உக்ரைனில் இந்திய மாணவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்படுவதாக அதிபர் புதின் குற்றச்சாட்டு <!– உக்ரைனில் இந்திய மாணவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்ப… –>

உக்ரைன் ராணுவம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்து அவர்களை வெளியேற விடாமல் தடுத்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். நேற்று தொலைக்காட்சி நேரலையில் பேசிய அவர், வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கு ரஷ்யா முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதியளித்தார். மனிதக் கேடயமாக இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வருவதாகவும் புதின் குற்றம் சாட்டினார். ஏற்கனவே இதே புகாரை தெரிவித்த புதினுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்த … Read more

போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புதினுடன் நேரடி பேச்சு மட்டுமே – அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

ரஷ்யாவுக்கு ஐ.நா., கண்டனம்: போரை நிறுத்த வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க் : கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., பொது சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, ‘ரஷ்யா எந்த நிபந்தனையும் இல்லாமல் போரை நிறுத்தி, தன் படைகளை திரும்பப் பெற வேண்டும்’ என, தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு, ரஷ்யா போரைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. அந்த தீர்மானத்துக்கான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது. … Read more

உக்ரைன் போர்: ரஷியா மீது சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை

தி ஹேக், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நேற்று ஒரு வாரத்தை எட்டியுள்ளது. முதலில் ராணுவ கட்டமைப்புகளை குறியாகக் கொண்டுதான் தாக்குதல் நடத்தப்படும் என ரஷியாவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போரில் இலக்கு வைக்கப்படுகிற தலைநகர் கீவ் தொடங்கி கிர்காவ் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் சரமாரியாக நடந்து வருகின்றன.  இது மனித உரிமையை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தடை செய்யப்பட்டுள்ள வெற்றிட குண்டுகளையும் (Vacuum … Read more

எங்களை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம்: உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய போரின் 7-வது நாளான நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்கி கூறும்போது, “ரஷ்ய படையெடுப்பின் முதல் 6 நாட்களில் கிட்டத்தட்ட 6,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம். என்றாலும் குண்டுவீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்கள் மூலம் எங்கள் நாட்டை ரஷ்யா கைப்பற்ற முடியாது” என்றார். உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “எங்கள் நாட்டுக்குள் படைகளை அனுப்ப ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் தயாராகி வருகிறது. இதற்கு எங்களிடம் … Read more

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது <!– உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் போராட்டத்தி… –>

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புடினுக்கு, போரை நிறுத்த அழுத்தம் தரும் வகையில் போராட்டத்தைத் தொடர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி வேண்டுகோள் விடுத்தார். போருக்கு எதிராக செயின்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ நகரங்களில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்டோரைத் தடுப்புக் காவலில் பிடித்து வைத்துள்ளதாகத் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.   Source link

அணு ஆயுத போரை மேற்கு நாடுகளே பரிசீலிக்கிறது- ரஷிய அமைச்சர் செர்ஜி குற்றச்சாட்டு

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். உக்ரைனுக்குள் நுழையும் ரஷிய வீரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றனர். உக்ரைனுக்குள் நுழைந்த ரஷிய வீரர்களில் இதுவரை 9000 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது … Read more

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இலங்கை நிலை மேலும் மோசம்| Dinamalar

கொழும்பு : ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் நிலை, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் மேலும் மோசமடைந்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் கொடுக்க முடியாமல், இலங்கை அரசு சுத்திகரிப்பு ஆலையை மூடியுள்ளது. பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியுள்ளதால், இறக்குமதியாகும் பெட்ரோல், டீசல் … Read more

2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க இரு நாடுகளும் ஒப்புதல்

மாஸ்கோ, உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் | உளவாளியுடன் மோதும் நகைச்சுவை நடிகர்!

மாஸ்கோ/கீவ்: கடந்த 7 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் முன்னேறுவதை உக்ரைன் ராணுவ வீரர்கள், உயிரை கொடுத்து தடுத்து வருகின்றனர். அரசியல், ராணுவ நடவடிக்கைகளில் அனுபவமிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி தீரத்துடன் எதிர்த்து வருகிறார். ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இருவர் மீதும் பதிந்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினை அறியாதவர்கள் யாரும் இருக்க … Read more