3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது- விளைவுகள் என்ன?

வாஷிங்டன்: பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன. இப்படி விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4-ந்தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது. … Read more

இதே நாளில் அன்று| Dinamalar

மார்ச் 3, 1847 அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாண்டில், 1847 மார்ச் 3ம் தேதி பிறந்தார். இவர் தந்தை, அலெக்சாண்டர் மெல்வில்லி பெல், கண், உதடு அசைவுகளை வைத்து, மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர். அதே திறனுடன் வளர்ந்த கிரகாம் பெல், 8 வயதிலேயே பியானோ வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். படிப்பில் ஆர்வம் இன்றி, ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் செலுத்தினார். காது கேளாதோருக்கு, … Read more

'நரக வாழ்க்கை' – கார்கிவில் கடும் தாக்குதல், குண்டு மழையில் கீவ்… – அண்டை நாடுகளில் 10 லட்சம் பேர் தஞ்சம்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நகரங்களைப் … Read more

அதிர வைக்கும் யுத்தம்.. ஒரே ஒரு பெண்.. இதுதான் புடினின் "போர்க் குழு"!

உக்ரைன் மீதான ரஷ்யப் போர் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், படபடப்பையும் கொடுத்துள்ளது. அதிபர் புடின் வைத்துள்ள “டீம்” குறித்த பேச்சுதான் இப்போது எங்கு பார்த்தாலும் தீவிரமடைந்துள்ளது. அந்தக் காலம் இப்போது கிடையாது. ஆள் பலம் படை பலத்தை வைத்து ஒரு நாட்டை முன்பெல்லாம் எளிதாக முடக்கி விட முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் போர் தொடுக்கவே யோசிக்கும் காலம் இது. மீறி போர் தொடுக்க வேண்டும் என்றால் முதலில் தமது தரப்பில் ஏற்படும் நஷ்டங்களை யோசித்துப் பார்த்து … Read more

உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் <!– உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் –>

கீவ் நகரம் மீது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகரில் பதற்றம் கார்கிவ், கெர்சனை தொடர்ந்து தலைநகர் கீவ்-ற்கு குறி.! உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல் என ரஷ்யா எச்சரிக்கை ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகர் உட்பட உக்ரைனில் பெரும் பதற்றம் கார்கிவ், கெர்சன் நகரங்களைத் தொடர்ந்து, கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்கிரம் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான … Read more

கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்- ஐ.நா. தகவல்

நியூயார்க்: உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் உக்ரைனில் கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியதில் இருந்து 7 நாட்களில் 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் கூறும் போது, ‘உக்ரைனில் இருந்து … Read more

“மின் வெட்டு வராது” – இலங்கை அதிபர் உறுதி

கொழும்பு: இலங்கையில் மின் வெட்டு வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி பற்றக்குறையால் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு மின்சாரம் தயாரிப்பதற்கான நிலக்கரி மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதியில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ஒரு சில மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் இலங்கையில் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மின்வெட்டு செய்ய … Read more

தெர்மோபேரிக், க்ளஸ்டர் குண்டுகள்: உக்ரைன் போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாககர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், எதிர் தரப்பிலிருந்து பின்வாங்கும் அறிகுறி தென்படாததால் இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்டத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக … Read more

"இந்தாங்க டீ சாப்பிடுங்க.. அம்மாட்ட பேசுங்க".. சரணடைந்த ரஷ்ய வீரர்.. அன்பைக் கொட்டிய உக்ரைன்!

ஆயுதத்தை கீழே போட்டு விட்டு சரணடைந்த ரஷ்ய வீரரிடம் உக்ரைன் மக்கள் அன்பையும், பண்பையும் காட்டிய செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதல் உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அனைவரிடத்திலும் கவலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன்பு செசன்யா, சிரியாவில் ரஷ்யா போரிட்ட போதிலும் கூட இதுபோன்ற எதிர்ப்புக் குரல்கள் அதிகம் கிளம்பியதில்லை. ஆனால் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவுக்கு எதிராக குரல்கள் வலுவாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் ரஷ்யா … Read more

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை கேடயமாகப் பயன்படுத்துகிறதா? ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு <!– உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை கேடயமாகப் பயன்படுத்துகிற… –>

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அமெரிக்கா மறுத்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல் என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் அரசும் ரஷ்யாவிடம் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாணவர்களை வெளியேற்ற பாதை விடும்படி வலியுறுத்தியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் மாணவர்களை ரஷ்யப் படைகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் பதிலுக்கு குற்றம் சாட்டியுள்ளது. Source link