ஏமன் மக்கள் படும் வேதனையானது கற்பனை செய்ய முடியாதது: ஏஞ்சலினா ஜூலி

சனா: ஏமன் மக்கள் படும் வேதனை என்பது கற்பனை செய்ய முடியாதது என்று பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் மனிதாபிமான தூதருமான ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமானம் மற்றும் அகதிகளுக்கான சிறப்புத் தூதர் ஏஞ்சலினா மூன்று நாட்களாக ஏமன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் தனது ஏமன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”ஏமன் மக்கள் படும் வேதனை என்பது கற்பனை செய்ய முடியாதது. இந்த மோதலுக்கு உடனடி மற்றும் அமைதியான … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோவா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் ஜெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது ரஷ்யாவுக்கு நோக்கமல்ல என தெளிவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார். உக்ரைனின் கிழக்குப்பகுதியில் நேட்டோ அமைப்பு படைகளை குவித்தது, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருந்ததாகவும், அதனால் நேட்டோ அமைப்பு உடனான மோதல் போக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை … Read more

உக்ரைனில் ரஷ்யா உயிரி தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா உயிரி தாக்குதல்  நடத்தக்கூடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான தாக்குதல் 15ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரனை கைப்பற்றும் அடுத்த கட்ட முயற்சியாக, ரசாயன ஆயுதங்களை வைத்தோ அல்லது உயிரி தாக்குதலையோ ரஷ்யா முன்னெடுக்கக் கூடும் என அமெரிக்கா கூறியுள்ளது. அத்தோடு, அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனிலுள்ள ஆய்வகங்களில் உயிரி தாக்குதல் நடத்துவதற்கான கொடிய நோய்களை பரப்பும் கிருமிகள் ரகசியமாக உருவாக்கப்படுவதாக ரஷ்யா கூறுவதை முற்றாக மறுத்துள்ள … Read more

உக்ரைனில் ரஷ்யா உயிரி ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைனில் ரஷ்யா உயிரி ஆயுதங்களை (Biological Weapons) பயன்படுத்தும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைனும், அமெரிக்காவும் உயிரி ஆயுதத் திட்டங்களில் ஈடுபடுவதாக பொய்ப் பிரச்சாரத்தை ரஷ்யா வேண்டும்மென்றே பரப்புகிறது. உக்ரைனில் தாங்கள் நடத்தும் கொடுமையான செயல்பாடுகளை மறைக்க ரஷ்யா, இந்தப் பொய்யை பரப்புகிறது. உக்ரைனில் உயிரி அயுதங்களை ரஷ்யாதான் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதில் நாம் கவனமா இருக்க வேண்டும்” … Read more

வங்கி கொள்ளையன் என நினைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனரை கைது செய்த போலீசார்..!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் கூக்லரை (Ryan Coogler), வங்கி கொள்ளையன் என நினைத்து போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த காணொளி வெளியாகி உள்ளது. கருப்பினத்தவரான ரியான் கூக்லர், ஜனவரி மாதம், அட்லாண்டா நகரில் உள்ள அமெரிக்க வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கிருந்த பெண் காசாளரிடம் 12,000 டாலர் பணம் எடுப்பதற்கான படிவத்தை அளித்த கூக்லர், பணத்தை தனி இடத்தில் வைத்து எண்ண வேண்டும் எனப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளார். தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த … Read more

எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்..!!

எகிப்தின் லக்ஸர் நகரின் மேற்குக் கரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஒரு சவக் கிடங்கை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது  நகரத்தின் பெயர் ஏடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. அதன் பெயர் ஏடன். இந்த தொலைந்து போன நகரம் துட்டன் காமனின் (Tooten Khamen) கல்லறைக்குப் பிறகு மிகவும் முக்கியமான … Read more

ரஷ்ய, உக்ரைனிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று நேரடி சந்திப்பு

ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் இன்று நேருக்கு நேர் சந்தித்துப் பேச உள்ளனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை துருக்கியில் உள்ள அன்டாலியா நகரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர், ரஷ்ய மற்றும் உக்ரேன் இடையே நடக்கும் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும். இந்தப் பேச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்று என ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் வெளியுறவு … Read more

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்பு சேதமடைந்ததால் கதிர்வீச்சு அபாயம் – உக்ரைன் அரசு

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் செர்னோபில் அணு உலை பகுதியை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த நிலையில் செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் … Read more

ஐநா அணுசக்தி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு

ஆஸ்திரியாவில் நடந்த ஐநா அணுசக்தி மாநாட்டில் உக்ரைன் போரைப் பற்றி ரஷ்ய தூதர் தவறான தகவலைக் கூறியதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஒட்டு மொத்தமாக வெளிநடப்புச் செய்தனர். வியன்னாவில் நடந்த அணுசக்தி மாநாட்டில், உக்ரைனின் அணுசக்தி நிலையங்களை சுற்றி ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்தது. அப்போது ரஷ்யப் பிரதிநிதி உக்ரைன் போர் குறித்து தவறான தகவலைக் கூறியதால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மொத்தமாக வெளிநடப்புச் செய்தனர். இந்தக் கூட்டத்தில் உக்ரைன் அணுசக்தி … Read more

வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம்- உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷியா

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த  டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்செடிஸ் பென்ஸ், ஃபோர்ட், பி.எம்.டபில்யூ ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.  இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை … Read more