உக்ரைனின் போர் சின்னமான செயின்ட் ஜாவ்லின்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

உக்ரைனின் சின்னமாக செயின்ட் ஜாவ்லின் போற்றப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள வேளையில் தற்போது செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜாவ்லின் எனப்படும் ஏவுகணையைச் செலுத்தும் கருவியுடன் ஒரு பெண் துறவி காணப்படுவதுதான் செயின்ட் ஜாவ்லின் புகைப்படமாகும். ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேளையில், செயின்ட் ஜாவ்லின்தான் உக்ரைனின் மீட்பராகப் போற்றப்படுகிறார். அதனால்தான் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. … Read more

போங்க.. போய் ரஷ்யாவுடன் சண்டை போடுங்க.. கைதிகளை திறந்து விட்ட உக்ரைன்!

ரஷ்யப் படையினருடன் சண்டையிட விரும்பும் கைதிகளை விடுதலை செய்து வருகிறது உக்ரைன் . ரஷ்யப் படையினரின் தாக்குதலை விதம் விதமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது உக்ரைன். அந்த நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆயுத உதவிகளைச் செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பலவீனப்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யப் படையினருக்கு எதிராக கைதிகளையும் போரில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளது உக்ரைன். ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கைதிகளை கையில் எடுத்துள்ளது உக்ரைன். அதன்படி … Read more

ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளை ஏற்க முடியாது – சீனா கண்டனம் <!– ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளை ஏற்க முடியாது – சீ… –>

ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகள் ஒருதலைபட்சமானது என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் சீனா … Read more

நாட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்தனர் – ரஷிய படைக்கு எதிராக போரிடும் உக்ரைன் மக்கள்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி உள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை … Read more

கீவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறலாம்: ரஷ்ய ராணுவம்| Dinamalar

கீவ்: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (பிப்.,28) நடைபெற உள்ள … Read more

உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக … Read more

நம்பிக்கை ஒளி | கீவ் நகரில் ஊரடங்கு விலக்கல்; சிறப்பு ரயில்கள் தயார்: இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அழைப்பு

கீவ்: வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்களை மீட்பதற்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கீவ் நகரில் வார இறுதியை முன்னிட்டு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல இந்திய மாணவர்கள் ரயில் நிலையங்களுக்கு வரவும். உக்ரைன் ரயில்வே இந்திய மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Weekend curfew lifted in Kyiv. … Read more

ரஷ்யாவுக்கு ஆதரவா.. இந்திய மாணவர்கள் மீது தாக்குல்.. உக்ரைன் ராணுவம் வெறிச்செயல்!

ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதால், இந்திய மாணவர்களை, எல்லையில் வைத்து தாக்கியுள்ளது உக்ரைன் ராணுவம். இந்திய மாணவர்களின் வருகைக்காக காத்திருக்கும் அவர்களது பெற்றோருக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உக்ரைன் ஒருபோதும் இந்தியாவுக்கு நட்பாக அது இருந்ததில்லை. அது அடிப்படையில் ஒரு ஆயுத வியாபாரி. உலகின் பல நாடுகளுக்கும் ஆயுதம் விற்கும் நாடு. அமெரிக்கா, ரஷ்யா போல உக்ரைனும் ஒரு ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நாடு. இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது அதை … Read more

ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் – அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் தகவல்.! <!– ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த… –>

ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சோவியத் யூனியனில் உறுப்பினராக இருந்த பெலாரஸ், உக்ரைன் – ரஷ்யா இடையேயான விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.  பெலாரஸ், போருக்கு முன் ரஷ்ய படைகள் தங்கள் நாட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலமும் கொடுத்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வகையில் பெலாரஸ் தனது படையை  களமிறங்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. … Read more

ரஷிய படையை எதிர்க்க துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உள்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் … Read more