ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுக்க பாலம் தகர்ப்பு: ஆற்றை கடக்க முடியாமல் உக்ரைன் மக்கள் தவிப்பு <!– ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுக்க பாலம் தகர்ப்பு: ஆற்றை கடக… –>

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஆர்ப்பரித்து ஒடும் தண்ணீருக்கு மத்தியில் சேதமடைந்த பாலத்தை ஆபத்தான முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர். கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறுவதை தடுக்க இர்பின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை உக்ரைன் வீரர்கள் வெடி வைத்து தகர்த்தனர். உருக்குலைந்து காணப்படும் பாலத்தில் நடக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பாதி உடைந்து காணப்படும் பாலத்தின் கைபிடியை பிடித்தவாறு ஆற்று நீருக்கு நடுவே மெதுவாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்  நடந்து செல்கின்றனர்.  … Read more

ரஷிய படை தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலி

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 6-வது நாள் ஆகிறது. தொடர்ந்து குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்குதலில் ரஷிய படைகள் ஈடுபட்டு வருகின்றன. ரஷிய படை நடத்திய அதிரடி தாக்குதலில் 70 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் கீவ்வுக்கும்- கார்கிவ்வுக்கும் இடையே உள்ள ‘வொக்டியார்கா’ நகரில் உக்ரைன் ராணுவத் தளம் உள்ளது. இதன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளனர். … Read more

உக்ரைன் போர்… மிக சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டு வீசிய ரஷியா..!

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு … Read more

எந்த முன்னேற்றமும் இல்லாத ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை; உயிர் பலி 352 ஆக அதிகரிப்பு

கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் … Read more

ரஷ்யாவை சுளுக்கெடுக்க.. உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்.. யார் யார் என்ன தர்றாங்க.. ஃபுல் லிஸ்ட்!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இதனால் உக்ரைன் ராணுவம் கூடுதல் பலத்துடன், ரஷ்யப் படைகளுடன் மோதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவைப் பொறுத்தவரை சுயமாக உக்ரைனுடன் போரிட்டு வருகிறது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என அமெரிக்க ஆதரவு படையினர் மொத்தமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர அமெரிக்க ஆதரவு ஊடகங்கள், ஐ.நா. சபை என சகல தரப்பிலும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் ரஷ்யா … Read more

கீவ் நகரை நோக்கிய படையெடுப்பில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்கு தொய்வு – பிரிட்டனின் ராணுவ உளவு பிரிவு <!– கீவ் நகரை நோக்கிய படையெடுப்பில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ… –>

உக்ரைனின் கீவ் நகர் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் தொய்வை சந்தித்துள்ளதாக பிரிட்டனின் ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. ராணுவ தளவாடங்களை கீவ் நகரை நோக்கி எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி ரஷ்ய படையினரால் முன்னோக்கி நகர்ந்து செல்ல முடியாமல் போய் இருக்கலாம் என பிரிட்டன் ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பீரங்கிகள் மூலமும், ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி தாக்குதல் முறை மூலமாகவும் தாக்குலை தீவிரப்படுத்த ரஷ்யா … Read more

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் – விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.  இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்  நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்,  ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:  உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். … Read more

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர் தயார்| Dinamalar

லண்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல, 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பீரங்கிப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கி விட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் ஆப் லண்டன்’ பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :ரஷ்ய அதிபர் புடினின் நெருக்கமான நண்பர் யெவ்கெனி பிரிகோசின். இவர், ‘வாக்னர் குழுமம்’ என்ற பெயரில் தனி ராணுவத்தை நிர்வகித்து வருகிறார். இக்குழுமத்தைச் சேர்ந்த 2,000 … Read more

ரஷியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடா, உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷியா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷியாவின் மோசமான தாக்குதலை கண்டு பல்வேறு நாடுகள் பலவித பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்கக்கூடாது என தடை விதித்துள்ளன.  இந்த நிலையில், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய … Read more