உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்.! <!– உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்.! –>

உக்ரைனில் இருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது, ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுக்கு விமான தேதியை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு முன்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. Source link

ரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அரசு தகவல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு … Read more

உக்ரைனுக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய இணைப்பு: வழங்கிய எலான் மஸ்க்| Dinamalar

வாஷிங்டன்: உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் ஊடுருவலால் இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில். உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான்மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் மூலம் ஸ்டார்லிங் எனும் செயற்கைக்கோள் வழி இணைய இணைப்பை வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 24 அன்று ராணுவ நடவடிக்கை என்ற பெயரி உக்ரைனுக்குள் ஊடுருவியது ரஷ்ய படைகள். தற்போது தலைநகர் கீவ் வரை வந்து பல ராணுவ தளங்களை அழித்துள்ளனர். இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏவுகணை தாக்குதல்கள் … Read more

உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில்

உக்ரைனில் போர் தாக்குதலால் சிக்கிய மக்களுக்கு உதவுவதற்காக தனது கோயில் கதவுகளைஇஸ்கான் கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் திறந்துவிட்டுள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணைத்தலைவர் ராதாராமன் தாஸ் கூறியபோது, ‘‘உக்ரைனில் உள்ள பல்வேறு இஸ்கான் கோயில் வளாகங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் எந்த நேரத்திலும் கோயில் வளாகத்துக்குச் சென்று உதவியைப் பெறலாம். அங்கு உதவி செய்யபக்தர்களும், கோயில் ஊழியர்களும் காத்திருக்கின்றனர். மக்கள்சேவைக்காக கோயில் கதவுகள்எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கீவ் உள்ளிட்ட நகரங்களில் … Read more

உக்ரைனை தாக்க அலைஅலையாய் செல்லும் ரஷ்ய போர் துருப்புகள்.. செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.! <!– உக்ரைனை தாக்க அலைஅலையாய் செல்லும் ரஷ்ய போர் துருப்புகள்….. –>

உக்ரைன் மீது ரஷ்ய போர் துருப்புகள் அலைஅலையாக தாக்கும் வகையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து செல்லும் செயற்கை கோள் படம் வெளியாகி உள்ளது. Kyiv நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் டாங்கிகள் உள்ளிட்ட இந்த படைகளின் அணிவகுப்பு நீண்ட வரிசையுடன் காணப்படுவதாக இதனை வெளியிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வாகனங்கள் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டு காணப்படுவதாக செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் … Read more

ரஷிய ராணுவத்தை எதிர்க்க தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் – உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி

கீவ்,  ரஷியா-உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருந்தார்.  அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ரஷிய ராணுவத்தை … Read more

அணு ஆயுதப் போருக்கு தயாராகும் புடின்?| Dinamalar

மாஸ்கோ-உக்ரைனுக்கு எதிரான போர் குறித்து, பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அணு ஆயுதப் படைப் பிரிவை தயாராக இருக்கும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். பொருளாதார தடை ரஷ்யா மீதும், புடின் மீதும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.மேலும், ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஆலோசனைஇந்த கடும் விமர்சனங்கள் ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ … Read more

“ஆபரேஷன் கங்கா”: உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக விமானங்களின் பட்டியல்..!

புதுடெல்லி,  உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு ‘பல்முனை’ ஆபரேஷன் கங்காவைத் தொடங்கியுள்ளது. இந்த வெளியேற்ற செயல்முறை அரசாங்க செலவில் இருக்கும். உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான விருப்பங்களை நாங்கள் … Read more

'நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்' – உக்ரைன் அதிபர்

கீவ்: ‘நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்’ என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி. போர் முற்றியுள்ள சூழலில், ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், “உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 2-வது நாளாக தாக்குதல் நடக்கும் சூழலில் உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் தனித்து போராடிக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் எங்களுக்கு … Read more

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் <!– பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டு… –>

பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனை தாக்க பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், அதற்கு பதில் வேறொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பங்கேற்க தயார் என்றும் அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவுடன் உக்ரைன் அதிபர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பெலாரசின் கோமல் நகருக்கு … Read more