உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?

மாஸ்கோ, நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா, ரஷியா போன்றவை ஆதரவாக செயல்படுகின்றன. தற்போது உக்ரைனுக்குள் நுழைந்து ரஷியா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷியா படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு … Read more

மொத்தமாக முடங்கும் அமெரிக்கா… அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்… திடீரென என்னாச்சு?

US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்: கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இருப்பினும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்ற ஆண்களுக்கு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணான கிசெல் பெலிகாட்டின் பிள்ளைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த போது உலக அளவில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிசெல் பெலிகாட், துணிவின் அடையாளமாக தற்போது … Read more

தைவானில் கட்டுமான பணியிடத்தில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிரிழப்பு

தைபே: தைவானின் மத்திய பகுதியில் உள்ளது தாய்சங் நகரில் பிரபல சூப்பர் மார்க்கெட்டின் உணவு பதப்படுத்தும் பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 5 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் இன்று தீப்பற்றியது. பின்னர் மளமளவென வேகமாக பரவி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். சிலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மறுபுறம் … Read more

ஆப்கானிஸ்தானில் நடந்த வெவ்வேறு நெடுஞ்சாலை விபத்துகளில் 50 பேர் பலி

காபுல், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல்-கந்தஹார் நெடுஞ்சாலையில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழந்தனர் மற்றும் 76 பேர் காயமடைந்துள்ளனர் என்று கஜினி மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஹபீஸ் உமர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நேற்று பிற்பகுதியில் காபுல்-கந்தஹார் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மற்றொரு சம்பவம் அதே நெடுஞ்சாலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரை இணைக்கும் பகுதியில் நடந்தது. இந்த இரண்டு … Read more

கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து.. 5 பாகிஸ்தானியர்கள் பலி.. 35 பேர் மாயம்

இஸ்லாமாபாத்: புலம்பெயர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு கிரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு படகு, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த நாட்டின் காவ்டோஸ் தீவின் அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. படகு ஒருபக்கமாக சாய்ந்து மூழ்கத் தொடங்கியதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பிக்க போராடினர். இதுபற்றி தகவல் அறிந்த கிரீஸ் நாட்டின் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 35 பேரைக் காணவில்லை. அவர்களை … Read more

எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷிய ராணுவம்

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் நாட்டின் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

ஆப்கனில் இரு வேறு சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழப்பு

காபூல்: தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் நேற்று கூறியதாவது: காபூல் – காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்தும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதுபோல் இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டன. இவ்விரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 50 பேர் … Read more

வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் டாக்டர் உள்பட 16 பேர் பலி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியாக, தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அல்-ஆலி அரப் மருத்துவமனையில் … Read more

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்: நாசா அப்டேட்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது. நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் … Read more