ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்தியா விலகல்

புதுடெல்லி: ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் அதிக யுரேனியத்தை வைத்திருப்பதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 30 நாடுகள் ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் தீர்மானத்தை இயற்றின. ஈரானை எதிர்த்து 30 நாடுகள் வாக்களித்தன. ஆனால் லிபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் … Read more

விரைவு ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து.. 2 பெட்டிகள் தீயில் கருகி சேதம்

வங்காளதேசத்தில் விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் எரிந்து சாம்பலாகின. சிலேட் நோக்கி சென்ற பராபத் விரைவு ரயில் என்ஜினில் திடீரென தீ பற்றியது. தீ மெல்ல பரவி பயணிகள் பெட்டிகளிலும் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலின் இரு பெட்டிகள் தீயில் கருகி சாம்பலாகின.  Source link

கொரோனா பாதிப்பிலும் இந்தியாவில் வலுவான வளர்ச்சி: அமெரிக்கா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-மூன்று முறை கொரோனா அலை அடித்த பின்னும், இந்திய பொருளாதாரம் மீண்டு வலுவான வளர்ச்சியை எட்டி யுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை, பொருளாதார நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்பிற்குப் பின், 2021ல் அமெரிக்க பொருளாதாரம் வலுவான மீட்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், அமெரிக்கா – இந்தியா இடையிலான பரஸ்பர சரக்கு மற்றும் சேவைகள் துறையின் உபரி வர்த்தகம், 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி … Read more

பொலிவியா மாஜி அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

லா பாஸ்-அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட தாக கூறி, பொலிவியா நாட்டின் முன்னாள் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு, 1௦ ஆண்டு சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ௨௦௧௯ நவம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு … Read more

முதியவர்களிடம் பண மோசடி செய்த இந்தியர் கைது| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்காவில் மூத்த குடிமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிக்கும், அனிருத்தா கல்கோட்டே என்ற இந்தியர் தன் நண்பர்களுடன் சேர்ந்து இணையம் வழியாக பல்வேறு சேவைகளை வழங்குவதாக கூறி, மூத்த குடிமக்களிடம் பண மோசடி செய்துள்ளார். கணினி பராமரிப்பு, பரிசுப் பொருட்களை அனுப்புவது உள்ளிட்ட சேவைகளுக்கு பணம் அனுப்பச் சொல்லி மூத்த குடிமக்களிடம் அனிருத்தா பணம் பறித்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஹூஸ்டன் … Read more

அமெரிக்க நகரங்களில் ஸ்ரீனிவாச கல்யாணம்| Dinamalar

திருப்பதி,-அமெரிக்காவின் எட்டு நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இம்மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.சான்பிரான்சிஸ்கோவில், ஜூன் 18ம் தேதியிலும்; சியாட்டிலில் 19; டல்லாசில் 25; செயின்ட் லுாயிசில் 26; சிகாகோவில் 30; நியூ ஆர்லியன்சில், ஜூலை 2-; வாஷிங்டனில் 3-; அட்லாண்டாவில், 9-லும் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிர மாக நடக்கின்றன. திருக்கல்யாண உற்சவத்தில் … Read more

பிரபல பாப் பாடகருக்கு முகத்தில் முடக்குவாதம்| Dinamalar

நியூயார்க்-பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபெர்,28, முகத்தின் ஒரு பகுதியில் முடக்குவாதம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஜஸ்டின் பீபெர், பிரபல பாப் இசைப்பாடகர். இவருக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில், கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை ஜஸ்டின் திடீரென ரத்து செய்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின், ஜஸ்டின் வெளியிட்ட ‘வீடியோ’ ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.ஜஸ்டின் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் … Read more

வேறொரு பெண்ணுடன் காதலன் இருந்ததால் ஆத்திரம்.. காரை ஏற்றி கதையை முடித்த காதலி..

அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டேக் கருவி மூலம் பின்தொடர்ந்து கண்காணித்த காதலி, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததை அடுத்து கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இண்டியானாபோலிசை சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து காதலன் செல்லும் இடங்களை அறிய ஏர்டேக் கருவியை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், … Read more

இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த சீனா -ரஷ்யா இடையேயான பாலம் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனா -ரஷ்யா நாடுகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர் என்ற நதி குறுக்கே சீன -ரஷ்யா நாடுகளிடையே பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் 2014-ல் கையெழுத்தானது. ரஷ்யாவின் பிலகோவேஷிசேன்ஸ்க் நகரையும், சீனாவின் வடக்கு மாகாணத்தில் ஹெய்ஹீ நகரயும் இணைக்கும் இப்பாலம் 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று கடந்த 2020 … Read more

பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட விண்கல்.. பூமிக்கு ஆபத்தில்லை என விஞ்ஞானிகள் தகவல்..!

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் பிரமாண்ட விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 270 அடி அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளது என்றும் தில்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தை விட இது அளவில் பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  பூமிக்கு அருகே நாளை நெருங்கி வந்தாலும் அது பூமியை தாக்கும் வாய்ப்புகள் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Source link