ஆய்வகங்களில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்க வேண்டும் – உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

ஆய்வகங்களில் உள்ள நோய்க்கிருமிகளை உடனடியாக அழிக்கும் படி உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 16ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. பல நாடுகள் போல், உக்ரைனிலும் கொரோனா போன்ற மனிதர்கள், விலங்குகளுக்கு பரவும் நோய்கள் தொடர்பாக, ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக, ஆய்வகங்களில் இருந்து நோயை … Read more

ரஷ்யா மீது வெறுப்பு பதிவுகளை போட ஃபேஸ்புக் அனுமதி எனத் தகவல்.!

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பு பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான எந்தவிதமான பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம் என கூறி அவற்றை அவ்வப்போது ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற நாட்டு தலைவர்களுக்கு எதிரான பதிவுகளுக்கு தற்காலிக … Read more

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஏவுகணை- வருத்தம் தெரிவித்தது இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பரிசோதனைக்காக ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த 9ம் தேதி அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் இருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாகவும், ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்று தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஏவுகணை விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் … Read more

உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விருப்பம் – புதின்

உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது டொனெட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பகுதிகளில் உள்ள கிளர்ச்சிப்படைகளுக்கு  உக்ரைன் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க தயாரிப்பு Javelin மற்றும் Stinger மிசைல் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் என்ற கோரிக்கையை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷொய்கு முன்வைத்தார். ஷொய்குவின் அந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிபர் புதின் கூறினார்.  அப்போது, மத்திய கிழக்கு … Read more

சீனாவிடமிருந்து ஜெ10சி ரக போர் விமானங்களை வாங்கியது பாக்.,| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு போட்டியாக சீனாவிடமிருந்து நான்காம் தலைமுறை ஜெ.10 சி ரக போர்விமானத்தை பாக். வாங்கியுள்ளது. நம் விமானப்படையை வலுப்படுத்த பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா, வாங்கியுள்ளது.இந்தியாவிற்கு போட்டியாக சீனாவிடமிருந்து நான்காம் தலைமுறை பாக். ஜெ10சி ரக 25 போர் விமானங்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லா காலசூழ்நிலைகளிலும் செயல்படும் திறன் கொண்டது இந்த போர் விமானம் எனவும், இந்தியா வாங்கியுள்ள ரபேல் ரக போர் விமானத்திற்கு ஈடு கொடுக்கும் என பாக். ராணுவம் தெரிவித்துள்ளது. … Read more

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை: தூதரகம் தகவல்

புதுடெல்லி: ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதுவும் காணப்படவில்லை என்றும், அதேவேளையில் அவர்கள் விரும்பினால் தாயகம் திரும்பலாம் என்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிகை என்ற பெயரில் போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் 16-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து சர்வதேச நாடுகள் பலவும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இது அங்கு … Read more

ரஷ்யாவில் வர்த்தகத் தடை அறிவிக்கும் நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்? வணிகம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு – புதின் 

பொருளாதார தடை என்ற பெயரில் ரஷ்யாவில் சேவைகளையும், வர்த்தகத்தையும் நிறுத்தும் சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை ரஷ்யாவுடன் வணிகம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வழங்க ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோல்ட் மேன் சாக்ஸ், ஜே.பி, மார்கன், வெஸ்டர்ன் யூனியன், மெக் டோனால்ட், பெப்சிகோ, அமேசான் உள்ளிட்ட 330-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளையும், வர்த்தகத்தையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் அவ்வாறு தடைகளை அறிவிக்கும் நிறுவனங்களின் சொத்துக்களை … Read more

இந்தியா மீது பாக்., குற்றச்சாட்டு| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவிலிருந்து அதிவேகமாக பறக்கும் சூப்பர் சோனிக் பொருள் ஒன்று விழுந்ததாக அந்நாட்டின் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறியுள்ளார். இது ஏவுகணையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா பகுதியில் இருந்து வந்த கடந்த 9ம் தேதி அதிவேகமாக பறக்கும் பொருள் ஒன்று நொறுங்கி விழுந்ததை பாகிஸ்தான் விமானப்படையில் வான் பாதுகாப்பு நடவடிக்கை மையம் கண்டுபிடித்தது. இந்த பொருளின் தன்மை பற்றி தெரியவில்லை. பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பலவந்தமாக கைது செய்த போலீசார்.!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த அந்நாட்டு காவல்துறையினர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பலவந்தமாக வெளியே இழுத்து வந்து கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை அரசு கட்டுப்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்க ஜாமியத் உலெமா-இ- இஸ்லாம் ஃபசல் என்ற கட்சி தன்னார்வலர்களை ஏற்பாடு செய்திருந்தது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த காவல்துறையினர், 4 எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தன்னார்லவர்கள் உள்ளிட்டோரை … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு புடின் அழைப்பு| Dinamalar

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் நடத்தி வரும் ரஷ்ய ராணுவத்துடன் சில போராளிகளை சேர்க்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி போரில் பங்கேற்க ஐ.எஸ்.ஐ.எஸ்., … Read more