ரஷ்யாவில் மூடப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்க முடிவு: அதிபர் புதினின் ஆளும் கட்சி எச்சரிக்கை

மாஸ்கோ: போர் காரணமாக ரஷ்யாவில் செயல்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களான டொயோட்டா, நைக் மற்றும் ஐகேஇஏ ஆகிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான விற்பனையகங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக இவை தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இது தொடர்பாக ஆளும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் அந்த்ரே துர்சாக் … Read more

உக்ரைனின் அணுசக்தி நிலைமை மோசமாக உள்ளதாகத் தகவல்

உக்ரைனின் அணுசக்தி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி, செர்னோபிலில் கதிர்வீச்சு கசிவுக்கான உடனடி ஆபத்து இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் அப்பகுதியில் மின் திறனை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட க்ரேஸி, தற்போது மிகவும் பலவீனமான சூழ்நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார். இதனிடையே ரஷ்ய, உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று துருக்கியில் சந்திக்கும் நிலையில் அவர்கள் … Read more

ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வார்னர் மீடியா

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.       மேலும், ரஷியாவில் தங்களது … Read more

பன்றி இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதங்களுக்கு பின் உயிரிழந்தார்| Dinamalar

பால்டிமோர்: பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார். அமெரிக்காவின் டேவிட் பென்னட் என்ற 57 வயது இதய நோயாளி மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது. மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. அதனால் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனை குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர். உயிர் பிழைப்பதற்கு இது ஒன்றே சாத்தியம் என்ற நிலையில், இந்த … Read more

கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா

உலகில் 60 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற COVID-19 தொற்றுநோய் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், கோவிட் நெருக்கடி தீர்ந்து விட்டது என்று நினைப்பது ஒரு “பெரிய தவறகி விடும்” என்று ஐ.நா தலைமைச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் புதன்கிழமை எச்சரித்தார். கோவிட்-19 தடுப்பூசி பெற கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நிலை கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார். தொற்றுநோய் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குட்டெரெஸ் வெலியிட்ட தனது … Read more

எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு ஜெர்மனி அவசர வேண்டுகோள்

கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு ஜெர்மனி அவசரமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஜெர்மனியின் பொருளாதாரத் துறை அமைச்சர் ராபர்ட் ஹாபெக், சந்தையில் நிவாரணத்தை உருவாக்குவதற்காக உற்பத்தியை அதிகரிக்க ஓபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகளை கேட்டுக் கொண்டார். இதனால் எண்ணெய் மீதான அழுத்தத்தைக் குறைக்க பெரும் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஹாபெக் கூறினார். ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விதித்துள்ள தடையால் தற்போது ஒரு பீப்பாய் … Read more

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் – அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனாலும், மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின என உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. … Read more

அர்ஜெண்டினாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து

அர்ஜென்டினாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 21 பேர் காயமடைந்தனர். நகரங்களுக்கு இடையே செல்லும் இந்த ரயில் அதிகாலை 6 மணியளவில் ஒலவாரியா பகுதியின் அருகே சென்றுக் கொண்டிருந்த போது தடம் புரண்டது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். லேசான காயங்களுடன் சுமார் 100 பயணிகள் உயிர்தப்பினர். Source link

தென் கொரியா அதிபர் தேர்தல் – நூலிழையில் வென்றது மக்கள் சக்தி கட்சி

சியோல்: தென் கொரியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.  காலை 6 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் … Read more