உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவதற்கு சீனா வருத்தம்| Dinamalar

பீஜிங்:உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலியாவதற்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரனை மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், நேற்று ஏழாம் நாளாக தொடர்ந்தது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவது கவலையளிப்பதாக, சீன அமைச்சர் அவரிடம் தெரிவித்தார்.எனினும், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை விமர்சிக்காத சீன … Read more

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் – ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது … Read more

உக்ரைனின் கெர்சான் நகரையும் கைப்பற்றிவிட்டோம்: ரஷ்யா தகவல்

கீவ்: உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சான் நகரையும் ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் தெற்குப் பகுதியின் நகரான கெர்சான் இப்போது ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்துள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து கெர்சானில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், கெர்சானில் தொடர்ந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை … Read more

பழிக்குப்பழி: 6,000 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!

ரஷ்யாவைச் சேர்ந்த 6,000 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏழு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் … Read more

கீவ் நகரை கைபற்றுவதில் ரஷ்யாவுக்கு தொய்வு – அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி கருத்து <!– கீவ் நகரை கைபற்றுவதில் ரஷ்யாவுக்கு தொய்வு – அமெரிக்க மூத்… –>

உக்ரைனின் கீவ் நகரை கைபற்றுவதில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட தொய்வு, ராணுவ தளவாடங்களை கொண்டுச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல், உணவு, எரிபொருள் பற்றாக்குறை, வீரர்களிடையே மன உறுதி குறைந்தது உள்ளிட்டவை காரணமாக அமைந்திருக்கலாம் என அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். வடக்கு கீவ்-ன் புறநகர் பகுதியில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ராணுவ தளவாடங்களுடன் கீவை நோக்கி ரஷ்ய ராணுவம் நகர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், எதிர்பாராத சவால்களால் ரஷ்ய துருப்புகள் , போர் திட்டங்களை … Read more

கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் – ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா உறுதி

நியூயார்க்: ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப் பட்டது. இந்த தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணித்தன. முன்னதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி, திருமூர்த்தி, உக்ரைனின் கார்கீவ் உள்பட போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து எங்கள் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை கோருவதாக கூறினார். உக்ரைனின் அண்டை நாடுகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றுவதற்கு வசதியாக மூத்த … Read more

ரஷ்யா நடத்துவது போர் அல்ல சொல்கிறார் இந்திய வம்சாவளி| Dinamalar

மாஸ்கோ:”உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது போர் அல்ல; இந்திய அரசு நடத்திய, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ போன்றது தான்,” என, ரஷ்ய அதிபரின் கட்சியில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளோம் என்ற வார்த்தையை ரஷ்யா இதுவரை பயன்படுத்த வில்லை. அதை, ராணுவ நடவடிக்கை என்றே கூறிவருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் கட்சியில், பீஹாரை சேர்ந்த அபய்குமார் சிங் என்பவர் இடம் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்க ரஷ்யா … Read more

’ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கைப் பேரிடர்கள்’ – எச்சரிக்கும் ஐபிசிசி ரிப்போர்ட்

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 360 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஐபிசிசி, இனிவரும் காலத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேரிடர்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. இது குறித்து ஐ.பி.சி.சி எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையிலான குழு வெளியிட்ட ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ’கடுமையான மற்றும் தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகள் காரணமாக உலகம் முழுவதும் இயற்கைச் சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படத் தொடக்கியுள்ளன. > உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி … Read more

அது பொம்மை துப்பாக்கிங்க: உக்ரைன் அழகி உருக்கம்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா 7ஆவது நாளாக பல்முனைத் தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்-யை குறி வைத்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவமும் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 6000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என அழைப்பு விடுத்த அந்நாட்டு அதிபர், அவ்வாறு வருபவர்களுக்கு … Read more

உக்ரைனில் இருந்து 8,36,000 பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா அறிவிப்பு <!– உக்ரைனில் இருந்து 8,36,000 பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக… –>

ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 8,36,000 பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. தொடரும் போரால் உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுள் மகளிர் மற்றும் குழந்தைகளே அதிகளவில் அடைக்கலம் தேடி அண்டை நாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. Source link