தலைநகர் கீவ்வை நோக்கி நகர்ந்து வரும் ரஷ்ய பீரங்கிகளின் செயற்கைக் கோள் புகைப்படம்.!

உக்ரைன் தலைநகர் கீவ்க்கு வடகிழக்கே 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்திருந்த ரஷ்ய ராணுவ பீரங்கி வாகனங்கள் அங்கிருந்து பிரிந்து மேலும் வடக்கு நோக்கி வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளன. இதனை காண்பிக்கும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் கீவ் நகரில் இருந்து 10கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ள அண்டனோவ் விமான நிலையத்திற்கு அருகேயே அந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. அவற்றில் சில நவீன ரக பீரங்கி வாகனங்கள் தலைநகர் கீவில் இருந்து சுமார் 62 கிலோமீட்டர் … Read more

இந்தியாவின் நிதிநிலை நிர்வாகம் சிறப்பாக உள்ளது: ஐ.எம்.எப்., இயக்குனர்| Dinamalar

புது டில்லி: இந்தியா தனது நிதிநிலையை நிர்வகிப்பது சிறப்பாக உள்ளதாகவும், அதே சமயம் உலகளவில் எரிபொருட்கள் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார். ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கம் குறித்த ஊடக சந்திப்பில் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: இந்தியப் பொருளாதாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவது எரிபொருள் விலைகள் தான். இந்தியா எரிபொருளுக்கு இறக்குமதியை … Read more

Lockdown : மீண்டும் ஊரடங்கு..! புரட்டிப்போடும் கொரோனா மரணங்கள்!

கடந்த 2019-ம் ஆண்டின் கடைசியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளையே ஒரு ஆட்டம் காணச் செய்துவிட்டது. பல லட்சம் மக்களின் உயிரிகளை பறித்த இந்த கொலைகார கொரோனா மீண்டும் சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது. தற்போது வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பல ஆயிரம் பேர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க | பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களுக்கு … Read more

வடகொரியா ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: வடகொரியா கடந்த பல ஆண்டுகளாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வடகொரியா கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் சில பகுதிகளை சோதித்து பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், வடகொரியா 2 சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையாகும். எந்த ஏவுதலும் ஐ.சி.பி.எம் வரம்பு அல்லது … Read more

சீனாவில் இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா தொற்று அதிகரிப்பு 

பீஜிங்: வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆகையால், 90 லட்சம் பேர் கொண்ட அந்த மாகாணம் முழுமைக்கும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் முதன்முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கரோனா பரவி 3வது, 4வது அலை வரை ஏறபட்டுவிட்டன. கரோனா முதல் அலையின்போதே சீனா … Read more

உக்ரைனை புதினால் வெற்றி கொள்ள முடியாது என பைடன் கருத்து

உக்ரைன் ஒருபோதும் புதினுக்கு வெற்றியைத் தராது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் கொலம்பிய அதிபர் இவான் டுக் மார்க்வெஸ், பைடனைச் சந்தித்துப் பேசினார். அப்போது கொலம்பியாவை நேட்டோ அல்லாத முக்கிய கூட்டாளியாக பைடன் அறிவித்தார். இதனால் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் கொலம்பியா முன்னேறும் என்று குறிப்பிட்டார். மேலும் ரஷ்யாவைக் கண்டித்ததற்காக மார்க்வெஸ்ஸை அவர் பாராட்டினார். தொடர்ந்து கொலம்பியாவில் புலம் பெயர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 20 … Read more

ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரான் நாடு எண்ணெய் வளம் மிக்க நாடு. ஈரானில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க முறித்து கொண்டது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியாவது தடைபட்டது. எண்ணெய் வியாபாரம் தான் முக்கிய பொருளாதாராம் என்பதால் அதனை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருகிறது. இந்த நிலையில் ஈரான் நாட்டில் இருந்த … Read more

ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான கிருமிகளை அழிக்க உக்ரைனுக்கு WHO அறிவுறுத்தல்

உலக சுகாதார அமைப்பு உக்ரைனிடம், மக்கள் மத்தியில் நோயைப் பரப்பும் “எந்தவொரு சாத்தியமான கசிவுகளையும்” தடுக்க, நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ள  ஆபத்தான நோய்க்கிருமிகளை அழிக்குமாறு உக்ரைனுக்கு அறிவுறுத்தியது என்று  WHO அமைப்பு ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்குள் ரஷ்யாவின் துருப்புகள் முன்னேறி வருவது, அதன் நகரங்களில் மீதான குண்டுவீச்சு ஆகியவை மூலம் ஆய்வகங்களில் உள்ள நோயை உண்டாக்கும் ஆபத்தான கிருமிகள் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளன என்று உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். மற்ற பல நாடுகளைப் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கும் அதிரடி முடிவு?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு … Read more

உக்ரைனுக்கு 53 மில்லியன் டாலர் கூடுதல் மனிதாபிமான நிதி – கமலா ஹாரிஸ்

உக்ரைனுக்கு கூடுதலாக 53 மில்லியன் டாலர் மனிதாபிமான நிதி வழங்குவதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனம் மூலம் 53 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். ரஷ்ய படையெடுப்பால் ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் உணவு, குடிநீர், மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் உள்நாட்டிலே தவிப்பதாகவும், அவர்களுக்கு நேரடியாக உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கமலா ஹாரிஸ் தெரிவித்தார். போரால் பிளவுபட்டுள்ள … Read more