ஆண்களும் பெண்களுமாய்.. பெட்ரோல் குண்டுகளுடன்.. தயார் நிலையில் உக்ரைன் நகரம்!

உக்ரைனின் நிப்ரோ நகர மக்கள் ரஷ்ய படையினரை எதிர்கொள்ள வித்தியாசமான ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ளனராம். உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் கொஞ்சம் கூட குறையவில்லை. சிறு நகரங்களை படிப்படியாக பிடித்து வருகிறது ரஷ்ய ராணுவம். அதேசமயம், பெரிய நகரங்களையும் தற்போது பிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமான வர்த்தக , துறைமுக நகரமான கெர்சானை ரஷ்யப் படைகள் பிடித்து விட்டன. இந்த நிலையில் இன்னொரு முக்கிய தொழில் நகரான நிப்ரோ நகருக்கு ரஷ்யப் படைகள் குறி வைத்துள்ளன. … Read more

எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி ரஷ்யா பயிற்சி <!– எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி ரஷ்யா பயிற்சி –>

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. எதிரி நாடுகளின் விமானங்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த கருவிகளில் ஒன்றாக எஸ்400 விளங்குகிறது. ரஷ்யாவிடம் இருநது ஐந்து எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியாவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்யாவின் தெற்கில் அமைந்துள்ள நோவோசிபிர்ஸ்க் பகுதியில் எஸ் … Read more

உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்படும் சீனா?

பெய்ஜிங்: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா இன்று 8-வது நாளாக போர் செய்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ரஷியாவிற்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்துவிட்டன. மேலும் ரஷிய நாட்டு தயாரிப்புகள், சேவைகள் மீதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடையை அறிவித்துவிட்டன.  இந்நிலையில் சீனாவும், ரஷியாவும் இணைந்தே இந்த போரில் ஈடுபட்டு வருவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே தெரியும் … Read more

இந்தியா மீது தடையா? அமெரிக்கா பரிசீலனை!| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பதா அல்லது வேண்டாம் என்பது குறித்து ஜோ பைடன் நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க அரசின் உயர் அதிகாரி டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா உட்பட 35 நாடுகள் பங்கேற்கவில்லை. இதனையடுத்து அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் … Read more

உக்ரைன் போரின் கோர சாட்சி சொல்லும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

கீவ்: உக்ரைன் மீதான போர் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் படைபலம் குறித்த தகவல்களை அறிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உதவின. உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீ தொலைவில்தான் ரஷ்யப் படைகள் நிற்கின்றன என்று செயற்கைக்கோள் புகைப்படத்துடன் செய்தி வெளியான மறுநாளே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இந்நிலையில், ரஷ்யா தொடுத்த போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில… அங்கே அணிவகுத்து நிற்பது கீவ் நகர மக்கள்.. உணவுப் பொருட்களுக்காக நிற்கின்றனர் … Read more

அணு குண்டுகளை வீசி எங்களை அழிக்க "வெஸ்ட்" திட்டம்.. ரஷ்யா பரபரப்பு புகார்

ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன என்று ரஷ்யா பகிரங்கமாக புகார் கூறியுள்ளது. உக்ரைன் மீது படு உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. சிறிய நகரங்களைப் பிடித்த நிலையில் தற்போது கெர்சான் என்ற முக்கியமான பெருநகர் ஒன்றை ரஷ்யா கைப்பற்றி விட்டது. இது உக்ரைனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. கெர்சான் வீழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்து கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றையும் பிடிக்க ரஷ்யா தீவிரமாக … Read more

ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தியது "டொயோட்டா" நிறுவனம் <!– ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தியது &quot;டொயோட்டா&quot; நிறுவனம் –>

உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனம் ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. ரஷ்யா மீது உலக நாடுகளும், பெரு நிறுவனங்களும் பல்வேறு தடைகள் விதித்து வருகின்றன. இந்நிலையில், உலகின் முன்னனி கார் நிறுவனமான ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனம், ரஷ்யாவில் கார் உற்பத்தி செய்வதையும், ரஷ்யாவிற்கு கார்களை ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையில், ஆண்டுக்கு 80,000 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த … Read more

உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷியாவுக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு … Read more

3 டன் எடை, 9,300 கி.மீ வேகம்; வரும் விண்வெளி குப்பை என்ன செய்யும் ?

வாஷிங்டன்: விண்வெளியில் சுற்றி வரும் சுமார் 3 டன் எடையுடைய விண்வெளி குப்பை, நாளை (மார்ச் 4) நிலவில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 3 டன் குப்பை நிலவில் மோதுகிறது பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக, அங்கேயே சுற்றி வருகின்றன. இதில், சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவில் மோதும் என கடந்த ஜனவரி மாதமே நாசா … Read more

உக்ரைன் மீது ரஷ்யா போர்: இன்று 19 விமானங்களில் 3,726 இந்தியர்களை மீட்க நடவடிக்கை

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திர்களில் 3,726 பேரை இன்று ஒரே நாளில் மீட்க 19 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு … Read more