உக்ரைன் கைக்கு வந்த "அமெரிக்க ஏவுகணை".. 200 ரஷ்ய பீரங்கிகள் காலி.. உக்கிரமாகும் யுத்தம்!

கைகளால் ஏவி பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் அமெரிக்க ஏவுகணைகளை தற்போது உக்ரைன் படையினர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் ரஷ்யாவின் பீரங்கிப் படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஜாவலின் ஏவுகணைகள் உக்ரைன் படையினர் வசம் வந்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய பீரங்கிகளை தாக்கி அழிக்க ஆரம்பித்துள்ளனர் உக்ரைன் ராணுவத்தினர். மிகவும் எளிமையாக கையாளக் கூடிய அதி நவீன ஏவுகணைதான் இந்த ஜாவலின். அதாவது கையாலே இதை டார்கெட்டை நோக்கி ஏவித் தாக்க முடியும். எந்த … Read more

ஃபேஸ்புக்-கிற்கு தடை விதித்து ரஷ்ய அரசு உத்தரவு <!– ஃபேஸ்புக்-கிற்கு தடை விதித்து ரஷ்ய அரசு உத்தரவு –>

ரஷ்யாவில் ஃபேஸ்புக்கை முடக்குவதாக அந்நாட்டு அரசு தணிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய தணிக்கைத்துறை அதிகாரியான Roskomnadzor, ஃபேஸ்புக்கின் பதிவுகள் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக புகார்கள் வந்ததாகத் தெரிவித்தார். மேலும் பல அரசு ஊடகங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் வந்த தகவல்களை மேற்கோள் காட்டி இந்தக் கருத்தை அவர் குறிப்பிட்டார். முன்னதாக உக்ரைன் போர் தொடர்பாக முரணான கருத்துக்களைக் கூறுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. Source link

ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது

கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது. முதலில் செர்னோபில் அணுமின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷியா அறிவித்தது. கைவிடப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையம் ரஷியா வசம் சென்று விட்டதால் பேரழிவு ஏற்படலாம் என்று உக்ரைன் தெரிவித்தது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல்களை நடத்தியது. பின்னர் அந்த அணுமின் நிலையத்தை ரஷிய … Read more

மசூதியில் குண்டு வெடிப்பு 57 பேர் பலி; காயம் 200| Dinamalar

பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில், சிறப்புத் தொழுகையின் போது குண்டு வெடித்து 57 பேர் பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. வெள்ளிக் கிழமையான நேற்று மதியம் இங்கு சிறப்புத் தொழுகை நடந்தது. அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர், … Read more

பாகிஸ்தான்: மத வழிபாட்டு தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – ஐ.எஸ். பொறுப்பேற்பு

லாகூர், பாகிஸ்தானில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் நேற்று குண்டு வெடிப்பு நடைபெற்றது. அந்நாட்டின் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டு தளம் உள்ளது. அந்த மத வழிபாட்டு தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. அப்போது, அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான். மேலும், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்கச்செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 56 பேர் … Read more

ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறை: புதின் சட்டம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிபர் புதின் ஒப்புதலுடன் உடனடியாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று (மார்ச் 5) பத்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா பொதுமக்கள் உயிருக்கு குந்தகம் விளைவித்து போர்க் குற்றம் புரிந்துவருவதாக அந்நாட்டின் மீது உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மேலும், … Read more

உக்ரைன் அதிபர் குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றாரா? <!– உக்ரைன் அதிபர் குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் சென… –>

ரஷ்யப் படைகளின் முதல் விரோதி என்று குறிவைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தமது குடும்பத்தினருடன் போலந்து நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக வெளியான ரஷ்யாவின் ஊடகச் செய்திகளை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்திலும் சபாநாயகர் தமது உரையில், ஜெலன்ஸ்கி அண்டை நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாகக் கூறினார். ஆயினும் ஜெலன்ஸ்கி இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. Source link

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு இனி தாராள அனுமதி- தனிமைப்படுத்தல் இல்லை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அனைத்து இந்திய நகரங்களில் இருந்து செல்வோருக்கும் தாராள அனுமதி வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்தவும் அவசியம் இல்லை. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலும், கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன. இதனால் பல நாடுகளும் பயண தடைகளை நீக்கி வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இது 16-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள், எந்தவொரு நகரத்தில் இருந்தும் சிங்கப்பூருக்கு தாராளமாக செல்லலாம். அவர்கள் … Read more

மசூதியில் குண்டு வெடிப்பு; 57 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்| Dinamalar

பெஷாவர்-பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில், நேற்று சிறப்புத் தொழுகையின் போது குண்டு வெடித்து 57 பேர் பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. வெள்ளிக் கிழமையான நேற்று மதியம் இங்கு சிறப்புத் தொழுகை நடந்தது. அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 57 பேர் சம்பவ … Read more

பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் ரஷியாவில் தடை..!

மாஸ்கோ, உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் … Read more