போர்க்கள துளிகள்| Dinamalar

5.20 லட்சம் அகதிகள்ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, இதுவரை உக்ரைனை சேர்ந்த 5.20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர். இவர்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இல்லாத மால்டோவா நாடுகளின் எல்லையில் காத்திருக்கின்றனர். உக்ரைன் அதிபர் திட்டவட்டம்உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ‘வீடியோ’வில் பேசியதாவது:ரஷ்யா ஒரு பக்கம் எங்களுடன் பேச்சு நடத்திக் கொண்டே, இன்னொரு பக்கம், தாக்குதலை தீவிரப்படுத்தியது, எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதை காட்டுகிறது. ஆனால், நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.இவ்வாறு … Read more

அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்..!

நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்ற நிபந்தனையை மீறிய உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உக்கரமான போர் ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்குநாள் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையும், குண்டு மழைப் பொழிவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் பின்வாங்காமல் இருக்கும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  மேலும் படிக்க | அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான … Read more

ரஷ்ய தாக்குதலில் 2,000+ உயிரிழப்பு, ஒவ்வோர் மணிநேரமும் பதற்றம் – உக்ரைன் அரசு அதிர்ச்சித் தகவல்

கீவ்: ரஷ்ய தாக்குதலில் இந்த ஏழு நாட்களில் உக்ரைனில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் அவசர சேவை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐநா வெளியிட்ட எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக உக்ரைன் சொல்லும் எண்ணிக்கை உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இன்றோடு முழுமையாக ஒரு வாரமாகிவிட்டது. இதுவரை ராணுவ, விமானப்படை தளங்கள், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்கள் என்று தாக்கிவந்த ரஷ்யப் படைகள் தற்போது மகப்பேறு மருத்துவமனை வரை தனது … Read more

கெர்சான் என்னாச்சு?.. உக்ரைனுக்குப் பெரும் சிக்கல்.. ரஷ்யாவுக்கு இது முக்கியம்!

உக்ரைனின் கருங்கடல் பிரதேசத்தில் முக்கியமானது கெர்சான் நகரமாகும். இது ஒரு துறைமுக நகரம். இந்த நகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் அதை உக்ரைன் மறுத்துள்ளது. ஒரு வேளை கெர்சான் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்திருந்தால் அது உக்ரைனுக்கு மிகப் பெரிய கெட்ட செய்தியாகும். கெர்சான் நகரம் வீழ்ந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் கெர்சானைச் சுற்றிலும்தான் ரஷ்யப் படையினர் உள்ளதாக கெர்சான் ஆளுநர் கூறியுள்ளார். கெர்சானுக்குள் ரஷ்யப் படையினர் வந்ததாக அவர் கூறவில்லை. கெர்சான் நகர் … Read more

ஸ்விப்ட் அமைப்பில் இருந்து ரஷ்யாவின் 7 வங்கிகள் நீக்கம்.! <!– ஸ்விப்ட் அமைப்பில் இருந்து ரஷ்யாவின் 7 வங்கிகள் நீக்கம்.! –>

உலகளாவிய வங்கிகளிடைப் பணப் பரிமாற்றத்துக்கான தொலைத்தொடர்பு அமைப்பில் இருந்து ரஷ்யாவின் 7 வங்கிகளை ஐரோப்பிய ஒன்றியம் வெளியேற்றியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து அதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரஷ்யாவின் 7 வங்கிகளை ஸ்விப்ட் அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது. இதேபோல் ஜெர்மனியைச் சேர்ந்த சரக்குப் போக்குவரத்து அமைப்பான டிஎச்எல் ரஷ்யாவுக்கும் பெலாரசுக்கும் பொருட்களைக் கொண்டுசென்று வழங்குவதில்லை என அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரின் எதிரொலியாக லண்டன் உலோகச் … Read more

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை நிறுத்தக்கோரும் தீர்மானம் மீது ஐ.நா.சபையில் இன்று வாக்கெடுப்பு

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச் சபையின் இந்த அவசரக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா உடனே போரை நிறுத்த வேண்டும். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் ஐ.நா.வுக்கான … Read more

சிந்து நதி நீர் ஒப்பந்தம் : இந்தியா – பாக்., பேச்சு

இஸ்லாமாபாத்: சிந்து நநி நீர் ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சு, பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று துவங்கியது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரு நாட்டிலும், சிந்து நதி நீர் ஆணையம் … Read more

Never again… மவுனம் காக்காதீர்கள், வரலாறு மீண்டும் நிகழ்கிறது: ஜெலன்ஸ்கியின் அதிர்வுக்குரிய ட்வீட்

கீவ்: “Never again” – சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய யூத இன அழிப்புக்கு எதிரான சாட்சியாக விளங்கும் சொல் இது. இன்றும் ஜெர்மனியில் டசாவு முகாம் என பல இன அழிப்பு நினைவுச் சின்னங்களில் இந்த வார்த்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், “உலக நாடுகளே… 80 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட ’நெவர் அகெய்ன்’ என்று சொல்வதால் என்ன பயன்? உக்ரைனின் … Read more

"செசன்யா ஸ்டைல்" அட்டாக்.. புடின் போடும் புது பிளான்.. என்னாகப் போகுதோ உக்ரைன்!

போர் தொடங்கி 6 நாட்களாகியும் இன்னும் உக்ரைனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை ரஷ்யாவால். இதனால் அடுத்து மிகவும் அதிரடியான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது செசன்யாவிலும், சிரியாவிலும் கடைப்பிடித்த அதிரடி தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் தற்போது ரஷ்யா மெல்ல மெல்ல வேகம் கூட்ட ஆரம்பித்துள்ளது. இதுவரை பொதுமக்கள் தரப்பை அதிக அளவில் தீண்டாமல் இருந்த ரஷ்யா தற்போது … Read more

ரஷ்யாவில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை சிறையில் அடைத்த ரஷ்ய போலீசார்.! <!– ரஷ்யாவில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டத்தில் பங்… –>

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கும் பதாகைகளைத் ஏந்திப் பிடித்த ரஷ்ய பள்ளி குழந்தைகளை அந்நாட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். அதிபர் புடினை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உக்ரைன் தூதரகத்தில் மலர்களை வைக்க முயற்சித்த போது, போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் லாரியில் ஏற்றி சென்றனர்.       Source link