயில் கருகி சேதம்

வங்காளதேசத்தில் விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் எரிந்து சாம்பலாகின. சிலேட் நோக்கி சென்ற பராபத் விரைவு ரயில் என்ஜினில் திடீரென தீ பற்றியது. தீ மெல்ல பரவி பயணிகள் பெட்டிகளிலும் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலின் இரு பெட்டிகள் தீயில் கருகி சாம்பலாகின.  Source link

கொரோனா பாதிப்பிலும் இந்தியாவில் வலுவான வளர்ச்சி: அமெரிக்கா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-மூன்று முறை கொரோனா அலை அடித்த பின்னும், இந்திய பொருளாதாரம் மீண்டு வலுவான வளர்ச்சியை எட்டி யுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை, பொருளாதார நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்பிற்குப் பின், 2021ல் அமெரிக்க பொருளாதாரம் வலுவான மீட்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், அமெரிக்கா – இந்தியா இடையிலான பரஸ்பர சரக்கு மற்றும் சேவைகள் துறையின் உபரி வர்த்தகம், 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி … Read more

பொலிவியா மாஜி அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

லா பாஸ்-அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட தாக கூறி, பொலிவியா நாட்டின் முன்னாள் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு, 1௦ ஆண்டு சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ௨௦௧௯ நவம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு … Read more

முதியவர்களிடம் பண மோசடி செய்த இந்தியர் கைது| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்காவில் மூத்த குடிமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிக்கும், அனிருத்தா கல்கோட்டே என்ற இந்தியர் தன் நண்பர்களுடன் சேர்ந்து இணையம் வழியாக பல்வேறு சேவைகளை வழங்குவதாக கூறி, மூத்த குடிமக்களிடம் பண மோசடி செய்துள்ளார். கணினி பராமரிப்பு, பரிசுப் பொருட்களை அனுப்புவது உள்ளிட்ட சேவைகளுக்கு பணம் அனுப்பச் சொல்லி மூத்த குடிமக்களிடம் அனிருத்தா பணம் பறித்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஹூஸ்டன் … Read more