பொதுமக்களை சுட்டுக் கொல்கிறதா ரஷ்யா ராணுவம்?.. பதற வைக்கும் புதுத் தகவல்!

இந்திய மாணவர் நவீன் எப்படி கொல்லப்பட்டார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் குண்டு வீச்சில் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. 2வது தகவல் உண்மையாக இருக்கும் என்றால், அப்பாவி பொதுமக்களை ரஷ்யப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கர்கீவ் நகரில் ரஷ்யப் படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஏவுகணை மூலம் தான் தாக்குதல் நடந்து … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர் விசா இல்லாமல் உக்ரைனுக்கு வரலாம் – அதிபர் செலன்ஸ்கி <!– ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டின… –>

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர் விசா இல்லாமல் உக்ரைனுக்கு வரலாம் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், எந்த நாட்டினரும் தங்கள் படையினருடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிடலாம் என செலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும், ராணுவத்துடன் இணைந்து போரிட விரும்புவோர் தங்களுக்கு ராணுவத்தில் அனுபவம் இருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தலைக்கவசம் மற்றும் உடற்கவசம் போன்றவற்றை சொந்தமாகவே … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார். இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் நிகி போரோ கூறும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இது வரலாற்று பூர்வ ஆவணம். இந்த ஆவணத்தில் பாராளுமன்ற சபாநாயகர் ஸ்டீபன்சுக்கு மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கும் மற்றும் பாதுகாப்புக்காகவும் உக்ரைன் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது’ என்றார். இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி … Read more

எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை:தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்படி எம்.பி.ஏ. – எம்.சி.ஏ. – எம்.எஸ்சி. ஆகிய முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.ஏ. படிப்பில் பொது மேலாண்மை தொழில்நுட்பம் சந்தைப்படுத்துதல் மனிதவளம் நிதி சேவை மருத்துவ சேவை சுற்றுலா மற்றும் இயக்க மேலாண்மை என எட்டு வகை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் … Read more

ரஷிய விமானப்படை தாக்குதல்! கார்கிவ் நகரில் பொதுமக்கள் 8 பேர் பலி!!

கீவ், ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் கீவ் நகரில்  உள்ள உளவுத்துறை அலுவலகங்களுக்கு அருகேயுள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.  இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமாக கருதப்படும் கார்கிவ் நகரில், ரஷிய விமான படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக இன்று அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் … Read more

உடனடியாக போர் நிறுத்தம்: ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்

ஜெனீவா: உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. அதன்படி ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய … Read more

நாயை விட்டு.. மெர்க்கலை "மிரட்டிய" புடின்.. பயங்கர சேட்டைக்கார ஆளு!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் எந்த அளவுக்கு குசும்புக்காரர் என்றார், ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலா மெர்க்கலை ஒரு முறை நாயை விட்டு “மிரட்டிய” சம்பவத்தை நினைவு கூறலாம். புடினுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்ப இஷ்டம். குதிரை சவாரி செய்வது, வேட்டை நாயுடன் விளையாடுவது, சிறுத்தையுடன் கொஞ்சிக் குலாவுவது என்று விதம் விதமாக அவரது பொழுது போக்குகள் இருக்கும். ஆனால் இதற்கு நேர் மாறானவர் ஏஞ்செலா மெர்க்கல் . அவருக்கு நாய் என்றாலே ஆகாது, அலர்ஜி. நாயைக் கண்டாலே … Read more

உக்ரைன் இந்தியர்களுடன் போலந்தில் இருந்து முதல் விமானம் டெல்லி புறப்பட்டது

வார்சா: ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் உள்ள எஞ்சியுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை அழைத்து வரும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, நான்கு மத்திய மந்திகளை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதர்களாக அனுப்பியுள்ளார்.  இதன்படி, மத்திய மந்திரி வி.கே.சிங் போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்த அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார். போலந்து … Read more

ஆத்தங்குடியில் மஞ்சு விரட்டு| Dinamalar

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள ஆத் : ங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஆத்தங்குடி அந்தரநாச்சியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 126 மாடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய 100 மாடுகள் தொழுவில் அவிழ்த்து விடப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டு மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. … Read more

உக்ரைன் கீவில் உள்ள டிவி கோபுரத்தின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷ்ய படைகள் குண்டு … Read more