உக்ரைன் அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை- ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சொல்கிறார்

மாஸ்கோ: ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோபோவா கூறியதாவது:- உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ … Read more

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதில் பிரச்சினை – கமலா ஹாரிஸ் போலாந்து விரைவு

வார்சா, உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.  இதற்கிடையில், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு நாடுகள் வழங்கும் போர் விமானங்களுக்கு அதே அம்சங்களை கொண்ட புதிய போர் விமானத்தை அமெரிக்கா வழங்க முன்வந்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனுக்கு … Read more

உக்ரைனுக்கு உதவ போலந்து போர் விமானங்களை வழங்கியதற்கு ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைனுக்கு உதவ போலந்து போர் விமானங்களை வழங்கியதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து அந்நாட்டுக்கு உதவி செய்ய ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு அனைத்து MiG-29 போர் விமானங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக போலந்து கூறியிருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர், போலந்தின் இந்த முடிவு மிகவும் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.   Source link

துருக்கியின் முயற்சியால் போர் முடிவுக்கு வருமா?: ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷியா சில இடங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது. புதினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து … Read more

2வதும் பெண் குழந்தை; ஆத்திரத்தில் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப்.  இவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.  இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது.  ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை கொடூர தந்தை ஷாஜீப் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்றுள்ளார்.  இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  அந்த பெண் குழந்தையின் … Read more

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர்…2 மாதங்களுக்கு பின் மரணம்

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொறுத்த வேண்டிய நிலை இருந்த நிலையில், அவரது உடல் மாற்று உறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த முடிவு செய்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். டேவிட் பென்னட்டின் உயிரை காப்பாற்ற வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில், … Read more

உக்ரைன் விவகாரத்தை ராஜாங்க முறையில் கையாள்வது குறித்து ரஷ்ய அதிபர், ஜெர்மனி பிரதமர் ஆலோசனை

உக்ரைன் விவகாரத்தை ராஜாங்க முறையில் கையாள்வது குறித்து ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை மனிதநேய வழிகள் மூலம் வெளியேற்றியது தொடர்பாக புதின் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதின் மனிதாபிமான வழித்தடத்தில் மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தாக்குதல்கள் குறித்தும் ஜெர்மனி பிரதமரிடம் தெரிவித்ததாக … Read more

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 1,265 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.  இவற்றில், அமெரிக்கா அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.  அந்நாட்டில் 39,200 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.10 கோடியாக உயர்வு அடைந்து உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு 1,265 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பிரான்சில் 69,190 பேரும், இங்கிலாந்தில் 67,159 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனையடுத்து பிரேசிலில் 49,078 பேருக்கு … Read more

உக்ரைனுக்கு அவசர நிதியாக 140 கோடி அமெரிக்க டாலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

உக்ரைனுக்கு அவசர நிதியாக 140 கோடி அமெரிக்க டாலரை சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பொருளாதாரம், மக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியங்களிலும் உக்ரைன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உக்ரைனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள் நிதியுதவி உள்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு அவசரகால நிதியுதவி அளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது. கூட்டத்தில் உக்ரைனுக்கு 140 கோடி … Read more

பொருளாதார தடை விதிப்பதை தள்ளிப்போடுங்கள்- அமெரிக்காவுக்கு ரஷியா வேண்டுகோள்

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் மூலம் உலக சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும் எதிரொலிக்கும். எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று … Read more