உக்ரைனில் இதுவரை 280 கல்வி நிலையங்களை ரஷ்யா முற்றிலுமாக அழித்துள்ளதாக தகவல்

உக்ரைனில் இதுவரை 280கல்வி நிலையங்களை ரஷ்யா ஏவுகணை மற்றும் வெடிகுண்டுகளை வீசி அழித்துள்ளதாக அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் Serhiy Shkarlet தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் ஏராளமான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இடிந்து போய் சேதமாகி விட்டதாகவும் கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா 2வது வாரமாக போர் நடத்தி வருகிறது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. Source link

உக்ரைன் கோரிக்கைகளை ரஷியா ஏற்க மறுப்பு- பேச்சு தோல்வி அடைந்ததால் கீவ் நகரில் தாக்குதல் தீவிரம்

கீவ்: உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் இன்று 16-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அதேபோல் அந்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் உள்ளது. ஆனால் தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. … Read more

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் சேதம்

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளை முன்னேற விடாமல் தடுக்க உக்ரைன் ராணுவம் அழித்த சாலை,  மேம்பாலம் உள்ளிட்ட நகர உள்கட்டமைப்புகள் மற்றும் ரஷ்யப் படைகளின் குண்டு மழையில் பல்வேறு பகுதிகளை உருக்குலைந்தன. ஏறத்தாழ 50 சதவீத பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும், போரை உடனடியாக நிறுத்தாவிட்டல் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீரழியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்தார். Source … Read more

அரை மணிக்கு ஒரு முறை ரஷ்யா குண்டு வீச்சு; மரியுபோல் நரகமாகிவிட்டது: மேயர் வேதனை

மரியுபோல்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 16வது நாளை எட்டியுள்ளது. துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியுள்ளதுபோல் தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். மரியுபோலை கிட்டத்தட்ட தனது முழுமையானக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்ய படைகள். சுமி நகரிலிருந்து 12,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், மரியுபோலில் இருந்து யாரும் வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்கப்படவில்லை. … Read more

ரஷ்யா, பெலாரசில் சேவையை நிறுத்த வெஸ்டர்ன் யூனியன் முடிவு

சர்வதேச பணப் பரிவர்த்தனை நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யா மற்றும் பெலாரசில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக பல்வேறு வகையான பங்குதாரர்களுடன் பேசி வருவதாகவும் வெஸ்டர்ன் யூனியன் … Read more

மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதல் இனப்படுகொலை – உக்ரைன் அதிபர்

மகப்பேறு மருத்துவமனை தாக்கப்பட்டது இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் விமர்சித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி டெலகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனைகளும், பள்ளிகளும் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியர்களின் இனப்படுகொலை நடக்கிறது என்பதற்கான இறுதி ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையின் மீது வான்வழி தாக்குதல் என்றும் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்நிலையில் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் 40 ஆயிரம் பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  … Read more

300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து விபத்து… 2 குழந்தை உள்பட 15 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் 300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். சன்குவசபா மாவட்டத்தில் இருந்து கிளம்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததில் 2 குழந்தைகள், உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக பேருந்து சென்றதே விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு … Read more

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இருந்து 15,000 பேர் வெளியேற்றம்

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் வெளியேறி உள்ளனர். சுமி பகுதியில் இருந்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் 54 பேருந்துகள் மற்றும் 2 ஆயிரத்து 664 தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஸியம் பகுதியிலிருந்து ஆயிரத்து 200 பேரும், புச்சா மற்றும் இர்பின் பகுதியில் இருந்து 2 ஆயிரம் பேரும் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. முக்கிய நகரமான மரியுபோலில் இருந்து யாரும் வெளியேறவில்லை என உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more

துருக்கியில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை – உக்ரைன் மந்திரி

துருக்கி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், துருக்கியில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ … Read more

உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது அமேசான்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.       ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.  இந்நிலையில், ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமேசான் … Read more