ஐ.நா., சபையில் ஹிந்திக்கு அங்கீகாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் :ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை பல மொழிகளில் வெளியிடும் இந்தியாவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இதில் ஹிந்தியும் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக, அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் உள்ளன. இதில், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச், பயன்பாட்டு மொழியாக உள்ளன. இந்நிலையில், ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், பல … Read more

அப்பாவி பொதுமக்கள் 17 பேரை சுட்டுக் கொன்ற வழக்கு.. குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள்..!

நாகலாந்தில் அப்பாவி பொதுமக்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி மோன் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்துவிட்டு திரும்பிய தொழிலாளர்களை, தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பாரா சிறப்பு படை வீரர்கள் 21 பேர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதே வீரர்களின் நோக்கமாக இருந்தது … Read more

கொரோனா முககவசங்களை தீயிட்டு எரிக்க அரசு முடிவு… காரணம் இதுதான்!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து, பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சில நாடுகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 38,600 கோடி ரூபாய் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என … Read more

தைவான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டால் போர் தொடுக்க தயக்கம் காட்டாது – சீனா எச்சரிக்கை

தைவான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டால், அந்நாட்டின் மீது போர் தொடுக்க சீனா தயக்கம் காட்டாது என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்கி  (Wei Fenghe) எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினுடனான சந்திப்பின் போது, தைவான் மீதான நடவடிக்கைகளை சீனா தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, தைவான், சீனாவின் ஒரு பகுதி என்றும், அதனை பிரிக்க முற்பட்டால் அதன் முடிவு போராக இருக்கும் என சீன … Read more

சீனா: அத்துமீறி நடந்து கொண்டவா்களை தட்டிக்கேட்ட பெண்கள் மீது சரமாாி தாக்குதல் – வீடியோ

பெய்ஜிங், சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒட்டல் ஒன்றில் 2 பெண்கள் உட்பட 3 போ் சாப்பிட்டு கொண்டிருந்தனா். அப்போது அங்கு ஒருவா் சாப்பிட்டு கொண்டிருந்த பெண் மீது கை வைத்து தவறாக நடக்க முயன்றான். இதனால் அவனை அந்த பெண் கீழே தள்ளி விடுகிறாா். இதனையடுத்து அங்கு வந்த அவனது நண்பா்கள் சோ்ந்து அந்த பெண்ணை சரமாாியாக தாக்குகின்றனா். இதனை தடுக்க சென்ற மற்றொரு பெண்ணையும் அவா்கள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடினா். தாக்குதலில் காயடைந்த … Read more

3 கொரோனா அலைகளை சந்தித்தபோதும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது – அமெரிக்க நிதி அமைச்சகம்

வாஷிங்டன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்தன. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஆனால், கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகளை கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் … Read more

மரண தண்டனையை ஒழித்த மலேசியா!

மரண தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றன. ஆனால், தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டால் அதன்பின்னர் கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு அச்சம் இல்லாமல் போய்விடும்; அதனால் குற்றங்கள் அதிகரித்து விடும் என தூக்கு தண்டனைக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும், தூக்கு தண்டனை அமலில் இருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் லட்சியமாக உள்ளது. உலகிலுள்ள 195 நாடுகளில் … Read more

'ரஷியா போருக்கு தயாராகுகிறது' அமெரிக்க உளவு தகவலை கேட்க ஜெலன்ஸ்கி விரும்பவில்லை – ஜோ பைடன்

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா 107-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் – ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி … Read more

தைவான் மீது போா் தொடுக்க தயங்கமாட்டோம் – சீனா

பெய்ஜிங், சிங்கப்பூரில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பில் தைவான் பிரச்சினையை பற்றி விவாதித்தனா். தைவான் நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தினாா். இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், தைவானை நாட்டின் ஒரு பகுதியாக கருதுவதாகவும், தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போா் … Read more

பிரபல பாப் இசை பாடகர் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு

நியூயார்க், பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு … Read more